உலக அதிசயங்கள் | Ulaga Athisayangal

Ulaga Athisayangal

உலக அதிசயங்கள் பற்றிய தகவல் | Ulaga Athisayangal 7 Name in Tamil

உலக அதிசயங்கள் பற்றிய தகவல்: வணக்கம் நண்பர்களே உலக அதிசயமாக கருதப்படும் 7 அதிசயங்களை இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். ஏழு அதிசயங்களில் தாஜ் மஹால் முதல் இடத்தை பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வைத்திருக்கிறது. ஏழு அதிசயங்களில் ஒவ்வொரு அதிசயமும் தனி தனி நாடுகளில் அமைந்துள்ளது. நாம் அனைவரும் ஏழு அதிசயங்கள் பெயரினையும் அவை எந்தெந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். வாங்க அவற்றை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

உலகின் மர்மங்கள்

உலக அதிசயம் தாஜ்மஹால்:

உலக அதிசயம் தாஜ்மஹால்

ஷாஜகான் மறைந்த அவருடைய மனைவியின் நினைவாக கட்டப்பட்டது தான் தாஜ்மஹால். இன்றும் இந்தியாவின் முகலாய கட்டிடக்கலையின் மகுடமாக விளங்கி வருகிறது தாஜ்மஹால். இந்த தாஜ்மஹாலானது வெள்ளை சலவைக்கற்களை கொண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

ரோம் நகர ஆம்பிதியேட்டர்:

 Ulaga Athisayangal

உலக அதிசயங்கள் பற்றிய தகவல்: ரோம் நகரத்தை பெருமைப்படுத்தும் விதமாக ரோம் நகர மைய பகுதியில் இத்தாலி நாட்டில் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக பிரசித்தி பெற்ற ஆம்பிதியேட்டர் கட்டப்பட்டது. இதன் வடிவமைப்பு, காலத்தை கடந்து, 2000 ஆண்டுகளுக்கு பின்பும் வடிவமைக்கப்படும் நவீன விளையாட்டரங்க வடிவமைப்புக்கு அடிப்படையாக, அதனைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

மச்சு பிச்சு:

 மச்சு பிச்சு

மச்சு பிச்சு (பழைய மலை) என்று அழைக்கப்பட்ட மேகம் தவழும் மலை இது. இந்த மச்சு பிச்சு நகரமானது ஆண்டஸ் பீட பூமிக்கு மேலே பாதி வழியில், அமேசான் காடுகளுக்கு மத்தியில், உருபம்பா நதிக்கு மேல் அமைந்துள்ளது. 

கிறிஸ்து மீட்பர்:

கிறிஸ்து மீட்பர்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் கார்கோவடோ மலை மீது 38 மீட்டர் அளவிற்கு கிறிஸ்துவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் ஹைட்டர் டா சில்வா கோஸ்டா (Heitor da Silva Costa) என்பவரால் வடிவமைக்கப்பட்டு, பால் லாண்டோவ்ஸ்கி (Paul Landowski) என்ற பிரஞ்சு சிற்பியால் கிறிஸ்து சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை வடிவமைக்க 5 ஆண்டுகள் ஆனது. 12 அக்டோபர் 1931 அன்று சிலை திறக்கப்பட்டது. ரியோ-டி-ஜெனிரோ நகருக்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.

உலகின் மிக ஆபத்தான இடங்கள்

சிச்சென் இட்சா:

சிச்சென் இட்சா

சிச்சென் இட்ஷா என்பது பண்டைய மாயன் நாகரீகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கு மையமாக கட்டிய புகழ்மிக்க கோவில் நகரமாகும். சிச்சென் இட்ஸா மெக்ஸிகோவின் யுகடன் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் தளமாகும். இந்த பிரமிட், மாயன் நாகரீக கோவில்களில் மிகப் பெருமை வாய்ந்தது.

பெட்ரா பற்றிய தகவல்கள்:

பெட்ரா பற்றிய தகவல்கள்

அரேபியன் பாலை வனத்தின் ஓரத்தில், நார்பாட்டியன் சாம்ராஜ்ஜியத்தின் அரசர் நான்காம் அரிட்டாஸ்-ன் தலைநகராக பெட்ரா நகர் இருந்து வந்தது. பெட்ரா நகர் தெற்கு ஜோர்டானில் உள்ள ஒரு வரலாற்று மற்றும் தொல்பொருள் நகரத்தை சேர்ந்ததாகும். இது 1985 ஆண்டு முதல் யுனெஸ்கோ நாட்டின் உலக பாரம்பரிய தளமாக விளங்கியது. 42 மீட்டர் உயரமுள்ள எல்-டீர் மடத்தில் அமைந்துள்ள பெட்ரா அரண்மனையின் கல்லறைகள் ஹெலினியக் கோவிலின் முன்புறம் ஆகியவை மத்தியக் கிழக்கு நாகரீகத்தின் அடையாளமாக இன்றும் திகழ்கிறது. கிரீக்-ரோமன் மாதிரிகள் அடிப்படையில் அமைந்தஇந்த அரங்கத்தில் சுமார் 4000 பார்வையாளர்கள் அமரக்கூடியதாக இருந்து வந்துள்ளது. 

சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயம்:

சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயம்

மனிதனால் கட்டப்பட்ட அமைப்புகளிலேயே மிகப்பெரிய சுவர் சீனப் பெருஞ்சுவர். இந்த சுவர், விண்வெளியிலிருந்து பார்க்கக்கூடிய ஒரே அமைப்பு என்றும் கூறப்படுகிறது. இந்த சாதனைச் சுவரை எழுப்புவதில், பலர் தங்களுடைய உயிரையும் தந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil