வங்கி கணக்கை முடிக்க கடிதம் | How to Closing Bank Account Letter Format in Tamil
account closing letter in tamil: எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் கடிதம் எழுதும் முறை வழக்கமாக இருக்கிறது. அதவாது பள்ளியில் விடுமுறை கடிதம் ஆரம்பித்து, வங்கியில் கணக்கை முடிப்பதற்கு வரை அனைத்திற்கும் கடிதம் எழுதப்படுகிறது. இந்த கடிதமானது முறைப்படி தான் எழுத வேண்டும். ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு Format-யில் வரும். அதனை பற்றி அறிந்து கொண்டால் தான் சரியாக எழுத முடியும். சிலர் பணியிட மாற்றம் காரணமாக தங்களுடைய வங்கி கணக்கை உடனடியாக முடிப்பார்கள். ஒரு சிலர் வெவ்வேறு காரணத்திற்காக சேமிப்பு கணக்கை முடிப்பார்கள். வங்கி கணக்கை முடிப்பதற்கு (bank account closing letter) வங்கியின் மேலதிகாரிக்கு எப்படி எளிமையாக கடிதம் எழுதுவது என்று பார்க்கலாம் வாங்க..
பேங்க் ஸ்டேட்மென்ட் வேண்டி மேலாளருக்கு விண்ணப்பம் |
Bank Account Closing Letter in Tamil
அனுப்புநர்
உங்கள் பெயர்
தெரு பெயர்
வசிக்கும் ஊர்
பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
பாரத ஸ்டேட் வங்கி,
வசிக்கும் ஊர்
ஐயா/ அம்மா
பொருள்: வங்கி கணக்கை முடித்து வைக்க வேண்டுதல் தொடர்பாக.
வணக்கம் நான் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண்———-. நான் சொந்த காரணங்களுக்காக தங்களது வங்கியில் சேமிப்பு கணக்கை தொடர விரும்பவில்லை. எனவே எனது வங்கி கணக்கை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை என்னிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நாள்: —–
இடம்: வசிக்கும் ஊர்
இப்படிக்கு,
XXX
குறிப்பு:
உங்களுக்கு வேறொரு வங்கியில் வங்கி கணக்கு இருந்தால் முடித்து வைக்க கோரிய வங்கி கணக்கில் உள்ள பணத்தை அந்த வங்கி கணக்குக்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கலாம். கோரிக்கை வைக்கும் போது அந்த வங்கி கணக்கு எண் மற்றும் IFSC code போன்றவற்றை கடிதத்தில் சுட்டி காட்ட வேண்டும்.
தொடர்புடைய கடிதங்கள் |
காவல்துறை புகார் மனு எழுதுவது எப்படி? |
மின்சாரம் புகார் கடிதம் மாதிரி |
நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |