திருக்குறள் பற்றிய வினா விடை | Thirukkural Question and Answer in Tamil

Thirukkural Question and Answer in Tamil

திருக்குறள் TNPSC Questions 

Thirukkural Question and Answer in Tamil:- பொதுநலம்.காம் பதிவிற்கு வந்தமைக்கு எங்களது அன்பான நன்றிகள். திருக்குறள் உலக பொதுமறை நூலாக போற்றப்படும் நூலாகும். இந்த நூலை எழுதியவர் திருவள்ளுரவர் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் நீங்கள் திருக்குறளை பற்றி அறிந்திடாத பலவகையான தகவல்கள் இருக்கின்றன என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?  தெரியாது என்றால் இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நாங்கள் இந்த பதிவில் TNPSC தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்காகவே திருக்குறள் பற்றிய பொது அறிவு வினா விடைகளை (GK in Tamil) பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பயன்பெறுங்கள்..

திருக்குறள் TNPSC Notes | திருக்குறள் வினாடி வினா கேள்விகள் 

1 திருக்குறளில் உள்ள மொத்த குறல்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை: 1330

2 திருக்குறள் முதல் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது?

விடை: 1812

3 திருக்குறளின் முதல் பெயர் என்ன?

விடை: முப்பால்

4 திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை?

விடை: குன்றிமணி

5 திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் எத்தனை அடி கொண்டது?

விடை: இரண்டு

6 திருக்குறளை எழுதியவர் யார்?

விடை: திருவள்ளுவர்.

7 திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது?

விடை: கிமு 31

8 திருக்குறளை முதல் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

விடை: ஜி.யு போப் 

9 திருக்குறளில் உள்ள மொத்த இயல் எண்ணிக்கை?

விடை: 9

10 திருக்குறள் —- கரத்தில் தொடங்கி —- கரத்தில் முடிகிறது?

விடை: அ, ன 

11 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை?

விடை: 42194

12 திருக்குறளில் இடம்பெறும் மலர் என்ன?

விடை: அனிச்சம்

13 திருக்குறள் மூலத்தை முதல் முதலில் அச்சிட்டவர் யார்?

விடை: ஞானப்பிரகாசர் 

14 திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

விடை: 130

15 திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே ஒரு உயிரெழுத்து எது?

விடை: ஒள

16 திருக்குறள் பெருமையை போற்றி புகழும் நூல் எது?

விடை: திருவள்ளுவமாலை

18 “அணுவை துளைத்து ஏழுகடல் புகுந்து குறுகதரித்த குறள்” என கூறியவர் யார்?

விடை: ஒளவையார் 

19 ஏழு என்ற சொல் எத்தனை குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது?

விடை: எட்டு

20 வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?

விடை: இலத்தீன்

21 திருக்குறளில் இடம்பெறாத சொல் எது?

விடை: தமிழ்

22 திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்?

விடை: நெருஞ்சி

23 திருக்குறள் —- வெண்பா வகையையே சார்ந்தது?

விடை: குறள்

24 திருக்குறளுக்கு முதல் முதலில் உரை எழுதியவர் யார்?

விடை: மணக்குடவர்

25 நான்முகனார் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

விடை: திருவள்ளுவர்

திருக்குறள் அதிகாரம்..! Thirukkural in Tamil..! திருக்குறள் அர்த்தங்கள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil