பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..?

How to divide native property in tamil

Native Property in Tamil

அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவு முழுவதுமாக படியுங்கள். உங்களுக்கு விடை கிடைத்து விடும். அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி வீட்டில் இருக்கும் நபர்களுக்கு வரும் ஒரு பிரச்சனை என்னவென்றால் அது சொத்து பிரச்சனை தான். என்ன தான் அண்ணன் தம்பிகள் பல விஷயங்களில் விட்டு கொடுத்து சென்றாலும் சொத்து என்று வந்தால் நீ யாரோ நான் யாரோ என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். சரி வாங்க நண்பர்களே நாம் பதிவுனுள் சென்று பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..?

பூர்வீக சொத்து என்றால் என்ன..?

 பூர்வீக சொத்து என்பது நம் பாட்டன், முப்பாட்டன் மற்றும் மூதாதையர் சேர்த்து பாதுகாத்து வரும் சொத்து தான் பூர்வீக சொத்து என்று சொல்லப்படுகிறது. நம் மூதாதையர்கள் அந்த சொத்துக்களை உயில் எழுதி வைக்காமல் போனால் அது பூர்வீக சொத்தாக மாறிவிடும்.  

மூதாதையர் சொத்து என்பது ஆண் வம்சாவளியில் 4 தலைமுறைகள் வரை பரம்பரையாக வந்த சொத்து ஆகும். இது பிறப்பில் இருந்து இந்த வகையான சொத்தின் கீழ் பங்கு கொள்ளும் உரிமை ஏற்படுகிறது. ஆனால் தாய், பாட்டி, மாமா, சகோதரன் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட எந்தவொரு சொத்தும் மூதாதையர் சொத்தாக கருதப்படாது.

பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..?

பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..?

பொதுவாக ஒருவர் சுயமாக சேர்த்து வைத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எப்பொழுதும் யாருக்கு வேண்டுமானாலும் பிரித்தோ அல்லது யார் பெயரிலும் எழுதி  வைக்கலாம்.

ஆனால் அந்த சொத்துக்களை முறையாக கவனிக்காமலும் அதை யார் பெயரிலும் உயில் எழுதி வைக்காமலும் போனால் அது பூர்வீக சொத்தாக மாறிவிடும். இந்த சொத்துக்கள் வாரிசு உரிமை சட்டத்தின் அடிப்படையில் முதல் நிலை வாரிசுகளுக்கு சேர்ந்து விடும்.

வாரிசுகள் 3 அல்லது 4 நபர்கள் இருந்தால் அந்த சொத்தில் பாக பிரிவினை செய்ய வேண்டும். பாக பிரிவினை செய்யும் போது 4 பேருக்கும் சரிசமமாக பிரிக்க வேண்டும். அதுபோல தனித் தனியாக பாக பிரிவினை செய்யும் போது அதை தனி பட்டாவாக மாற்றி கொள்ள வேண்டும்.

மேலும் இந்த பூர்வீக சொத்தில் பாகம் வேண்டாம் என்று சொல்பவர்கள் அதற்கு விடுதலைப் பத்திரம் எழுதி கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பாக பிரிவினை செய்த இந்த சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் தானமாகவோ அல்லது கிரையமாகவோ கொடுக்கலாம்.

புறம்போக்கு நிலம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil