Rohit Sharma Net Worth in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக கிரிக்கெட் பிடிக்காத நபர்களே இருக்கவே மாட்டார்கள். அப்படி நாம் அனைவருக்கும் பிடித்த கிரிக்கெட்டை விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை அறிந்து கொள்வதில் நாம் அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். அதனால் இன்றைய பதிவில் இந்திய கிரிக்கெட் வீரரான ரோஹித் ஷர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து ரோஹித் ஷர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கிரிக்கெட் வீரர் தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு உங்களுக்கு தெரியுமா
ரோஹித் ஷர்மாவின் வரலாறு:
“ஹிட்மேன்” என்று செல்லப்பெயர் பெற்ற ரோஹித் ஷர்மா மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஏப்ரல் 30, 1987 இல் பிறந்தார். அவரது தந்தை போக்குவரத்து நிறுவனத்தில் பராமரிப்பாளராக பணிபுரிந்தார். ரோஹித் இளம் வயதிலேயே கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.
மேலும் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளராக இருந்த தினேஷ் லாட்டின் பயிற்சி பெற்றார். 2007 -இல் இந்தியாவுக்காக தனது முதல் முறையாக அறிமுகமானார். இவர் தனது அழகான ஹிட்டிங் ஸ்டைல் மற்றும் சிறந்த பீல்டிங் திறன்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரு இந்திய கிரிக்கெட் வீரராகினார்.
மேலும் இவர் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மற்றும் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். மேலும் இவர் மும்பை இந்தியன்ஸுடன் பல ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கூகுள் CEO சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு எவ்வளவு உங்களுக்கு தெரியுமா
ரோஹித் ஷர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு..?
ரோஹித் ஷர்மா உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான சதங்களை அடித்ததன் மூலம் இவர் சிறந்த பேட்டிங் திறன்களுக்காக நன்கு அதிக பாராட்டுகளை பெற்றுள்ளார்.
அதனால் இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த தடகள கௌரவ விருதான அர்ஜுனா விருது உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
இப்படி பல பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்ற ரோஹித் ஷர்மாவின் சொத்து மதிப்பு தோராயமாக $25 மில்லியன் ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 210 கோடி என்று கூறப்படுகிறது. இவருடைய சராசரி ஆண்டு சம்பளம் 16 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதே போல் இவரது மாத வருமானம் 1.2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |