கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Virat Kohli Net Worth in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். விராட் கோலி ஒரு கிரிக்கெட் வீரர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இவர் இந்திய அணியின் துடுப்பாட்டவீரர் என்று சொல்லப்படுகிறார். இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவராக இருந்தவர். இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் பாருங்கள் –> கிரிக்கெட் வீரர் தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

விராட் கோலி வாழ்க்கை வரலாறு: 

விராட் கோலி வாழ்க்கை வரலாறு

இவர் 1988 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி புது தில்லியில் பிரேம் கோலி மற்றும் சரோஜ் கோலி என்ற தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். இவருடைய தந்தை குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

விராட் கோலி பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு விகாஷ் என்னும் மூத்த சகோதரரும், பாவ்னா என்ற மூத்த சகோதரியும் இருக்கின்றனர். இவர் உத்தம்நகரில் உள்ள விசால் பாரதி என்னும் பொதுப் பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை பயின்றார். இவர் 9 வயதில் மேற்கு புதுதில்லி துடுப்பாட்ட அகாதமியில் முதன் முதலாக சேர்ந்து பயிற்சி பெற்றார்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இத்தாலியில் உள்ள புளோரன்சில் அனுஷ்கா சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இதையும் பாருங்கள் –> கூகுள் CEO சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு எவ்வளவு..? உங்களுக்கு தெரியுமா..?

விராட் கோலியின் சொத்து மதிப்பு எவ்வளவு..? 

இவர் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் வலது கை மிதவேக பந்து வீச்சாளர் என்று சொல்லப்படுகிறார். இவர் பத்மஸ்ரீ, சோபர்ஸ் விருது,  சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருது, விசுடன் விருது மற்றும் அர்ஜுனா விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் 6,000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.  இத்தனை சாதனைகளை படைத்த இவருடைய சொத்து மதிப்பு $127 மில்லியன் என்று சொல்லபடுகிறது. அதாவது, இந்திய மதிப்பிற்கு தோராயமாக 1010 கோடி என்று சொல்லப்படுகிறது. அதேபோல் இவர் வருடத்திற்கு 50 கோடி வரை சம்பாதிக்கிறார்.  

இவர் டெஸ்ட் போட்டிகளில் 15 லட்சம் வரை சம்பாதிக்கிறார். விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியில் தனது சேவையை ஆற்றியதற்காக ஒரு பெரிய தொகையை தனது சம்பளமாக பெறுகிறார். அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார். 

செரீனா வில்லியம்ஸ் சொத்து மதிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா..?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement