தினம் ஒரு திருக்குறள் | Dhinam Oru Kural

Dhinam Oru Kural

தினம் ஒரு திருக்குறள் பொருளுடன் | Dhinam Oru Thirukural

Thinam Oru Kural – வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் உலக பொதுமறை நூலாக விளங்கும் திருக்குறள் பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுவோம். திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள் கொண்டுள்ளது. திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை பல பெயர்களால் அழைத்து வருகின்றனர். திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவர் போன்ற பல சிறப்பு பெயர்கள் உண்டு. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவினால் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலின் குறள்களையும் அவற்றின் தெளிவான விளக்கங்களையும் (thirukural athigarangal in tamil) இப்போது படித்தறியலாம் வாங்க..!

திருக்குறள் அதன் அர்த்தம்

தினம் ஒரு குறள் திருக்குறள் – Dhinam Oru Thirukural:

குறள் 41:

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

மு.வ விளக்க உரை:

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை:

மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

கலைஞர் விளக்க உரை:

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்

திருக்குறள் பற்றிய வினா விடை

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil