சொல் இலக்கணம் என்றால் என்ன? | Sol Endral Enna
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சொல் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். நம்முடைய பள்ளி வகுப்பிலும் சரி கல்லூரியிலும் சரி இலக்கண பாடம் அவசியமானது. எப்படி ஆங்கிலத்தை பிழையில்லாமல் படிப்பதற்கும் பேசுவதற்கும் Grammar தேவைப்படுகிறதோ அது போன்று தமிழை பிழையில்லாமல் படிப்பதற்கும் பேசுவதற்கும் இலக்கணம் தேவைப்படுகிறது. தமிழில் இலக்கணங்கள் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றான சொல் இலக்கணத்தை பற்றி படித்தறியலாம் வாங்க.
சொல் என்றால் என்ன?
- சொல் என்பது ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்து பொருள் தருவது சொல்லாகும்.
- ஒரு எழுத்து தனித்து நின்று ஒரு பொருளை தருவது.
எடுத்துக்காட்டு: பூ, தீ என்பது ஒரு சொல் ஆனால் பூ என்பது பூக்களையும், தீ என்பது நெருப்பையும் குறித்து ஒரு பொருளை கொடுக்கிறது.
- பல எழுத்துக்கள் சேர்ந்து ஒரு பொருள் தருவது.
எடுத்துக்காட்டு: மாடு புல் தின்றது, ஆடு மேய்கிறது.
- சொல் இரு திணைகள் மற்றும் ஐந்து பால்களையும் குறிக்கிறது. இரு தினை என்பது உயர்தினை, அஃறினையையும் மற்றும் ஐந்து பால் என்பது ஆண் பால், பெண் பால், பலர்பால், பலவின் பால், ஒன்றன் பால் ஆகியவற்றை குறிக்கிறது.
- முதல், இடை, கடை என்று சொல்லக்கூடிய மூவகை இடங்களையும் குறிக்கிறது.
சொல்லின் வேறு பெயர்கள்:
- மொழி, பதம், கிளவி என சொல்லிற்கு வேறு பெயர்கள் உள்ளது. இவை அனைத்தும் சொல்லையே குறிக்கின்றன.
சொல் எத்தனை வகைப்படும்?
சொல் நான்கு வகைப்படும்: அவை
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
நால்வகைச் சொற்கள் மற்றும் அதன் விளக்கம்
பெயர்ச்சொல் என்றால் என்ன?
- பெயர்ச்சொல் என்பது ஒரு பெயர் மற்றும் பொருளை குறிக்கும் சொல் பெயர் சொல்லாகும்.
உதாரணம்:
- முருகன், யானை, மயில், புத்தகம்.
வினைச்சொல் என்றால் என்ன?
- வினை சொல் என்பது ஒருவன் செய்கின்ற செயலை குறிப்பது வினை சொல்லாகும்.
உதாரணம்:
- கண்ணன் ஓடினான். இதில் கண்ணன் ஓடினான் என்ற செயலை குறிப்பதால் வினை சொல்லாகும்.
- கயல்விழி ஆடினாள் இதில் “ஆடினாள்” என்பது வினைச்சொல்
- கீர்த்தனா பாடினாள் இதில் “பாடினாள்” என்பது வினைச்சொல்
இலக்கணம் என்றால் என்ன? |
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? |
இடைச்சொல் என்றால் என்ன?
இடைச்சொல் என்பது ஒரு சொல்லில் தனித்து வராமல் இடையில் வருவது இடைசொல்லாகும். அதவாது பெயர்ச் சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையில் வருவது இடைச்சொல் எனப்படும்.
உதாரணம்:
- அபிராமியை பார்த்தேன் இதில் “யை” என்பது இடை சொல்லாகும்.
- அவனும் அவளும் சென்றனர் இதில் “உம்” என்ற சொல் இடை சொல்லாகும்.
சொல் என்றால் என்ன? | உரிச்சொல் என்றால் என்ன?
- ஒரே பொருளை தர கூடிய சொல்லை சற்று மிகுதிபடுத்தி காட்டுவது உரிச்சொல்லாகும். அதாவது இலக்கணத்திற்கே உரிய சொல் உரிச்சொல் எனப்படும்.
- மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வது உரிச்சொல்.
உதாரணம்:
- சாலப்பேசினான் இதில் “சால” என்பது உரிச்சொல்லாகும்.
- உறுபுகழ் இந்த சொல்லில் “உறு” என்பது உரிச்சொல்லாகும்.
- நனிதின்றான் என்ற சொல்லில் “நனி” என்பது உரிச்சொல்லாகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |