Scam கால்ஸிற்கு TRAI-யின் அப்டேட்

Advertisement

TRAI Super Update Avoid Spam Calls

இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் என்பது வளர்ந்து கொண்டேஇருக்கிறது. இதனால் நன்மைகளும் இருக்கிறது, தீமைகளும் இருக்கிறது. அதனால் இதனை பாதுகாப்பாக கையாளுவது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் அனைவரும் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறோம். இந்த ஸ்மார்ட் போன்களில் பல விதமான ஆப்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்களில் நாம் மெசேஜ் மற்றும் கால் போன்றவற்றை பேசுகிறோம். நாம் பயன்படுத்தும் எல்லா ஆப் மற்றும் Calls-களில் scam நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இதனை அறிந்து கொள்ளும் வகையில் trai ஒரு அப்டேட்டை வழங்கியுள்ளது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

TRAI Update:

மக்களிடம் பல விதமான மோசடிகள் நடக்கிறது, நம்முடைய போனிற்கு பல கால்ஸ் வருகின்றது, அதில் பாதி ஸ்கேம் கால்ஸ் ஆக இருக்கிறது. முக்கியமான வேலையில் இருக்கும் போது ஸ்கேம் கால்ஸ் வரும் போது நமக்கு டென்ஷானை ஏற்படுத்தும். அதனால் தான் பயனர்களுக்கு உதவும் வகையில் TRAI ஒரு அப்டேட் வழங்கியுள்ளது.  தெரியாத எண்ணிலிருந்து கால் வந்தால் அது யார் என்று தெரிந்து கொள்வதற்கு ட்ரூ காலர் ஆப் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் trai இந்த அறிவிப்பால் எந்த விதமான ஆப்பும் பயன்படுத்தாமல் இலவசமாக கிடைக்க போகிறது. அது  என்ன

TRAI என்பதன் விரிவாக்கம்

அது என்ன அப்டேட் என்றால் போனில் வரும் கால்ஸ்களுக்கு யார் கால் செய்கிறார்கள் என்று அவர்களின் பெயரை டிஸ்ப்பிலேவில் காட்டும் படி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை சில எண்கள் நிறுவனம் சம்மந்தப்பட்டதாக இருந்தால் அந்த நிறுவனத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட நபரின் பெயரைக்  காட்டும் படி இருக்க வேண்டும் TRAI குறிப்பிட்டுள்ளது.

டெலிகாம் நிறுவனங்களில் எந்த எண்ணில் சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளதோ அவர்களின் பெயரை திரையில் காட்டும் வகையில் இந்த காலர் ஐடி சிஸ்டம் செயல்படும். இந்த சேவையானது இந்தியா முழுவதும் வர இருப்பதால் உங்கள் போனுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளை எளிதாக தவிர்க்கலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement