எவ்வளவுதான் கார் வந்தாலும் இந்த காருக்கு உள்ள கெத்து குறையவில்லை

மாருதி கார் வகைகள் | Top 5 cars Name in Tamil

ஹாய் நண்பர்களே.! இன்றைய பதிவில் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகி கொண்டிருக்கின்ற காரை பற்றி தான் பார்க்க போகிறோம். ஒரு 5 வருடத்திற்கு முன்னால் Scooty, Bike மேல் ஆர்வம் அதிகமாக இருந்தது. இப்போது காரின் மேல் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. சொந்தமாக கார் வாங்க வேண்டுமென்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். இப்போதெல்லாம் பெரும்பாலானோர் பொதுப் போக்குவரத்தில் பயணிக்க விருப்புவதில்லை. குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியில் சென்றால் எல்லாரும் சேர்ந்து போவதற்கு வசதியாக இருக்காது  என நினைக்கிறார்கள். அதனால் தனியாக வாகனம் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அப்படி  நீங்கள் வசதியாகவும், மாடனாகவும்  அதுமட்டுமில்லாமல் நல்லா விற்பனை ஆகின்ற கார்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் கார் மாடல்கள் | கார் விலை பட்டியல்

Maruti Suzuki Wagon r in Tamil:

Maruti Suzuki Wagon r in Tamil

நம் நாட்டில் மக்களிடையே மாருதி நிறுவனம் நல்ல மதிப்பை கொண்டிருக்கிறது. இதனால் தான் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதத்தில் 1,13,407 யூனிட்டுகள் விற்பனை ஆகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் ஆறு மாதத்திலே அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகி உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் CNG என இரண்டு விதமான என்ஜின் மூலம் விற்பனை ஆகின்றது. இந்த காரின் ஆரம்ப விலை Rs.5,44,500 என்ற விலையில் விற்பனை ஆகிறது.

Maruti Suzuki Swift in Tamil:

Maruti Suzuki Swift in Tamil:

இந்தியாவில் ஸ்விப்பிட் விற்பனையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதத்தில் 1,02,206 யூனிட்டுகள் விற்பனை ஆகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 91,777 யூனிட்டுகள் விற்பனை ஆகி உள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை Rs.5,91,900 என்ற விலையில் விற்பனை ஆகிறது.

Maruti Suzuki Dzire in Tamil:

Maruti Suzuki Dzire in Tamil

இந்தியாவில் மாருதி சுஸுகி டிசையர் கார் பெட்ரோல் மற்றும் CNG என இரண்டு விதமான என்ஜின் மூலம் விற்பனை ஆகின்றது. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.41 km மைலேஜையும்,  CNG 31.12 Km மைலேஜையும் தருகின்றது. எந்த காரிலும் இல்லாத இந்த மாதிரி வசதிகள் கொண்டிருப்பதால் தான் இந்தியாவில் The Best Selling Car மாடல்களில் டிசையரும் ஒன்றாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதத்தில் 70,991 யூனிட்டுகள் விற்பனை ஆகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் ஆறு மாதத்தில் 91,777 யூனிட்டுகள் விற்பனை ஆகி நல்ல வளர்ச்சியை பெற்றிருக்கிறது. இந்த காரின் ஆரம்ப விலை Rs.6,24,000 என்ற விலையில் விற்பனை ஆகிறது.

டாடா நெக்ஸான் விலை:

டாடா நெக்ஸான் விலை

2022 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதத்தில் அதிகம் விற்பனையாகும் கார்களில் நெக்ஸான் நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதத்தில் 46,247 யூனிட்டுகள் விற்பனை ஆகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் ஆறு மாதத்தில் 82,770 யூனிட்டுகள் விற்பனை ஆகி நல்ல வளர்ச்சியை பெற்றிருக்கிறது. இந்த கார் இந்தியாவில் Rs.7.60 லட்சம் ஆரம்பித்து Rs.13.9 லட்சம் வரை விற்பனை ஆகின்றது.

Maruti Suzuki Baleno in Tamil:

Maruti Suzuki Baleno in Tamil

2022 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதத்தில் அதிகம் விற்பனையாகும் கார்களில் பலினோ ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு 93,823 யூனிட்டுகள் விற்பனை ஆகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் ஆறு மாதத்தில் 74,892 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. இந்த கார் இந்தியாவில் ஆரம்ப விலை  Rs.6.49,000 என்ற விலையில் விற்பனை ஆகின்றது. இந்த கார் பெட்ரோல் என்ஜின் மூலம் மட்டும் விற்பனை ஆகின்றது.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil