மக்கும் குப்பை பெயர்கள் | மக்காத குப்பை பெயர்கள்

மக்கும் குப்பை மக்காத குப்பை | Makkum Kuppai Makkatha Kuppai

தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல. நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்த சுகாதாரம். அந்த வகையில் நம்மை சுற்றியிருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.

குப்பை என்பது மனிதர்கள் பயன்படுத்திய கழிவுகள் ஆகும். இவை மட்கும் குப்பை, மட்காத குப்பை என இரு வகைப்படும். அந்த காலத்தில் குப்பைக் குழிகள் இருந்தன. அதில் வீட்டுக் குப்பைகளைக் கொட்டி மட்கச் செய்வர். அது பயன்படும். இன்று நம் பயன்பாட்டில் குப்பை மேடுகள் தான் இருக்கின்றன. அதில் மக்காத குப்பைகளான நெகிழிகளே அதிகம். இவை காற்றில் பறந்து எங்கும் பரவி இடத்தை அசுத்தமாக்கி மண்ணையும் மாசுபடுத்துகிறது. கால்வாய்களில் விழுந்து சாக்கடைகளாக்கி கொசு உற்பத்தியை அதிகரிக்கிறது. குப்பை இன்று சர்வதேசப் பிரச்சனையாக உள்ளது. சரி இந்த பதிவில் மக்கும் குப்பை மக்காத குப்பை என்றால் என்ன? அவை யாவை என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

What is Biodegradable Waste and Non Biodegradable Waste in Tamil

மக்கும் குப்பை பெயர்கள்:

biodegradable waste

நாம் தினம் பயன்படுத்தும் காய்கறி வகைகள், பழங்கள், மற்றும் எல்லா விதமான உணவுப் பொருட்களின் கழிவுகள் (அதாவது சாப்பிட்டபின் மீந்து போகக் கூடிய உணவு வகைகள்) இலைகள், தேங்காய் நாறு, சிரட்டை ஓடுகள், அசுத்தமான காகிதங்கள் – சுருக்கமாகச் சொன்னால் எவையெல்லாம் மண்ணில் போட்டவுடன் மக்கிப்போய், மண்ணோடு மண்ணாகி விடுமோ அந்தப் பொருட்கள் எல்லாமே மக்கும் குப்பைகள்.

இத்தகைய குப்பைகளை நாம் நம் வீட்டிலேயே மக்க வைத்து உங்கள் வீட்டு செடிகளுக்கு இயற்கை உரமாக பயன்படுத்தலாம் அல்லது இந்த மக்கும் குப்பைகளை நாம் தனியாகப் பிரித்துக் கொடுப்பதால், அரசு நிறுவனங்கள் இவற்றை இயற்கை உரமாகத் தயாரிக்கிறார்கள் நம்முடைய இந்த சிறு முயற்சியால், நமது கிராமத்திலுள்ள வயலுக்கோ, தோட்டத்திற்கோ செயற்கை உரம் வாங்க வேண்டிய செலவே இல்லை. நமது கிராமத்திலேயே தயாரான நல்ல தரமான இயற்கை உரம் இலவசமாகக் கிடைத்து விடுகிறது. இயற்கை உரங்கள் இடுவதால், விளைச்சல் நல்ல பலன் தருகிறது. இயற்கை உரத்தில் விளைந்த உணவுப் பொருட்களால் நமது உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது.

மக்காத குப்பை பெயர்கள்: 

biodegradable waste

எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருட்கள், – பொம்மைகள், டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள், அட்டை டப்பாக்கள், கேரிபேக்ஸ், பால் கவர் (கழுவிய பின்) பேப்பர்கள் முதலானவை மக்காத குப்பைகள் ஆகும். இந்தக் குப்பைகளில் உள்ள அத்தனைப் பொருட்களும் மறு சுழற்சி என்னும் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே அரசு நிறுவனங்கள் இவற்றை விற்று அவற்றில் வரும் பணத்தை பொதுமக்களுக்கு நல்லது செய்வார்கள்.

மூன்றாவது வகைகள்:

கழிக்கும் மின்சார ஒயர்கள், பல்புகள், எலக்ட்ரானிக் சாதனங்கள் – 3 வது வகையாகும்.

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil