ருசியான சிவப்பரிசி அவல் உப்புமா செய்வது எப்படி…?

sigaparasi aval upuma in tamil

சிவப்பரிசி அவல் உப்புமா:

வணக்கம் நண்பர்களே..!. காலை, மாலை என இரண்டு வேளைகளில் அதிகமாக எல்லோருடைய வீட்டிலும் டிபன் தான் சாப்பிடுகிறோம். இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் இதுமாதிரியான  உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் சமைப்பவர்களுக்கும் அலுத்துபோகிறுக்கும் அப்படி ஒவ்வொரு வீட்டில் சமைக்கும் தாய்மாறுகளுக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும். ருசியான சிவப்பரிசி அவல் உப்புமா செய்வது எப்படி என்று தான் இன்று பார்க்கப்போகிறோம்.

இந்த உப்புமா செய்வதற்கு வெறும் 5 நிமிடம் மட்டும் இருந்தால் போதும். காலையில் வேளைக்கு செல்லுபவர்களுக்கு சிவப்பரிசி உப்புமா செய்வதற்கு நேரமும் குறைவு அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும். ஒரு தடவை சாப்பிட்டால் போதும்  சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும். பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த உப்புமா செய்வது எப்படி என்று தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இனி மீந்து போன இட்லிய வேஸ்ட் பண்ணாம இப்படி உப்புமா செஞ்சி பாருங்க..!

சிவப்பரிசி அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:

 • சிவப்பு அவல்- 1 கப் 
 • கடலை பருப்பு- 2 தேக்கரண்டி 
 • உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி 
 • கடுகு- 1 தேக்கரண்டி 
 • பச்சை மிளகாய்- 2
 • காய்ந்த மிளகாய்- 2
 • தேங்காய் துருவியது- 1 தேக்கரண்டி
 • முந்திரி- 5
 • எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி 
 • உப்பு- தேவையான அளவு 
 • எண்ணெய்- தேவையான அளவு
 •  கறிவேப்பிலை- 1 கொத்து
 • இஞ்சி- 1 சின்ன சின்னதாக நறுக்கிய துண்டு 

சிவப்பரிசி அவல் உப்புமா செய்முறை விளக்கம்:

ஸ்டேப் -1

அவல் உப்புமா செய்வதற்கு முதலில் தட்டையான சிகப்பு அவலினை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி தட்டை அவல் கிடைக்கவில்லை என்றால் தடினமான அவலாக இருந்தால் பரவாயில்லை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தடினமான அவலை சமைப்பதற்கு 1/2 மணி நேரம் முன்பே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அவல் உப்புமா சமைப்பதற்கு முன்பு அவலை தண்ணீரில் நன்றாக அலசி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -2

அதன் பிறகு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளிக்க தனியாக எடுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு அதே பாத்திரத்தில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக  எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -3

துருவிய தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி துண்டு, கறிவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிகொள்ளுங்கள். அதன் பிறகு உப்பு தேவையான அளவு சேர்த்து வடிகட்டி வைத்துள்ள சிகப்பு அவலை சேர்த்து கலந்து விடுங்கள்.

ஸ்டேப் -4

கடைசியாக உப்புமாவை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு அடுப்பை அனைத்து விடவும். சுவையான சிகப்பு அவல் உப்புமா தயார். உங்களுக்கு வேண்டுமானால் உப்புமாவில் கேரட், பீன்ஸ் சேர்த்து கிச்சடி போல் செய்துகொடுக்கலாம்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்