பணவீக்கம் என்றால் என்ன..? | Inflation Information in Tamil

Advertisement

  Inflation பற்றிய தகவல் | Inflation Meaning in Tamil

அனைவருக்கும் வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான தகவலை பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். அது என்னவென்றால் Inflation பற்றிய தகவல் தான். Inflation என்பதை பற்றி தெளிவாக நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதன் அர்த்தம் என்ன Inflation என்றால் என்ன என்பதை பற்றி எல்லாம் இன்றைய பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

Inflation என்றால் என்ன?

 inflation meaning in tamil

Inflation என்பதன் அர்த்தம் பணவீக்கம் என்பது ஆகும். பணவீக்கம் என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் குறைவதையே குறிக்கிறது.

பொதுவாக விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம்.

இதனை வாக்கர் அதிக பட்ச பணம் குறைந்த பட்ச பொருட்களை துரத்தி செல்வது தான் பணவீக்கம் என்கிறார். இப்படி விலைவாசியானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதையே பணவீக்கம் என்று கூறலாம்.

பண வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

  1. உற்பத்தி மற்றும் பரிமாற்ற செலவின் உயர்வு.
  2. தேவை – உற்பத்தி பொருந்தாமை.
  3. சரக்கு மற்றும் சேவைகளின் வரி அதிகரிப்பு.
  4. அரசின் நிதி பற்றாக்குறை.
  5. பணப்பட்டுவாடா அதிகரிப்பு.
  6. கருப்புப்பணம்.

பணவீக்கத்தின் விளைவு:

  1. நாணயத்தின் வாங்கும் திறன் குறையும்.
  2. சேமிப்பு மற்றும் முதலீடுகள் சரியும்.
  3. முதலீடு, பங்குகள் போன்ற நிதி சொத்துக்கள் வீடுகள், நிலம் போன்ற அசையா சொத்துக்களாக மாற்றப்படும்.
  4. உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடையும்.

பணவீக்கத்தின் வகைகள்:

பணவீக்கம் நான்கு வகைப்படும். அவை,

  1. தவழும் பணவீக்கம் – தவழும் பணவீக்கம் என்பது மிக மெதுவான அல்லது குறைவான விகிதத்தில் பணவீக்கம் விகிதம் இருப்பதாகும்.
  2. நடக்கும் பணவீக்கம் – பொருட்களின் விலை ஏற்றம் மிதமானதாக இருப்பதை நடக்கும் பணவீக்கம் என கூறுகின்றனர்.
  3. ஓடும் பணவீக்கம் – ஆண்டிற்கு பொருட்களின் விலை ஏற்றம் 10 விகிதத்துக்கு மேல் இருக்கும் பணவீக்கம் ஓடும் பணவீக்கம் எனப்படுகிறது 10 முதல் 20 விகிதமாக பொருட்களின் விலை உயர்வு இருக்கும்.
  4. தாவும் பணவீக்கம் – தாவும் பணவீக்கத்தில் பொருட்களின் விலை உயர்வு 20 முதல் 100 விகிதமாக அல்லது அதற்கு மேலாகவோ இருக்கும்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள்:

  1. உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் உற்பத்தியை உயர்த்தினால் தேவை மற்றும் அளிப்பு பொருந்தாமையை குறைக்க முடியும்.
  2. நிதி பற்றாக்குறை ஏற்படுவதை அரசு தவிர்க்க வேண்டும்.
  3. சிறந்த நிதி மற்றும் பொருளாதார கொள்கைகள் அவசியம்
  4. அத்தியாவசிய பொருட்களின் பதுக்கல்களை கட்டுப்படுத்த வேண்டும்.

பணத்தை சேமிப்பது நல்லதா முதலீடு செய்வது நல்லதா

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement