ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி? | Jan Dhan Yojana Scheme in Tamil

Advertisement

ஜன் தன் யோஜனா திட்டம் என்றால் என்ன.? | ஜன்தன் வங்கி கணக்கு ஆரம்பிப்பது எப்படி?

Jan Dhan Yojana Scheme in Tamil:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் ஜன்தன் வங்கி கணக்கு தொடங்குவது எப்படி? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இந்த ஜன் தன் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2014 ஆகஸ்டு 28-ஆம் நாள் அன்று புதுதில்லியில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கமானது வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு  வகையில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7 1/2 கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதிகளுடன் வங்கி கணக்கு தொடங்கப்படுகிறது.

நாடு முழுவதும் மாநில தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஜன்தன் திட்டமானது தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால் மட்டும் போதும். வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை.

சரி இப்பொழுது ஜன்தன் வங்கி கணக்கு ஆரம்பிப்பது எப்படி, யாரெல்லாம் இந்த ஜன்தன் வங்கி கணக்கை தொடங்கலாம், இதற்கான தகுதி, வயது மற்றும் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஜன்தன் வங்கி கணக்கு தொடங்குவது எப்படி? | Jan Dhan Yojana Scheme in Tamil:

விண்ணப்பம் கிடைக்கும் இடம்:-

இந்த பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கை தொடங்க. பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனாவின் https://pmjdy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அங்கு விண்ணப்பங்களை டவுன்லோட் செய்யலாம் அல்லது கீழ் கொடுக்கப்பட்டுள்ள வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

ஜன்தன் வங்கி கணக்கு ஆரம்பிப்பது எப்படி – தேவைப்படும் ஆவணங்கள்:-

ஆதார் அட்டை அல்லது ஆதார் எண் தங்களிடம் இருந்தால் அதனை பயன்படுத்தி இந்த ஜன்தன் வங்கி கணக்கை துவங்கலாம்.முகவரி மாறி இருந்தால் தற்போதைய முகவரி சான்றிதழ் போதுமானது. செல்லுபடி ஆகும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்று வைத்து வங்கி கணக்கு துவங்க முடியும்.

  1. வாக்காளர் அடையாள அட்டை
  2. ஓட்டுனர் உரிமம்
  3. பான் அட்டை
  4. பாஸ்போட் இந்த ஆவணங்களில் உங்கள் முகவரி இருந்தால் இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஜன்தன் வங்கி கணக்கை துவங்கலாம்.
  5. ஆதார் அட்டை இல்லை என்றால் அவர்கள் முதலில் அதற்காக பதிவு செய்த பின்னரே சமர்ப்பிக்க வேண்டும்.
  6. விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சமர்ப்பிக்கவேண்டும்

ஜன்தன் வங்கி கணக்கு தொடங்குவது எப்படி – வயது வரம்பு:

18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைவரும் இந்த வங்கி கணக்கை துவங்கலாம்.

ஜன்தன் கணக்கு தொடங்குவது எப்படி – இந்த வங்கி கணக்கின் சிறப்பு அம்சங்கள்:-

  • ஜன்தன் யோஜனா திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க தேவையில்லை.
  • வங்கி கணக்கு தொடங்குவோருக்கு 2,00,000/- ரூபாய் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.
  • இந்த வங்கி கணக்கை துவங்கிய 6 மாத காலம் உரியப் பரிவர்த்தனைகளை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10,000/- ரூபாய் ஓவர் ட்ராப்ட் வசதி அளிக்கப்படுகிறது.
  • இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஓய்வூதியம் மற்றும் மற்ற காப்பீடு சேவைகளை மிகச் சுலபமாக அணுகலாம்.
  • இந்த வங்கி கணக்கை வைத்திருப்பவர்கள் இறக்க நேரிட்டால் பயனர்களுக்கு 30,000/- ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.

Jan Dhan Yojana Scheme in Tamil – பயன்கள்:-

  • இந்த வங்கி கணக்கை தொடங்கியவர்களுக்கு வீட்டு உபயோக சமையல் எரிவாயுக்கான அரசின் மானியம் பெற முன்னுரிமை அளிக்கப்படும்.
  • இதர அரசின் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கான அனைத்து தொகைகளும், சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
  • இந்த திட்டம் மூலம் சேமிப்பு, கிரெடிட், காப்பீடு, ஓய்வூதியம், குறைந்தபட்ச வருமானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறும் வண்ணமும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி?

ஜன்தன் வங்கி கணக்கு Online Apply – எந்த வங்கியில் இந்த ஜன்தன் வங்கி கணக்கை துவங்கலாம்?

கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வங்கிகளிலும் இந்த வங்கி கணக்கை துவங்கலாம்.

  1. Allahabad Bank 
  2. Andhra Bank
  3. Axis Bank
  4. Bank of Baroda
  5. Bank of India
  6. Central Bank of India
  7. city Union Bank
  8. Corporation Bank
  9. dena Bank
  10. federal Bank
  11. HDFC Bank
  12. ICICI Bank
  13. IDBI Bank
  14. Indian Bank
  15. Indian overseas Bank
  16. industrial Bank
  17. Jammu and Kashmir Bank
  18. Karur Vysya Bank
  19. Lakshmi Vilas Bank
  20. Oriental Bank
  21. Punjab sind Bank
  22. Punjab national Bank
  23. RBL Bank
  24. South Indian Bank
  25. State Bank of India
  26. syndicate bank
  27. UCO Bank
  28. Union Bank of India
  29. United Bank of India
  30. Vijaya Bank
  31. yes Bank
APPLICATION FORM DOWNLOAD  HERE>>

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement