நகைக்கடையில் தங்கத்தின் விலையை கணக்கிடுவது எப்படி?

Find Gold Calculation Rate in Tamil

Find Gold Calculation Rate in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக நாம் நகைக்கடைக்கு சென்று நகை வாங்கும் போது அந்த தங்கத்திற்கு ஒரு விதமாக கணக்கிட்டு விலை சொல்லுவார்கள். அதனை நாம் கேட்டல் செய்கூலி என்பார்கள் சேதாரம் என்பார்கள். அப்பறம் குறிப்பாக அந்த நகைக்கு GST வரியும் சேர்த்து கணக்கிடுவார்கள். அந்த கணக்கை நாம் பார்க்கும் போது ஒன்னும் புரியாது விவரமாக இருப்பவர்கள் தெளிவாக அந்த கணக்கை கேட்டு தெரிந்து கொள்வார்கள். அந்த கணக்கு புரியாதவர்களுக்கு தான் இந்த இப்பதிவு. ஆம் நண்பர்களே நகைக்கடையில் தங்கத்தின் வியையை கணக்கிடுவது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். அத்தகு முன் செய்கூலி, சேதாரம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

தங்க நகை வாங்கும் போது செய்கூலி, சேதாரம் என்பது என்ன?

தங்கத்தை உருக்கி, விதவிதமான டிசைன்களில் வளையல்கள், ஜிமிக்கி, நெக்லஸ் செய்யும் போது, தங்கமானது பொடியாக, துகளாக சிதறும். இதன் காரணமாக உங்கள் நகையின் டிசைனில் எவ்வளவு நுண்ணிய வேலைப்பாடுகள் உள்ளதோ, அவ்வளவு சேதாரமும் அதிகமாக இருக்கிறது. அதேபோல் அந்த நகையை செய்தவர்களுக்கு தனியாக செய்கூலியும் நிர்ணகிக்கப்படுகிறது. சரி வாங்க நாம் இப்பொது நகைக்கடையில் தங்கத்தின் விலையை கணக்கிடுவது எப்படி? என்பதை படித்தறியலாம்.

நகைக்கடையில் தங்கத்தின் விலையை கணக்கிடுவது எப்படி?

உங்கள் கேள்விக்கான பதில் இதோ..

நீங்கள் வங்கிக்கும் நகையின் எடை ஒரு கிராம் என்று வைத்துக்கொள்வோம். இந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5000/- என்று வைத்து கொள்வோம். ஆகவே ஒரு கிராம் நகைக்கு சேதாரம் என ஒன்று நிர்ணகிக்கப்பட்டிருக்கும். இந்த சேதாரமானது ஒவ்வொரு கடைகளுக்கும் வேறுபட்டு இருக்கும். இருப்பினும் அனைத்து நகைக்கடைகளிலுமே சேதாரம் என்பது குறைந்தபட்சம் 6 சதவீதம் முதல் அதிகபட்சம் 20 சதவீதம் வரை நிர்ணகிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக நாம் வாங்கிருக்கும் நகையின் டிசைனை பொறுத்து இந்த சேதாரமான நிர்ணகிக்கப்பட்டிருக்கும். அதிக வேலைப்பாடுகள் கொண்ட நகைக்கு சேதாரம் அதிகமாக இருக்கும். அதேபோல் குறைந்த வேலைப்பாடுகள் கொண்ட நகைக்கு சேதாரம் குறைந்ததாக இருக்கும். இந்த குறிப்பாக 916 நகைகளுக்கு 6% முதல் 20% வரை சேதாரம் இருக்கும். 916 இல்லாத நகைகளுக்கு சேதாரமானது குறைவாக தான் இருக்கும். சரி வாங்க தங்க நகையை கணக்கிடும் முறையை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Find Gold Calculation Rate in Tamil – உதாரணத்திற்கு:

ஒரு கிராம் தங்கத்தின் விலைரூ.5,000/-
நகையின் எடை1.000 கிராம்
சேதாரம் நாம் 12 சதவீதம் என்று வைத்து கொள்வோம்0.120%
இதனை கூட்டுங்கள்1.120
பின் கூட்டி வந்த விடையுடன் 5000-த்தை பெருக்க வேண்டும் (1.120X5000) பெருக்கிய பின் கிடைக்கும் விடை தான் இது 👉ரூ.5,600
நீங்கள் வாங்கி இருக்கும் நகைக்கு செய்கூலி என ஒன்று நிர்ணகிக்கப்பட்டிருக்கும் அது பெரும்பாலும் 300 ரூபாயாக இருக்கலாம். ஆக நாம் 5600 ரூபாயுடன் 300 ரூபாயை கூட்டிக்கொள்வோம் கூடிய பின் வந்த விடை தான் இது 👉ரூ.5,900
GST வரி CGST 1.5% (Centre Government Tax) + SGST 1.5% (State Government Tax) = 3% (5900 X 3%)ரூ.177
அனைத்தையும் கூடிய பின் ஒரு கிராம் தங்கத்தின் விலை 👉ரூ.6,077

 

நீங்கள் பொதுவாக ஒரு கிராம் நகை வாங்க போரிங்கான செய்கூலி + சேதாரம் + GST + தங்கத்தின் அன்றைய விலை என்று அனைத்தும் கூடிதான் அந்த நகைக்கு விலை கணக்கிடப்படுகிறது. இப்போ உங்களுக்கு இந்த கணக்கு எப்படி போட வேண்டும் என்று தெரிந்திருக்கும் என நம்புகிறேன். முழுமையாக இந்த பதிவை படித்ததற்கு மிக்க நன்றி.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information In Tamil