நீங்கள் முன்ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள்? இத படிங்க..!

Mun Jenmam Patri Ariya

முன்ஜென்மம் அறிய | Mun Jenmam Patri Ariya

ஒவ்வொருவருக்கும் அவர்கள் பிறந்தநாள் என்பது மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. ஒருவருடைய பிறந்தநாள் தான் அவர்களுடைய வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கிறது. பிறந்த தேதி மற்றும் நேரத்தினை வைத்துதான் அவர்களுக்கு ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நாளை வைத்து ஜாதகம் மட்டும் கணிக்கப்படுகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிறந்த நாளினை வைத்து உங்களது முன்ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதையும் துல்லியமாக கூறிவிட முடியும். அதன் அடிப்படையில் உங்களது பிறந்த நாளை அடிப்படையாக கொண்டு நீங்கள் உங்களது கடந்த காலத்தில் என்னவாக பிறந்துள்ளீர்கள் என்பதை பற்றி இந்த பகுதியில் அறிந்து கொள்ளலாம் வாங்க..!

பிறந்த தேதி பலன்கள்

14 – 28 ஜூலை | 23 – 27 செப்டம்பர் | 3 – 17 அக்டோபர் தேதியில் பிறந்தவர்களுக்கு:

மேல் கூறிய இந்த தேதியில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டவர்களாய் இருப்பார்கள். இவர்களிடம் தலைமை குணம் அதிகமாக இருக்கும். பலர் உங்களுடைய வாழ்க்கை முறையினை கடைப்பிடிக்க வேண்டும் என்று மனதில் ஆசைப்படுவார்கள்.

முன்ஜென்ம வாழ்க்கை:

எப்போதும் உதவி செய்வதற்கு காத்திருப்பீர்கள். உங்களது கடந்த கால வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல குருவாக இருந்துருப்பீர்கள். உங்களிடம் இருக்கும் மிகப்பெரிய மனதால் மற்றவர்களுக்கு பல உதவிகளை செய்திருப்பீர்கள் .

22 -31 ஜனவரி | 8 – 22 செப்டம்பர் தேதியில் பிறந்தவர்களுக்கு: 

இந்த தேதியில் பிறந்தவர்கள் மென்மையான மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். பிறர் மனதில் உள்ள எண்ணங்களை எளிதாக படிக்கக்கூடியவர்கள். இந்த ஜென்மத்தில் நீங்கள் பிறந்தது ஒரு இடமாகவும் வாழ்வது ஒரு இடமாகவும் இருக்கலாம். இவர்களுக்கு வெளியில் பயணம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

முன்ஜென்ம வாழ்க்கை:

உங்களுடைய முன்ஜென்ம வாழ்க்கையில் நீங்கள் உலகம் சுற்றும் நபராக இருந்துள்ளீர்கள்.

29 ஜூலை – 11 ஆகஸ்ட் | 30 அக்டோபர் – 7 நவம்பர் தேதியில் பிறந்தவர்களுக்கு:

மற்றவர்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் நேருக்கு நேர் பேசும் குணமும், நேர்மையான குணத்தினையும் கொண்டவர்களாக இருப்பார்கள். உங்களுக்குள் மனிதாபிமானம் அதிகமாக காணப்படும். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லும் குணம் உங்களிடம் எப்போதும் இருக்காது.

முன்ஜென்ம வாழ்க்கை:

நீங்கள் உங்கள் கடந்த கால வாழ்க்கையில் மக்கள் தொடர்பு உள்ள துறையில் வேலை பார்பவர்களாக இருந்துள்ளீர்கள்.

ஏஞ்சல் எண் அர்த்தம்

8 – 21 ஜனவரி | 1 – 11 பிப்ரவரி தேதியில் பிறந்தவர்களுக்கு:

பல தடைகளையும் கடந்து வெற்றி பெறும் நபராக இருப்பீர்கள். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவு எடுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். காதல் வாழ்க்கையானது நன்றாக இருக்கும். உறவு முறைகளின் எண்ணங்களை புரிந்துகொண்டு நடக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

முன்ஜென்ம வாழ்க்கை:

கடந்த முன்ஜென்ம காலத்தில் நீங்கள் பண்டிதராக இருந்துள்ளீர்கள்.

1 – 10 மார்ச் | 27 நவம்பர் – 18 டிசம்பர் தேதியில் பிறந்தவர்களுக்கு:

மற்றவர்கள் கூறும்படி நடக்காமல் உங்களுக்கு பிடித்தாற் போன்று வாழ்வீர்கள். சுதந்திரமாக வாழ வேண்டும் என்று அதிகமாக விரும்பக்கூடியவர்கள்.

முன்ஜென்ம வாழ்க்கை:

கடந்த கால வாழ்க்கையில் கண்டிப்பாக நீங்கள் ஒரு பேரரசராக இருந்து இருப்பீர்கள்.

2 – 29 பிப்ரவரி | 20 – 31 ஆகஸ்ட் தேதியில் பிறந்தவர்களுக்கு:

மிகவும் சென்சிட்டிவான நபராக இருப்பார்கள். மற்றவர்கள் உங்களுடைய விஷயங்களில் தலையிடுவது உங்களுக்கு பிடிக்காத விஷயமாக இருக்கும். நீங்கள் தனியாக வாழ்வதற்கு மிகவும் அச்சம் கொள்ளும் நபராக இருப்பீர்கள்.

முன்ஜென்ம வாழ்க்கை:

முன்ஜென்ம வாழ்க்கையில் மக்களுக்கு பிடித்த ஒரு மிக சிறந்த அரசனாகவோ அல்லது மற்றவர்களுக்கு கட்டளையிடும் ஒரு நபராகவோ பிறந்திருக்கிறீர்கள்.

ஏப்ரல் 20 – 8 மே | 12 – 19 ஆகஸ்ட் தேதியில் பிறந்தவர்களுக்கு:

தற்போதைய வாழ்க்கையில் நீங்கள் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்தக் கூடிய ஒரு நபராக இருப்பீர்கள். சுதந்திரத்திற்காக அதிகம் பாடுபடும் ஒரு நபராக இருப்பீர்கள். உலக நல்லொழுக்கம் தேவை என்பது உங்களது கருத்தாக இருக்கும். அதற்காக நீங்கள் உங்களால் முடிந்தவற்றை செய்வீர்கள்.

முன்ஜென்ம வாழ்க்கை:

முன்ஜென்மத்தில் நீங்கள் ஒரு இரக்கமற்ற வெற்றியாளராக இருந்துள்ளீர்கள்.

9 – 27 மே | 29 ஜீன் – 13 ஜூலை தேதியில் பிறந்தவர்களுக்கு:

உங்களுடைய நிகழ்கால வாழ்க்கையில் நீங்கள் மற்றவர்களை அதிகமாக நம்புபவராகவும், மிகச்சிறந்த ஒரு நல்ல மனிதராகவும் இருப்பீர்கள். பிறரிடம் நற்பெயரை பெறும் ஒரு நபராகவும் இருப்பீர்கள். நீங்கள் பேசுவதை கேட்காதவர்களை நீங்கள் வெறுப்பீர்கள். அவர்களை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது..!

முன்ஜென்ம வாழ்க்கை:

கடந்த முன்ஜென்மத்தில் நீங்கள் ஒரு ஞானமுள்ள நபராக இருந்துள்ளீர்கள்.

11 – 31 மார்ச் | 18 – 29 அக்டோபர் | 19 – 31 டிசம்பர் தேதியில் பிறந்தவர்களுக்கு:

தற்போதைய வாழ்க்கையிலும் கூட ஒரு சிறந்த பேச்சாளராகவும், நியாயவாதியாகவும் இருப்பீர்கள். மனசாட்சி இல்லாத செயல்களை செய்யும் மக்களை நீங்கள் சற்றும் பொருத்துக் கொள்ளாமல் தட்டி கேட்பீர்கள். மற்றவர்களிடம் உங்களுடைய சந்தேகங்களை உடனடியாக கேட்டு தெளிவு பெற்றுக்கொள்வீர்கள்.

முன்ஜென்ம வாழ்க்கை:

கடந்த காலத்தில் நீங்கள் சிறந்த ஆணையாளராக இருந்துள்ளீர்கள்.

28 மே – 18 ஜூன் | 28 செப்டம்பர் – 2 அக்டோபர் தேதியில் பிறந்தவர்களுக்கு:

இந்த ஜென்மத்தில் நீங்கள் மிகவும் சுதந்திமான ஒரு நபராகவும், பலதரப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு கொண்ட ஒரு நபராகவும் இருப்பீர்கள். நீங்கள் புது புது இடங்களை தேடுவதில் ஆர்வமாக இருப்பீர்கள்.

முன்ஜென்ம வாழ்க்கை:

நீங்கள் ஒரு மென்மையான இதயம் கொண்ட சாகசங்கள் செய்ய கூடிய நபராக உங்களது கடந்த ஜென்மத்தில் இருந்து இருக்கிறீர்கள்.

1 – 19 ஏப்ரல் | 8 – 17 நவம்பர் தேதியில் பிறந்தவர்களுக்கு:

நீங்கள் ஒரு உன்னதமான மற்றும் ஆளுமை திறன் மிக்க நபராக இருப்பீர்கள்.. உங்களுடைய மூளையானது பல்வேறு சிக்கல்கள் மிக்க ஒரு மூளையாக இருக்கும். நீங்கள் ஒரு மனிதரை மிக வேகமாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ஒருவராக இருப்பீர்கள். மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை எளிதாக புரிந்து கொண்டு அதன் படி செயல்படும் ஒரு நபராகவும் இருப்பீர்கள்.

முன்ஜென்ம வாழ்க்கை:

உங்களது முன் ஜென்மத்தில் நீங்கள் கண்டிப்பாக ஒரு சிறந்த கிளர்ச்சியாளராக இருந்திருப்பீர்கள்.

1 – 7 ஜனவரி | 19 – 28 ஜூன் | 1 – 7 செப்டம்பர் | 18 – 26 நவம்பர் தேதியில் பிறந்தவர்களுக்கு:

உங்களது இந்த நிகழ்கால வாழ்க்கையில் நீங்கள் மற்றவர்களுக்கு கடமை உணர்வுடன் செயல்படும் ஒரு நபராக இருப்பீர்கள். கடந்த கால வாழ்க்கையில் இருந்த பல நல்ல குணங்கள் உங்களுக்கு இப்போது இருக்கும் இந்த தற்போதைய வாழ்க்கையிலும் உள்ளது.

முன்ஜென்ம வாழ்க்கை:

கடந்த கால வாழ்க்கையில் நீங்கள் கண்டிப்பாக ஒரு மிகச்சிறந்த விஞ்ஞானியாகவோ அல்லது அறிவு சார்ந்து செயல்படும் மிகப் பெரிய துறையிலோ இருந்து இருப்பீர்கள்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil