Headphone Use Side Effects in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் ஹெட்போன் பயன்படுத்துவதினால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக இன்றைய காலகட்டத்தில் போன் இல்லாமலும் ஹெட்போன் இல்லாதவர்களையும் பார்க்கவே முடியாது. அதோடு பெரியவர்களை விட சின்ன குழந்தைகள் தான் அதை அதிகமாகவும் பயன்படுத்துகிறார்கள்.
பொதுவாக வேலைக்கு செல்பவர்கள், மனம் கொஞ்சம் ஓய்வோடு இருக்கவேண்டும் என்பதற்காக ஹெட்போன் கொண்டு பாடலை கேட்பார்கள், ஆனால் இதனை தொடர்ந்து வழக்கமாக செய்துகொண்டிருந்தால் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது, அவற்றை என்னவென்று தெரிந்துகொள்வோம் வாங்க.
குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை தடுக்கும் முறை..! |
ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:
பொதுவாக நாம் உறங்கும் பொழுதும், பேருந்துகளில் பயணிக்கும் பொழுதும் ஹெட்போனில் பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்திருப்போம், ஆனால் இதனை அதிகமாக பயன்படுத்தும் பொழுது என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி அறிந்திருக்க மாட்டோம். ஹெட்செட் இல்லாமல் பாடலை கேட்டால் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்று அறிந்து, ஹெட்செட்டை அதிகமாக பயன்படுத்துக்கிறோம்.
நாம் தொடர்ந்து ஹெட்போன்களை பயன்படுத்தி வரும் பொழுது நம் காதில் இருக்கும் சவ்வுகள் பாதிப்பு அடைந்துவிடும், இதனால் காதுகள் கேட்காத நிலை ஏற்படும். பாடல்களின் ஒலிகளை அளவுக்கு அதிகமாக வைத்து கேட்டும் பொழுது காதுகள் பலமாக பாதிப்பு அடையும் நிலைமைகள் ஏற்படுகின்றன.
ஹெட்போன்களை பயன்படுத்துவதினால் காதுக்கு மட்டும்தான் பாதிப்பு அடையும் என்று நினைக்காதீர்கள், ஹெட்போன்களை அதிகமாக பயன்படுத்தும் பொழுது கண், காது மற்றும் மூளையை பாதிப்பு அடைய செய்கிறது.
ஹெட்போன் பயன்படுத்தும் முறை:
நீங்கள் ஹெட்போன் அதிகமாக பயன்படுத்துபவராக இருந்தால், முதலில் தரமான ஹெட்போன்களை பயன்படுத்தவேண்டும். விலை குறைந்த அளவில் கிடைக்கிறது என்று அதை வாங்கி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
நீங்கள் ஹெட்போன் பயன்படுத்தும் பொழுது அதனுடைய ஒலிகளை குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது, அதாவது 100% அளவில் ஒலிகளை வைத்து பாடல்கள் கேட்காமல், 50% அல்லது 60% வரை வைத்து பாடல்கள் கேட்கவேண்டும். இப்படி கேட்பதினால் உங்களுடைய காதுகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.
முக்கியமாக மற்றவர்கள் பயன்படுத்தும் ஹெட்போன்களை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்ப்பது நல்லது, ஏனென்றால் காதுகளில் எந்த விதமான தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கிறது.
ஹெட்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதை குறைப்பது நல்லது, சிறிது நேரம் உங்களுடைய காதுகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அதன்பிறகு மறுபடியும் உபயோகிக்கலாம்.
எனவே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் , நீங்களும் ஹெட்போன்களை பயன்படுத்தும் பொழுது குறைவாக பயன்படுத்துங்கள், மேலும் சாலைகளில் செல்லும் பொழுது ஹெட்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். இதனால் பலரும் விபத்துக்கு உள்ளாகிறார்கள். அதனால் ஹெட்போன்களில் பாடல் கேட்பதற்கு பதில் இயற்கையின் ஒலிகளை கேட்டு மகிழுங்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |