வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாட்சப்பில் அள்ளி விடுது அப்டேட்… என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..

Updated On: March 18, 2024 2:28 PM
Follow Us:
whatsapp status mention notification new update in tamil
---Advertisement---
Advertisement

Whatsapp Status Mention Notification New Update

நம் முன்னோர்களின் காலத்தில் ஊருக்கு ஒரு டெலிபோன் வசதி இருந்தது. அதன் பிறகு பட்டன் போன் இருந்தது. நாளடைவில் கேமரா போனாக மாறியது. அதன் பிறகு ஸ்மார்ட் போன் வந்தது. இப்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார்கள். பட்டன் போன் பயன்படுத்துகிறவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். இந்த வலைத்தளங்களில் வாட்ஸப் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இவை அனைவரும் பயன்படுத்தும் வகையில் இருக்கிறது. இதில் பயனர்களை மகிழ்விக்கும் வகையில் பல அப்டேட்டுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் என்ன அப்டேட் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

வாட்ஸப் நியூ அப்டேட்:

வாட்ஸப் 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு பேஸ்புக் நிறுவனம் ஆனது 2014-ம் ஆண்டு வாங்கியது. அதன் பிறகு பயனர்களுக்கு புது புது அப்டேட்டை வழங்கியது. ஆரம்பத்தில் வாட்சப்பில் மெசேஜ் மட்டும் தான் அனுப்ப கூடிய வசதியில் இருக்கிறது. அதன் பிறகு தான் வாட்ஸப் கால், வீடியோ கால் ஸ்டேட்டஸ், வாய்ஸ் மெசேஜ் போன்ற வசதிகளை அறிமுகப்படுத்தியது.

பயனர்களை தக்க வைத்து கொள்ளவும், அதிகரிக்கவும் வாட்சப்பில் பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இப்போது நீங்கள் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் போது அதில் குறிப்பிட்ட நபரை மென்ஷன் செய்யும் வசதியை கொண்டு வர போகிறது. சுருக்கமாக சொன்னால் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைக்கும் போது குறிப்பிட்ட நபரை டேக் செய்து வைக்க முடியும். இந்த வசதியை தான் வாட்ஸப்பிலும் கொண்டு வர போவதாக மெட்டா கூறியுள்ளது. நீங்கள் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் போது டேக் செய்து வைத்தால் சம்மந்தப்பட்டவருக்கு Notification சென்று விடும்.

இந்த அப்டேட் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவை இன்னும் செயல்பாட்டில் தான் இருக்கிறது விரைவில் எல்லா பயனர்களுக்கு கிடைக்கும். இந்த அப்டேட் எல்லா பயனர்களுக்கு கிடைத்ததும் அப்டேட் செய்கிறோம். அது வரைக்கும் எங்களது தளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now