தொலைந்து போன போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தாலும் கண்டுபிடிக்கலாம்..

Advertisement

தொலைந்து போன போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தாலும் அதனை கண்டுபிடிக்கலாம் 

பொதுவாக இன்றைய காலத்தில் பலரும் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த ஸ்மார்ட் போன் ஆனது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுகிறார்கள். இதனை பயன்படுத்தும் போது சில சூழ்நிலைகளில் காணாமல் போகிவிடும். இதனை IMEI நம்பர் வைத்து கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இந்த நம்பர் வைத்து கண்டுபிடிப்பதற்கு நெட்ஒர்க் தேவைப்படும். மேலும் போன் ஆனது ஆனில் இருந்தால் தான் கண்டுபிடிக்க முடியும்.

சில சூழ்நிலைகளில் போன் எங்கே வைத்தோம் என்றே தெரியாமல் இருக்கும், அதுமட்டுமில்லமால் அந்த போன் ஆனது சுவிட்ச் ஆப் இருக்கும். இதனை கண்டுபிடிக்க முடியாது என்று கூறுவார்கள். இதற்கான சிறந்த அப்டேட் ஒன்றை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Find My Phone Even If Switched Off in Tamil:

மொபைல் போன் ஆனது சுவிட்ச் ஆப் ஆகிருந்தாலோ அல்லது டவர் இல்லாமல் இருந்தாலும் அதனை கண்டுபிடிப்பதற்கான அம்சமானது இந்த ஆண்டு வரவிருக்கும் ஆண்ட்ராய்டு 15 OS-ல் வருகிறது. இந்த ஆண்டு வருகின்ற மே மாதம் மக்களால் எதிர்பார்க்கப்படும் கூகுள் நிறுவனத்தின் IO 2024 கிரியேட்டர் மாநாடை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்பு குறித்த அப்டேட்டுகள் வெளியாகிவுள்ளது.

இதுவரை காணாமல் போகிருக்கும் போன் ஆனது சுவிட்ச் ஆப் ஆகாமல் இருந்தால் தான் கண்டுபிடிக்க முடியும். இந்த நிலையானது ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டில் முழுவதுமாக மாற போகிறது. அதாவது இந்த அம்சமானது ஆப்பிள் ஐபோனில் உள்ள பைண்ட் பை நெட்ஒர்க் போலவே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

IMEI நம்பர் என்பது என்ன தெரியுமா..!

இதன் மூலம் பயனர்கள் இன்டர்நெட் மற்றும் நெட்ஒர்க் இல்லாமலே தங்களின் காணாமல் போனை மொபைல் போன்கள் மூலம் கண்டறியலாம். கடந்த ஆண்டு கூகுள் மாநாட்டில் ஆப்லைன் ட்ராக்கிங்  மற்றும் மூன்றாம் தரப்பு ட்ராக்கர்கள் கொண்ட கூகுளின் பைண்ட் மை நெட்வொர்க் எக்ஸ்டென்ஷன் செயல்படுத்தப்படும் என்று கூறினார்கள். ஆனால் இன்றுவரை அவை செயல்படுத்தவில்லை.

ஏனென்றால் இந்த அம்சமானது தனியுரிமை பிரச்சனைகள் இருப்பதால் அதனை செயல்படுத்துவதற்கு கூகுள் நிறுவனம் பல முயற்சிகளை செய்தது. இப்போது இந்த பிரச்சனை எல்லாம் நீங்கி புது விதமான அப்டேட்டை ஆண்ட்ராய்டு 15-ல் கூகுள் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இந்த அம்சத்தை பயன்படுத்தி பல இக்கட்டான சூழ்நிலையில் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் போன்களை கண்டுபிடிப்பதற்கு உதவுகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link
Advertisement