பிட்காயின் வாங்குவது எப்படி? | How to Buy Bitcoin in Tamil

How to Buy Bitcoin in Tamil

பிட்காயின் பற்றிய தகவல் | What is Bitcoin in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பிட்காயின் பற்றி தெரிந்து கொள்ளலாம். பிட்காயின் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக கிரிப்டோகரன்சி பற்றி தெரிந்து கொள்வோம். கிரிப்டோகரன்சி என்பது பணத்தை இணையத்தின் வாயிலாக பரிமாறிக்கொள்வது. ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் அந்த நாட்டில் மட்டுமே செல்லத்தக்கதாகும். ஆனால் இது அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும். வலைத்தளத்தில் இப்போது அதிகமாக கிரிப்டோகரன்ஸிக்கள் பயன்பட்டு வருகின்றன. Cryptocurrency பற்றி அறிந்து கொண்டோம் இப்போது பிட்காயின் என்றால் என்ன? மற்றும் அதனை வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

பிட்காயின் என்றால் என்ன? – Bitcoin Details in Tamil:

பிட்காயின் வாங்குவது எப்படி

 • பிட் காயின் என்பது ஒரு கரன்சிதான். நாம் இப்பொழுது பயன்படுத்தும் பணம் கைகளில் புழங்கி கொண்டிருக்கும், பிறரிடம் நேரடியாக கொடுத்து வாங்க முடியும். ஆனால் கிரிப்டோகரன்சி முற்றிலும் டிஜிட்டல் மயமானது. இதனை இணையத்தளத்தில் பரிமாறிக்கொள்ளலாம்.
 • இந்த காயின் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அவ்வளவு பிரபலம் அடையவில்லை, ஆனால் அதனுடைய மதிப்பு இப்போது பல டாலர்களை தாண்டியுள்ளது.

பிட்காயின் வாங்குவது எப்படி? – Bitcoin Vanguvathu Eppadi:

 • how to buy bitcoin in tamil: இந்த காயினை நீங்கள் Exchange மற்றும் Peer to Peer முறையில் வாங்கி கொள்ளலாம்.
 • Exchange முறையில் உங்களுக்கும், விற்பனையாளருக்கும் இடையில் Exchanger ஒருவர் இருப்பார். அவர் விற்பனையாளரிடமிருந்து பிட்காயினை வாங்கி வாடிக்கையாளரிடம் கொடுப்பார். Exchanger வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை வாங்கி விற்பனையாளருக்கு கொடுப்பார்.
 • இந்த முறையில் வாங்குவதற்கு உங்களிடம் KYC இருக்க வேண்டும். இதை KYC வாங்குவதால் சற்று நம்பிக்கையான முறை என்று கூறலாம்.
 • Peer to Peer முறையில் நீங்கள் நேரடியாகவே விற்பனையாளரிடமிருந்து பிட்காயினை வாங்கி கொள்ளலாம். இந்த முறையில் எந்த விதமான ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. ஆதலால் இது பாதுகாப்பானது என்று கூற முடியாது.

பிட்காயின் வாங்குவது நல்லதா? கெட்டதா? – How to Buy Bitcoin in Tamil:

 • பிட்காயின் வாங்குவது எப்படி? இந்த காயினை வாங்குவதற்கு உங்களிடம் அதிக முதலீடு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பிட்காயின் மதிப்பு அதிகரிக்கும் போது உங்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும்.
 • இந்த காயினின் மதிப்பு நிலையானது அல்ல. பிட்காயின் வாங்குவது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதை போன்றதுதான் அதனுடைய மதிப்பு எப்போது வேண்டுமானாலும் குறைந்து போகலாம். இதை உருவாக்கிய நிறுவனம் இந்த பிட்காயினை அழித்துவிட்டால் யாரிடமும் நீங்கள் முறையிட முடியாது.
 • மற்ற நிறுவனங்கள் இந்த கிரிப்டோகரன்சியை ஏற்று கொண்டாலும், இந்தியாவில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்த கிரிப்டோ கரன்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.
 • எனவே இதில் முதலீடு செய்வதற்கு முன்பு கவனமாக முடிவு எடுத்து பின்னர் முதலீடு செய்யவும்.
 • பிட்காயின் வாங்கியதும் அதை சேமிப்பதற்கு ஒரு வாலட் ரெடி செய்து கொள்ள வேண்டும், பிட்காயின் வாங்குவதற்கு முன்னர் வாலட் வாங்கி கொள்வது நல்லது.
பழைய நாணயங்கள் இன்றைய மதிப்பு

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com