How to Download Voter ID Card Online in Tamil
பதினெட்டு வயது பூர்த்தி அடைந்துவிட்டாலே உங்களுக்கு வோட் போடும் உரிமை வந்துவிட்டது என்று அர்த்தமாகும். 18 வயது பூர்த்தி ஆகும் முன்பே நீங்கள் இதற்கான ஸ்டெப்ஸ்-களை எடுத்திருக்கவேண்டும். தேர்தல் அட்டைகள் அல்லது வாக்காளர் அடையாள அட்டைகள் அரசாங்கத்தால் வழங்கப்படும் அடையாள அட்டைகளில் ஒன்றாகும். இந்த அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் தகுதியான இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இது நமது கடமை மட்டுமின்றி நம்முடைய உரிமையாகும். இந்த வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைத்திருந்தாலே போதும்.
இந்த காலகட்டத்தில் எல்லாமே மிக எளிதாக மாறிவிட்டது. எதை எடுத்தாலும் ஆன்லைன் வசமாக மாறிவிட்டது. அதனால் மக்களுக்கு மிகவும் எளிதாக ஒன்றாக மாறிவிட்டது. நீங்கள் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருந்தால், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்காக தான் வாக்காளர் அட்டையை ஆன்லைனில் download செய்வது எப்படி என்று இந்த பதிவில் முழுமையாக கூறியுள்ளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
வாக்காளர் அட்டை பெற தேவையான ஆவணங்கள்
நீங்கள் இப்பொழுதுதான் புதிதாக Voter Id apply செய்கிறீர்கள் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில ஆவணங்களை நீங்கள் apply செய்யும்போது சமர்ப்பிக்கவேண்டும்.
- முகவரிக்காக: பாஸ்போர்ட், ஆதார், பயன்பாட்டு பில் போன்ற ஆதாரம்.
- வயதிற்காக: ஆதார் அட்டை, 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ் போன்ற சான்றுகள்.
- அடையாளத்திற்காக: பான் கார்டு, ஆதார், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், எஸ்எஸ்எல்சி சான்றிதழ் போன்ற சான்றுகள்.
- கடைசியாக விண்ணப்பதாரத்தின் புகைப்படம்.
Download Voter ID Online in Tamil
நீங்கள் Voter ID online download அதாவது வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும், இப்படி நீங்கள் ஆன்லைனில் டவுன்லோட் செய்து வைத்துள்ளதால் நீங்கள் போகும் இடமெல்லாம் உங்களது Voter ID Card எடுத்துப்போவது அவசியமில்லை.
ஒரு முறை Voter ID download செய்து உங்களது மொபைலில் வைத்துக்கொண்டால் எப்போ வேண்டுமானாலும் நீங்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
E Voter ID Download Tamil Nadu
நீங்கள் உங்களது வாக்காளர் அட்டை ஆன்லைனில் download செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள steps-ஐ follow செய்யவும்.
- முதலில் voters.eci.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பிறகு அதில் உள்ள Service என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
- அதனைத்தொடர்ந்து Search in Electoral Roll button-ஐ கிளிக் செய்யவும்.
- நீங்கள் உங்களது Voter ID Card ஆன்லைனில் Download செய்ய Search by Details/ Search by EPIC அல்லது Search by Mobile கொண்டு டவுன்லோட் செய்யலாம்.
- அதில் கேட்கப்பட்டுள்ள details-களை நிரப்பவும்.
- கடைசியாக உங்களது E Voter ID Download ஆகிவிடும்.
இந்த எளிமையான steps-களை பயன்படுத்தி மிக எளிதாக நீங்கள் வாக்காளர் அட்டையை ஆன்லைனில் download செய்து கொள்ள முடியும்.
வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்வது எப்படி?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |