Kaluthaikku Theriyuma Karpoora Vasanai
அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்க பொதுநலம்.காம் பதிவை படித்து பயன்பெறுங்கள். நாம் பழமொழிகள் பல கேள்விபட்டிருப்போம். நாம் தெரிந்து கொண்ட பழமொழிகளுக்கு பின் இருக்கும் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இன்று நாம் “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்ற சொல்லுக்கு பின் இருக்கும் அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..? |
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்ல காரணம்:
அந்த காலத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு பழமொழியை கூறினார்கள். அவர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு விஷயங்களை கூறுகின்றன. ஒவ்வொரு பழமொழிக்கு பின்னாலும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியை பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். ஏன் இந்த பழமொழியை நாம் படித்திருப்போம். அதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்திருப்போம்.
இந்த பழமொழியை வைத்து கழுத்தைக்கு கற்பூர வாசனை எப்படி தெரியும் என்றும் கிண்டலாக சொல்வோம். ஆனால் இந்த பழமொழிக்கு இது உண்மை காரணம் இல்லை. அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சங்க காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் படுத்து உறங்குவதற்கு பாய் தான் பயன்படுத்தினார்கள். அந்த பாய் புல் கொண்டு தயாரித்தார்கள். அந்த புல்லுக்கு கோரைப்புல் மற்றும் கற்பூர புல் என்று இரண்டு வகைகள் உண்டு.
அந்த காலத்தில் இந்த கோரைப் புல்லுக்கு கழு என்று வேறு பெயர் உண்டு. இந்த கோரைப் புல்லை கொண்டு பாய் பின்னும் போது கற்பூர வாசம் வரும்.
“கழு என்ற கோரைப் புல்லை பதப்படுத்தி பாய் தைக்கும் போது அந்த புல்லில் இருந்து வரும் கற்பூர வாசனை நமது மூக்குக்கு தெரியும் என்பது தான் இந்த பழமொழியின் அர்த்தம்”.இந்த கோரைப் புல் கொண்டு தைத்த பாயில் படுக்கும் போது இதில் இருந்து வரும் கற்பூர வாசத்திற்கு தேள், பூரான் மற்றும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் நெருங்காது. அதனால் தான் அந்த காலத்தில் கோரைப் புல்லில் செய்த பாயை பயன்படுத்தினார்கள்.
அந்த நேரத்தில் தான் பெரியவர்கள் “கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்“ என்று சொன்னார்கள். இந்த வார்த்தை நாளடைவில் மாறி கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்கிறோம்.
இந்த அழகான பழமொழியை யாரோ ஒருவர் தவறாக உச்சரித்த தன் விளைவாக இதை மாற்றி சொல்கிறோம். இனி இந்த பழமொழியை நாம் சரியாக சொல்வோம்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |