அணி இலக்கணம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை | Ani Ilakkanam
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! பிரிமொழிச் சிலேடை இலக்கணம் என்பது தமிழ் மொழியின் விதிகளையும், கூறுகளையும் விளக்குவது. அதாவது ஒரு மொழியை பிழையில்லாமல் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தேவையான இலக்கண விதிகளில் உள்ள ஒரு தொகுப்பு. தமிழில் மொத்தம் ஐந்து இலக்கணங்கள் உள்ளன. அவை பொருள் இலக்கணம், சொல் இலக்கணம், யாப்பு இலக்கணம், எழுத்து இலக்கணம், அணி இலக்கணம். அவற்றுள் ஒன்றான அணி இலக்கணம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
அணி இலக்கணம் எத்தனை வகைகள்?
அணி என்பதற்கு அழகு என்று பொருள்படும். அதாவது ஓரு செய்யுளில் இருக்கும் சொல்லின் அழகு மற்றும் பொருளின் அழகு ஆகியவற்றை எடுத்து கூறுவது அணி இலக்கணம் எனப்படும். இந்த இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம்.
அணிகள் எத்தனை வகைப்படும்
அணி இலக்கணம் வகைகள்:
அணி இரண்டு வகைப்படும் அவை
- சொல்லணி
- பொருளணி
சொல்லணி:
யமகம், மடக்கு முதலான அணிகள் சொல்லணிகள் ஆகும். இவை ஆறு வகைப்படும்.
- எதுகை
- மோனை
- சிலேடை
- மடக்கு
- பின்வருநிலையணி
- அந்தாதி
பொருளணி – Tamil Ani Ilakkanam:
உவமை, உருவகம் போன்றவற்றை விலகும் அணிகள் பொருளணியில் அடங்கும். இவை 35 பொருளணிகளை கூறுகின்றது.
- அதிசய அணி
- அவநுதியணி
- ஆர்வமொழியணி
- இலேச அணி
- உதாத்த அணி
- ஏது அணி
- ஒட்டணி
- ஒப்புமைக் கூட்ட அணி
- ஒழித்துக்காட்டணி
- சங்கீரண அணி
- சமாகித அணி
- சிலேடையணி
- சுவையணி
- தற்குறிப்பேற்ற அணி
- தன்மேம்பாட்டுரை அணி
- தன்மையணி
- தீவக அணி
- நிதரிசன அணி
- நிரல்நிறையணி
- நுட்ப அணி
- பரியாய அணி
- பரிவருத்தனை அணி
- பாவிக அணி
- பின்வருநிலையணி
- புகழாப்புகழ்ச்சி அணி
- புணர்நிலையணி
- மயக்க அணி
- மாறுபடு புகழ்நிலையணி
- முன்ன விலக்கணி
- வாழ்த்தணி
- விசேட அணி
- விபாவனை அணி
- விரோக அணி
- வேற்றுப்பொருள் வைப்பணி
- வேற்றுமையணி
பகுபத உறுப்பிலக்கணம் |
பிற அணி – Ani Ilakkanam in Tamil:
- இரட்டுறமொழிதல் அணி
- இல்பொருள் உவமையணி
- உயர்வு நவிற்சி அணி
- உருவக அணி
- உவமையணி
- எடுத்துக்காட்டு உவமையணி
- தன்மை நவிற்சி அணி
- பிறிது மொழிதல் அணி
- வஞ்சப் புகழ்ச்சியணி
- ஏகதேச உருவக அணி
Ani Ilakkanam – இரட்டுற மொழிதல் அணி – அணி இலக்கணம்:
ஒரு சொல் அல்லது சொற்றடர் இரு பொருளை தருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இந்த அணியை சிலேடை அணி என்றும் அழைப்பர். இவை இரண்டு வகைப்படும் அவை
- செம்மொழிச் சிலேடை
- பிரிமொழிச் சிலேடை
சிலேடை அணி என்றால் என்ன?
செம்மொழிச் சிலேடை – Ani Ilakkanam:
செம்மொழிச் சிலேடை என்பது ஒரு சொல் பிரிபடாமல் பல பொருளை தருவது செம்மொழிச் சிலேடை அணி எனப்படும்.
பிரிமொழிச் சிலேடை – அணி இலக்கணம்:
பிரிமொழி சிலேடை என்பது ஒரு சொற்றடர் பல வகையாக பிரிக்கப்பட்டு பல பொருள்களை தருவது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
இல்பொருள் உவமையணி – Ani Ilakkanam:
உலகில் இல்லாத ஒரு பொருளை ஒன்றுக்கு உவமையாக கூறுவது இல்பொருள் உவமையணி எனப்படும்.
உவமை அணி விளக்கம் |
தற்குறிப்பேற்ற அணி – Ani Ilakkanam in Tamil:
இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வை கவிஞர் தன் குறிப்பை ஏற்றி கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
(எ.கா) போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட”
விளக்கம் – அணி இலக்கணம் – Ani Ilakkanam
கோவலனும் கண்ணகியும் மதுரை நகருக்கு செல்லும் போது இயல்பாக காற்றில் ஆடும் கொடியை கவிஞர் அவரது கற்பனையால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்பதை முன்னரே அந்த கொடிகள் அறிந்துள்ளது என்பதை குறிப்பேற்றிக் கூறுவார்.
வஞ்சப் புகழ்ச்சியணி – Ani Ilakkanam:
ஒருவரை புகழ்வது போல் இகழ்வதும், இகழ்வது போல் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சியணி ஆகும்.
- புகழ்வது போல் இகழ்தல்
- இகழ்வது போல் புகழ்தல்
புகழ்வது போல் இகழ்தல் – அணி இலக்கணம்:
(எ.கா) தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
விளக்கம் – Ani Ilakkanam:
இக்குறட்பாவில் கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழ்வது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களை மட்டும் செய்வார்கள் என்றும், கயவர்கள் இழிவான செயல்களை செய்வார்கள் என்று புகழ்வது போல இகழ்வதை இக்குறட்பாவில் காணலாம்.
இகழ்வது போல் புகழ்தல் – Ani Ilakkanam in Tamil:
(எ.கா) பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே”
விளக்கம் – Ani Ilakkanam:
- இந்த பாடலில் புலவர்கள் பாரியை புகழ்கின்றனர். பாரி மட்டும் கைம்மாறு கருதாமல் பொருள்களை கொடுக்கிறான்? மழையம் இவ்வுலகத்தில் அனைத்து பகுதியிலும் கைம்மாறு கருதாமல் பொழிகிறது.
- இதில் பாரியை இகழ்வது போல இருந்தாலும் பாரிக்கு நிகராக கொடை செய்வதற்கு யாரும் இல்லை என்று கூறி புகழ்வதே ஆகும்.
பின்வரு நிலையணி – அணி இலக்கணம்:
செய்யுளில் முன்னர் வந்த சொற்களோ அல்லது பொருளோ பல முறை வந்து பொருள் தருவது பின்வரு நிலையணி எனப்படும். இவை மூன்று வகைப்படும்.
- சொல் பின்வருநிலையணி
- பொருள் பின்வருநிலையணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
சொல் பின்வருநிலையணி – Ani Ilakkanam in Tamil:
சொல் பின்வருநிலையணி என்பது முன்னர் வந்த சொல் மீண்டும், மீண்டும் வந்து வெவ்வேறு பொருள்களை தந்தால் அது சொல் பின்வருநிலையணி எனப்படும்.
(எ.கா) உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
விளக்கம்:
இக்குறட்பாவில் உடைமை என்ற சொல் மீண்டும், மீண்டும் வந்து பெற்றிருத்தல், உடைய, பொருள் என்று வெவ்வேறு பொருள்களை தந்ததால் அது சொல் பின்வருநிலையணி எனப்படுகிறது.
பொருள் பின்வருநிலையணி – Tamil Ani Ilakkanam:
செய்யுளில் ஒரே பொருளை கொடுக்கும் சொல் பல முறை வருவது பொருள் பின்வருநிலையணி எனப்படும்.
(எ.கா) அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை.
விளக்கம்:
இப்பாடலில் மலரதில் என்னும் ஒரே பொருளை கொடுக்கும் சொல் அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், விள்ளல், விரிதல் என்று பல முறை வருவது பொருள் பின்வருநிலையணி எனப்படும்.
சொற்பொருள் பின்வருநிலையணி – அணி இலக்கணம்:
செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது சொற்பொருள் பின்வருநிலையணி எனப்படும்.
(எ.கா) எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
விளக்கம்:
இதில் விளக்கு என்று முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது சொற்பொருள் பின்வருநிலையணி எனப்படும்.
பிறிது மொழிதல் அணி – Tamil Ani Ilakkanam:
பிறிது மொழிதல் அணி என்பது உவமையை கூறி பொருளை பெற வைப்பது பிறிது மொழிதல் அணி எனப்படும்.
தன்மை நவிற்சி அணி:
எந்த ஒரு பொருளையும் அல்லது செயலையும் உண்மையான கருத்துக்களை உள்ளதை உள்ளபடி சொல்வது இயல்பு நவிற்சி அணி அல்லது தன்மை நவிற்சி அணி எனப்படும்.
உயர்வு நவிற்சி அணி:
Ani Ilakkanam Ethanai Vagai Padum: ஒன்றை பற்றி மிகவும் உயர்த்தி கூறுவது உயர்வு நவிற்சி அணி எனப்படும்.
(எ.கா) குதிரை காற்றிலும் வேகமாகப் பாய்ந்து ஓடிற்று
காற்று வேகமானது அதை விட வேகமாக குதிரை ஓடியது என்று உயர்த்தி கூறுவதால் இது உயர்வு நவிற்சி அணி எனப்படும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |