தவலை வடை செய்வது எப்படி? | Thavala Vadai Seivathu Eppadi Tamil

Advertisement

தவலை வடை செய்வது எப்படி | Thavalai Vadai Receipe in Tamil 

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வீட்டிலேயே எளிமையான முறையில் தவளை வடை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். பொதுவாக வடை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது உளுந்து வடை, பருப்பு வடை, மசால் வடை, ஓட்ட வடை தான் அது என்ன? தவளை வடை. அந்த தவளை வடை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

கீரை வடை செய்வது எப்படி

 

Thavala Vadai Seivathu Eppadi -தேவையான பொருட்கள்:

thavalai vadai receipe in tamil

  1. உளுத்தம் பருப்பு – 100 கிராம்
  2. பயத்தம்பருப்பு -100 கிராம்
  3. கடலை பருப்பு -100 கிராம்
  4. துவரம் பருப்பு -100 கிராம்
  5. பச்சரிசி -100 கிராம்
  6. கடலை எண்ணெய் – 30-40 ml
  7. கடுகு – 1 டீஸ்பூன்
  8. பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
  9. உப்பு – தேவையான அளவு
  10. தேங்காய் – 1 மூடி (துருவிய தேங்காய்)

How To Make Thavala Vadai in Tamil

Thavala Vadai Seivathu Eppadi – செய்முறை:

ஸ்டேப்: 1

  • முதலில் உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி இவற்றை சுத்தமாக கழுவி 5 பொருட்களையும் சேர்த்து ஒரு 4 மணி நேரம் நன்றாக தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இந்த பருப்புகள் ஊறும் பொழுதே 10 சிவப்பு மிளகாயையும் சேர்த்து தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
  • ஊறிய பிறகு இதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு கிரைண்டரில்  கொரகொரப்பாகவும் இல்லாமல் மற்றும் மைய அரைத்துக் கொள்ளாமலும் நடுத்தரமாக அரைத்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 2

  • பின் ஒரு வாணலியில் 30-40 ml கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு பொறிந்தவுடன் 1 மூடி துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக Roast செய்து கொள்ளவும்.
  •  Roast செய்தவுடன் 1 டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள் சேர்க்கவும். அனைத்தையும் சேர்த்து மிதமாக Roast செய்து கொள்ளவும். Roast செய்யும் போது Bubbles வர ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

ஸ்டேப்: 3

  • பின் அரைத்து வைத்த மாவில் தேங்காய், கடுகு, பெருங்காயம் சேர்த்து Roast செய்ததை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக Mix செய்து கொள்ள வேண்டும்.
பீட்ருட் வடை செய்முறை

 

ஸ்டேப்: 4

  • பிறகு கையில் வடை தட்டுவதாக இருந்தால் கையில் தண்ணீர் தடவி கொள்ளுங்கள் அல்லது வாழை இலையில் வடை தட்டுவதாக இருந்தால் அந்த இலையில் எண்ணெய் தடவி கொள்ளுங்கள்.

Thavala Vadai Seivathu Eppadi – ஸ்டேப்: 5

  • பிறகு கொஞ்சமாக மாவை எடுத்து வாழை இலையில் எண்ணெய் தடவி 2.5 Inch round shape-ல் தவளை வடையை தட்டி கொள்ளுங்கள்.
  • பிறகு ஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்ற வேண்டும் எண்ணெய் சூடான பிறகு Low Flame-ல் வைத்து 8-10 மினிட்ஸ் தவளை வடையை வேக வைத்து கொள்ளவும்.
  • அவ்ளோதாங்க இப்பொழுது ஒரு சூடான சுவையான தவளை வடை ரெசிபி ரெடி. ஈஸியா இதை வீட்ல எல்லாரும் செஞ்சி சாப்பிடுங்க. இந்த டிப்ஸ் எல்லாருக்கும் புடிக்கும். மறக்காம ட்ரை பண்ணி பாருங்க.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement