How Do Airplanes Fly in Tamil
வணக்கம் நண்பர்களே. தினமும் நம் பொதுநலம்.காம் பதிவில் பல பயனுள்ள தகவல்களை பற்றி அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்று விமானம் எப்படி பறக்கிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக அனைவருக்குமே விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனென்றால் அது வானத்தில் வெகு தொலைவில் பறக்கிறது என்று. ஆனால் அது எப்படி பறக்கிறது என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா. அப்படி யோசித்து இருக்கும் நபர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து விமானம் எப்படி பறக்கிறது என்பதை தேர்ந்து கொள்ளுங்கள்.
விமானம் எப்படி பறக்கிறது..?
முதலில் மனிதனை பறக்க வைப்பதற்கு பல முயற்சிகள் செய்து இருக்கிறார்கள். ஆனால் அதில் பல தோல்விகள் ஏற்பட்டது. பிறகு ரைட் சகோதர்கள் விமானத்தை கண்டுபிடித்தார்கள். இன்று பல வகையான விமானங்கள் உள்ளன.
விமானம் பறப்பதற்கு முக்கிய காரணம் ஏர்ஃபாயில் தொழில்நுட்பம். விமானத்தின் இறக்கை விமானத்தை மேல் எழும்பி பறக்க உதவுகிறது. விமானத்தின் இறக்கை வளைந்து இருக்கும். இதை கௌ ஷேப் என்று அழைப்பார்கள். இந்த வளைந்த இறக்கை ஆனது இறக்கையில் மோதும் காற்றை கீழே தள்ளுகிறது. அதாவது இங்கு நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்கிறது. இறக்கை காற்றை கீழே தள்ளும் போது காற்றானது விமானத்தை மேலே பறக்க செய்கிறது. விமானம் மேலே பறக்க தொடங்கியதும் சீராகவும் நேராகவும் பறப்பதற்கு அதன் எஞ்சின் செயல்படுகிறது. இன்று பயன்படுத்தப்படும் நவீன விமானங்களில டர்போகன் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.விமானம் மேல் செல்லும் போது டார்ச் அடித்தால் பைலட்டுக்கு கண் கூசுமாம்..! இது யாருக்கு தெரியும்..? |
இந்த டர்போகன் எஞ்சின்கள் அதிகப்படியான உந்துசக்தியை எழுப்பி விமானத்தை நேராக பறக்க செய்கிறது. விமானம் பறப்பதற்கு விமானத்தில் பொருத்தப்பட்டு உள்ள மூன்று பாகங்கள் மிகவும் உதவுகின்றன. அதாவது Flap, Slat, Aileron ஆகும்.
விமானம் கீழிருந்து மேலெழும்பும் போது Flap, Slat -யை கீழே இறக்குவார்கள். இது இறக்கையின் பரப்பளவையும் ஏர்ப்ளையின் வளைவையும் அதிகப்படுத்தும். இதனால் அதிக போர்ஸ் உண்டாகி விமானம் மேலே எழும்புகிறது.
மேலே எழும்பி ஒரு குறிப்பிட்ட தொலைவில் பறக்க ஆரம்பித்தவுடன் Flap, Slat-யும் அது இருந்த பழைய இடத்திலேயே வைத்து விடுவார்கள். நேராக பறக்கும் விமானத்தை கீழே இறக்க விமானத்தின் பின்புறத்தில் உள்ள எலவேட்டரை கீழே இறக்குவார்கள்.
அதேபோல் விமானம் பறக்கும் அளவை அதிகரிக்க எலவேட்டரை மேலே எழுப்புவார்கள். விமானத்தின் திசையை மாற்ற விமானத்தின் பின்புறத்தில் செங்குத்தாக உள்ள ரேடரை திருப்பினால் போதும். ஆனால் அப்படி செய்தால் விமானத்தில் உள்ள பயணிகள் அதிர்வை உணர்வார்கள்.
விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..? |
எனவே விமானத்தின் இறக்கையில் உள்ள Aileron-களில் ஒன்றை மேல்நோக்கியும் மற்றொன்றை கீழ்நோக்கியும் வைத்தால் சுலபமாக விமான திரும்பும்.
அதேபோல் விமானம் கீழே இறங்க விமானத்தின் இறக்கையில் உள்ள Flap, Slat-யை மேலே தூக்குவார்கள். மேலும் அதில் உள்ள Spoiler-யும் தூக்குவார்கள். இது விமானம் தரை இறங்க உதவுகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |