வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் | How to Voter ID Correction in Tamil
இந்திய குடிமகன் என்பதற்கு முக்கியமான சான்றாக விளங்குவது வாக்காளர் அடையாள அட்டை. தேர்தல் வரும்போது ஒவ்வொருவரும் வாக்குகள் அளிப்பதற்கு முக்கிய ஆவணமாக விளங்குவது இந்த வாக்காளர் அடையாள அட்டை. அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற வாக்காளர் அட்டையை நாம் பாதுகாப்பது மிகவும் அவசியம். வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் அதாவது உங்களுடைய பெயர், தந்தையின் பெயர் அல்லது பிறந்த தேதி ஏதேனும் பிழை இருந்தால் இ சேவை மையத்தை அணுகி உங்களுடைய வாக்காளர் அட்டையை திருத்தம் செய்துகொள்ளலாம். வெளியில் செல்ல முடியாதவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பிழையினை சுலபமாக திருத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் ஒவ்வொரு ஸ்டெப்பாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? |
How to Voter ID Correction Online Tamilnadu
ஸ்டேப் 1:
முதலில் கூகுளில் NVSP என்று டைப் செய்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் 2:
பிறகு Search in Electoral Roll என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப் 3:
அவற்றில் உங்களுக்கான மொழியை தேர்வு செய்யவும். தேர்வு செய்த பிறகு Select State என்ற இடத்தில் நீங்கள் இருக்கக்கூடிய State Tamilnadu என்பதை குறிப்பிடவும்.
ஸ்டேப் 4:
ஸ்டேட் தேர்வு செய்த பிறகு உங்களுடைய ஏரியாவை குறிப்பிட வேண்டும்.
அதன் பிறகு Applicants Details என்பதில் உங்களுடைய பெயர், கீழே இருக்கக்கூடிய Surname என்பதில் சரியான பெயரினை நிரப்பவும்.
ஸ்டேப் 5:
நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்தால் பக்கத்தில் பெயரானது தமிழ் மொழியில் தானாகவே வந்துவிடும்.
ஸ்டேப் 6:
கீழே ஸ்க்ரோல் செய்து Part Number Of Electoral Roll என்பதில் உங்களுடைய Electoral Roll எண்ணை குறிப்பிட வேண்டும். அடுத்து உங்களுடைய Serial Number குறிப்பிட வேண்டும்.
ஸ்டேப் 7:
உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கக்கூடிய Voter ID கார்டு எண்ணை நிரப்ப வேண்டும். அதன் பிறகு கீழே ஸ்க்ரோல் செய்தால் உங்களுக்கு எந்த பிழையினை மாற்ற வேண்டும் என்று கேட்கும். உங்களுக்கு வாக்காளர் அட்டையில் என்ன பிழை இருக்கிறதோ அதனை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டேப் 8:
உதாரணத்திற்கு பெயர் பிழையாக உள்ளது என்றால் Name ஆப்ஷனை தேர்வு செய்து கீழே உள்ள கட்டத்தில் பெயர், Surname கொடுக்க வேண்டும்.
ஸ்டேப் 9:
பிறகு கீழே Upload Supporting Document என்பதில் உங்களுடைய புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும். அடுத்து வயது சான்றிதழ், முகவரி சான்றிதழை இணைக்க வேண்டும்.
ஸ்டேப் 10:
அடுத்ததாக உங்களுடைய Email ID மற்றும் தொலைப்பேசி எண்ணெய் டைப் செய்யவும்.
ஸ்டேப் 11:
அடுத்து Place என்ற இடத்தில் நீங்கள் எந்த இடத்திலிருந்து Apply செய்கிறீர்கள் என்று இடத்தை குறிப்பிடவும், மற்றும் தேதியினை மறக்காமல் என்டர் செய்யவும்.
ஸ்டேப் 12:
இறுதியாக நீங்கள் கொடுத்துள்ளவற்றை ஒருமுறை சரிபார்த்த பிறகு சப்மிட் என்பதை கொடுக்க வேண்டும். Submit கொடுத்தப் பிறகு உங்களது Application Number Generate ஆகிவிடும்.
Voter ID Card ஆன்லைனில் Download செய்வது எப்படி?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information In Tamil |