கலை என்றால் என்ன தெரியுமா.?

Advertisement

கலை 

வணக்கம் நண்பர்களே இன்று நம்  பொதுநலம். காம் பதிவில் கலை  என்றால் என்வென்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். கலையானது தமிழ் மொழிகளில்  வரலாறுகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகும். கலை  என்ற வார்த்தை தோன்றியதற்கு சான்றுகள் இல்லையென்றாலும், கலை சார்ந்த ஆக்கங்களை கொண்ட கலை இனங்கள் அதிகமாக காணப்படுகின்றன. மேலும் கலை பற்றிய தகவல்களை நம் பதிவில் படித்து அறியலாம் வாங்க.

மணிமேகலை நூல் குறிப்பு.!

 

கலை என்றால் என்ன?

கலை  என்பது ஒரு மனிதன் புதிதாக ஒரு பொருளையோ அல்லது இல்லாத ஒன்றை உருவாக்குவதை கலை என்று சொல்லப்படுகிறது. ஒரு ஆர்வமுள்ள மனிதன் ஒரு பொருளை அழகுபடுத்தி உலகிற்கு அறிமுகம் செய்வதால் மக்களை மகிழ்ச்சிப்படுத்த செய்க்கிறது.

பெரும்பாலும் கலையானது படைப்பாற்றலை கொண்டுள்ளது. கலையானது கற்பனையில் வரையப்படும் ஓவியங்களும், ஒரு சிறந்த எழுத்தாளரின் படைப்புகளும் ஒரு கலைதான், அதோடு ஒரு மனிதன் புதிய யோசனைகளை உருவாக்கும் திறனும் கலைதான் என்று சொல்லப்டுக்கிறது.

அதோடு ஆரம்ப காலகட்டத்தில் பல வகையான கலைகள் இருந்திருக்கின்றன, அவை இசை, நடனம், பாடல், நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, புனைகதை, சினிமா, மாடலிங் இது போன்ற பலவகையான கலைகள் உள்ளன. இது போன்ற கலைகளை நவீன கலைகள் என்றும் சொல்லப்படுகிறது.

கலையானது உணர்ச்சிகளையும் உணர்ச்சியை மாற்றும் திறன் கொண்டது. கலையானது சமூகத்தில் பிரதிபலிக்கும் மனநிலைகளையும், சுவைகளையும் கொண்டுள்ளது.

கவின் கலைகள் என்றால் என்ன?

கவின் கலை என்பது கவின் என்ற சொல் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் அழகியல் கலை என்றும் அழைக்கபடுகிறது. இந்த  கவின் கலையை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • அரங்காடல் கலை
  • எழுத்துக்கலை
  • கட்புலக் கலை

அரங்காடல் கலை:

அரங்காடல் கலை என்பது அரங்குகளின் மூலம் அரங்கேற்றப்படும் கலைகள் அரங்காடல் கலைகள் என்று அழைக்கப்படுகிறது. இவை கலைகளின் சிறப்புகளை  கொண்டு அரங்குகளும் மாறுபடும்.  இவை நிகழ் கலைகள் என்றும்  அழைக்கப்டுகிறது. இவை இசை, நடனம், தற்காப்பு கலைகள் மற்றும் நாடகம் போன்றவற்றில் அடங்கும்.

எழுத்துக்கலை:

எழுத்துக்கலை என்பது மொழியின் எழுத்துருக்களாலும், உரைஞர் மற்றும்  கவிஞரின் படைப்பாற்றலாலும் கற்பனை புனைவுகள், நடப்புகள், வராலாறுகள் எழுத்துக் கலைகளுள்  இவை அடங்கும். இவை கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றில் அடங்கும்.

கட்புலக் கலை:

கட்புலக் கலைகள் என்பது இரு பரிணாம முறைகளில் நகலாகவோ அல்லது கற்பனையாகவோ  வெளிப்படுத்தப்படும் கலைகள் ஆகும். இவை ஓவியம், சிற்பம், ஒளிப்படம் போன்றவற்றில் அடங்கும்.

நுட்பக்கலைகள்:

நுட்பக்கலைகள் என்பது அறிவியல் தாக்கம் சார்ந்த கடினமான கலைதான் நுட்பக்கலை என்று அழைக்கப்டுகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement