Godhumai Adai Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே.! தினமும் நம் பொதுநலம்.காம் பதிவில் பெண்கள் அனைவருக்கும் பயனுள்ள சமையல் குறிப்புகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய சமையல் பதிவில் சுவையான கோதுமை அடை தோசை செய்வது எப்படி.? என்று இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அனைவருக்குமே ஒரே வகையான தோசையை சாப்பிட்டு வெறுத்து போகியிருக்கும். தினமும் தோசை, கோதுமை தோசை போன்றவற்றையே தொடர்ந்து செய்து கொடுப்போம். இதனால் சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். எனவே கொஞ்சம் மாடலாக இந்த கோதுமை அடை தோசையை செய்து பாருங்கள்..! ஓகே வாருங்கள் கோதுமை அடை தோசை எப்படி செய்வது என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Recipe of Wheat Adai Dosa in Tamil:
கோதுமை அடை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு- 1 கப்
- ரவை- 2 ஸ்பூன்
- பச்சரிசி மாவு- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- பூண்டு- 4 பல்லு
- இஞ்சி- சிறிய துண்டு
- வர மிளகாய்- 4
- சீரகம்- 1 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- கடுகு- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1/2 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- கேரட்- 1
- தக்காளி- 1
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
அடை சாப்பிட்டு இருப்பீங்க..! ஆனா சோள அடை சாப்பிட்டு இருக்கீங்களா..! |
கோதுமை அடை தோசை செய்யும் முறை:
ஸ்டேப்: 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு கோதுமை மாவு எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் ரவை, பச்சரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளுங்கள். இதை தயார் செய்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
ஸ்டேப்: 3
இப்பொழுது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடலை பருப்பு போடுங்கள். இவை பொரிந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
உடல் எடையைக் குறைக்க வேண்டுமா..? அப்போ நவதானிய அடையை இப்படி செய்து சாப்பிடுங்கள்..! |
ஸ்டேப்: 4
இவை நன்றாக வதங்கியதும் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி விடுங்கள். இதை நாம் ஊறவைத்த கோதுமை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது கோதுமை ஆடை தோசை செய்ய மாவு ரெடி.!
ஸ்டேப்: 5
இப்பொழுது அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடானதும் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்த கோதுமை மாவை அடையாக வார்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 6
பிறகு இந்த அடை சிவந்ததும் அதனை திருப்பி போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி சிவற விட்டு எடுத்தால் சுவையான கோதுமை அடை தோசை ரெடி..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |