தோசை கல் சுத்தமாக மாறுவதற்கு இந்த 10 டிப்ஸ் செய்து பாருங்கள்

how to clean dosa tawa in tamil

தோசை கல் சுத்தம் செய்வது எப்படி?

அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கங்கள் இன்று அதிகளவு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கிட்சனில் தோசை ஊற்ற போனாலே தோசைக்கல் கூட சண்டை தான் நடக்கும் காரணம் தோசை வாராது அதற்கு காரணம் தோசைக்கல்லில் இருக்கும் துரு தான். நிறைய முறை வீட்டில் தோசைக்கல்லை துணி துவைப்பதை போல் நன்கு கழுவி பார்த்தாலும் தோசை நன்றாக வாராது. அதன் பின் வேறு ஒரு தோசைக்கல்லை வாங்குவார்கள். அப்படி செய்வது மிகவும் தவறு. இனி கவலை வேண்டாம் இந்த 10 டிப்ஸ் ட்ரை செய்து பாருங்கள். தோசைக்கல்லில் அருமையாக தோசை உற்றமுடியும். வாங்க அதையும் செய்து பார்ப்போம்.

Dosa Kallu Cleaning in Tamil:

டிப்ஸ் – 1

துருப்பிடித்த தோசைக்கல்லை எடுத்து அடுப்பை எரியவிடுங்கள் பின்பு தோசைக்கல்லை அதன் மீது வையுங்கள். வைத்து நன்கு காயவிடவும்.

டிப்ஸ் – 2

காய்ந்த தோசைக்கல்லை துணியால் பிடித்துக்கொள்ளவும். பின் அதில் கல் உப்பை போடவும். குறைந்தளவு தீயில் வைத்துக்கொள்ளவும்.

டிப்ஸ் – 3

dosa kallu cleaning in tamil

பின்பு மிதமான சூட்டில் உப்பை தூவிய பின் அதில் எலுமிச்சை சாறை ஊற்றவும். எலுமிச்சை தோலை வைத்து நன்கு தேய்க்கவும்.

  இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள 10 கிச்சன் டிப்ஸ்

டிப்ஸ் – 4

இது அனைத்தும் மிதமான சூட்டில் வைத்து செய்யவேண்டும். எலுமிச்சை சாறு தேய்ப்பதால் துரு கரை முழுவதுமாக மறைந்துவிடும்.

டிப்ஸ் – 5

அடுப்பை அணைத்துவிட்டு தோசைக்கல்லை திருப்பி அதனையும் இதே போல் செய்யவும்.

டிப்ஸ் – 6

dosa kallu cleaning in tamil

கடைசியாக இருப்பு நாறு போட்டு தோசைகளை வேகமாக தேய்க்கவும். பின்னர் கடைசியாக தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளவும்.

டிப்ஸ் – 7

மறுமுறை தோசை ஊற்றும் பொது ஒரு வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு வறுத்துக்கொள்ளவும். அனைத்து இடங்களிலும் படும்படி வறுத்துக்கொள்ளவும்.

டிப்ஸ் – 8

dosa kallu cleaning in tamil

இது போல் மாதம் ஒரு முறை செய்து பாருங்கள் உங்கள் தோசை கல்லில் துரு எதுவும் இருக்காது. தோசை மொறுமொறுவென்று வரும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil