உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா..! அப்போ அதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

Mango Tree Uses in Tamil

வணக்கம் நண்பர்களே..! நாம் அனைவருக்கும் மாம்பழம் என்றால் பிடிக்கும். அந்த மாம்பழத்தின் சுவையும் மற்றும் அதன் நிறமும் அனைவரையும் கவரக்கூடியதக இருக்கும். இத்தனை சிறப்பு கொண்ட மாம்பழம் மரத்தின் நன்மைகள் என்ன என்பதை இன்றைய பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகிறோம். எல்லோரும் மாம்பழத்தை பற்றி மட்டுமே பெரிதாக நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் மாம்பழத்தை தாண்டியும் அந்த மரத்தில் நமக்கு தெரியாத எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. சரி வாங்க நண்பர்களே மாம்பழ மரத்தில் அப்படி என்ன தான் நன்மை இருக்கிறது என்பதை பதிவை படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ பனை மரத்தின் பயன்கள் | Palm Tree Uses in Tamil

மாமரம்:

மாமரம் 15 முதல் 35 செ.மீ வரை நீளமும் மற்றும் 6 முதல் 16 செ.மீ வரை அகலமும் கொண்டு மிகவும் உயரமாக நிறைய இலைகளுடன் காணப்படும். இந்த மாமரத்தில் ஒட்டு மாம்பழம் மற்றும் குண்டு மாம்பழம் என்று இரண்டு வகையான காய்கள் காய்கின்றன.

இந்த மாமரத்தை நீங்கள் அனைத்து இடங்களிலும் பயிர் செய்யலாம். டிசம்பர் மாதத்தில் மாமரத்தில் பூக்கள் வைத்து மே மாதத்தில் காய் காய்கிறது.

முதல் முதலில் இந்த மாமரம் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, வங்காளம் ஆகிய நாடுகளில் முதல் முதலில் பயிர் செய்யப்பட்டது. அதன் பிறகு அனைத்து நாடுகளிலும்  பயிர் செய்ய ஆரம்பித்தன.

மாமரத்தின் பயன்கள்:

மாமரத்தில் உள்ள பூ, காய், கனி மற்றும் மரப்பட்டை ஆகிய அனைத்திலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன.

இந்த மாமரம் அதிகளவு ஆக்சிஜனை வெளியிடுகிறது. அத்தகைய மாமரம் வீட்டிற்கு அருகில் இருந்தால் மிகவும் நல்லது.

அதுபோல வீட்டு வாசலில் மா இலை தோரணம் கட்டுவதால் நமக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு நல்ல பலனை தருகிறது.

மா இலை:

மா இலை

மூச்சுத்திணறல் உள்ளவர்கள் மா இலை போட்ட டீயுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் மூச்சுத்திணறலில் இருந்து விடுபட முடியம்.

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஆகியவற்றைக்கு மா இலை நன்மையை தருகிறது.

சீறுநீரக கற்கள் , பித்தப்பை கற்கள் ஆகியவற்றையில் இருந்து விட பட மா இலை ஒரு மருந்தாக பயன்படுகிறது.

மாங்காய்:

மாங்காய்

மாங்காய் சளி, இருமல் மற்றும் உடல் வெப்பம் ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடும் போது விரைவில் அதிலிருந்து குணமடைய செய்கிறது.

பல் ஈரலில் ஏற்படும் இரத்த சோகை மற்றும் பசியின்மை ஆகியவற்றை ஏற்படாமல் தடுக்கும் பண்பு மாங்காயில் இருக்கிறது.

மாம்பழம்:

மாம்பழம்

 வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் ஆண்டி ஆக்ஸைடு போன்ற அனைத்து சத்துக்களும் மாம்பழத்தில் இருக்கிறது 

உடல் சோர்வை நீக்கி உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யும் நன்மை மாம்பழத்தில் இருக்கிறது.

உடல் எடை குறைவாக உள்ளவர்கள் தினமும் 2 மாம்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.

குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற அனைத்து நோய்களுக்கும் சிறந்த ஒரு நன்மையை மாம்பழம் தருகிறது.

மாம்பழத்தில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் உகந்தது.

முகத்தில் மாம்பழத்தை அப்ளை செய்தால் முகப்பரு, கருவளையம் மற்றும் வெயிலில் செல்லும் போது ஏற்படும் பிரச்சனை ஆகியவற்றை வராமல் தடுக்கிறது.

பனங்கற்கண்டு பயன்கள்
மரங்கள் மற்றும் அதன் பயன்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com