வாட்ஸப்பில இனிமேல் இப்படி டெக்ஸ்ட் சென்ட் செய்து பாருங்க

Advertisement

Whatsapp Text Tricks in Tamil

இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார்கள். இதில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். இந்த சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். இந்த வாட்சப் ஆனது எல்லாரும் பயன்படும் வகையில் ஈசியாக இருக்கிறது.

மேலும் இதில் மெசேஜ் மற்றும் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் போன்ற வசதிகள் இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்களிடம் பக்கத்தில் இருக்கும் உணர்வு இந்த வாட்ஸப் மூலம் கிடைக்கிறது. அதனால் தான் இதில் பயனர்களுக்கு உதவும் வகையில் நிறைய வகையான அப்டேட்டுக்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு சூப்பரான அப்டேட்டை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Whatsapp Text Tricks in Tamil nadu

பொதுவாக வாட்ஸப்பில் நிறைய மெசேஜ்களை அனுப்பும் போது தனித்தனியாக காமிப்பதற்கு புல்லட் நம்பர்சில் அனுப்ப வேண்டும் என்று நினைப்போம். நம்பர் கூட டைப் செய்து கொள்ளலாம். ஆனால் புல்லட்களை ஈசியாக வர வைக்கலாம். அது எப்படி என்று அறிந்து கொள்வோம். இது மாதிரி வைப்பதற்கு Formula இருக்கிறது அதனை பற்றி  காண்போம்.

  • புல்லட் வைப்பதற்கு – (Space ) விட்டால் புல்லட் வந்து விடும்.
  • நம்பர்ஸ் வரிசையாக வருவதற்கு 1. (Space ) விட்டு டைப் செய்ய வேண்டும், அடுத்து நீங்கள் டைப் செய்வதற்கு Enter கொடுத்தவுடன் அடுத்த நம்பர் வந்துவிடும்.
  • லைன் வைத்து அனுப்ப வேண்டும் என்றால் அதாவது | இது மாதிரி அனுப்ப வேண்டுமென்றால் >(Space ) விட்டால் இந்த லைன் வந்து விடும்.
  • அடுத்து நீங்கள் அனுப்ப கூடியதை Highlight செய்து காட்ட வேண்டுமென்றால் ஆரம்பிக்கும் போது ‘ இந்த Symbol போட வேண்டும், அது போல முடிக்கும் போதும் போட வேண்டும்.
  • போல்ட் செய்வதற்கு *Message* என்று டைப் செய்ய வேண்டும்.
  • Italic எழுத்தில் சென்ட் செய்வதற்கு _ Message_ டைப் செய்தால் போதும்.
  • நீங்கள் டைப் செய்யும் எழுத்தை அடித்து கட்ட வேண்டுமென்றால் ~Message~ என்று டைப் செய்தால் போதுமானது.

வாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link

 

Advertisement