மனு எழுதுவது எப்படி? | How to Write a Petition Letter in Tamil

How to Write a Petition Letter in Tamil

மனு எழுதும் முறை | Petition Format in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் மனு எப்படி எழுதுவது என்று பார்க்கலாம். நம்முடைய கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவிப்பதற்கு மனு எழுதப்படுகிறது. நில அபகரிப்பு மனு, மாவட்ட ஆட்சியருக்கு, காவல் துறைக்கு, முதலமைச்சருக்கு என மனு எழுதுகிறோம். நாம் இந்த தொகுப்பில் மனு எப்படி எழுத வேண்டும் என்றும், அதற்கான உதாரணத்தையும் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Manu Format in Tamil – மனு எழுதுவது எப்படி?

  • எந்த ஒரு மனுவாக இருந்தாலும் அதில் அனுப்புநர், பெறுநர், பொருள் இருக்க வேண்டும்.
  • அனுப்புநர் என்பதில் உங்கள் பெயர், உங்கள் முகவரி இருக்க வேண்டும்.
  • பெறுநர் என்பதில் மனு யாருக்கு அனுப்புகிறீர்களோ அவர்களின் பெயர்/ பதவி மற்றும் முகவரி இருக்க வேண்டும்.
  • பொருளில் எதற்காக நீங்கள் மனு கொடுக்கிறீர்களோ அதை பற்றி சுருக்கமாக எழுத வேண்டும். அதன் பின் எதற்காக மனு எழுதுகிறீர்களோ அதை பற்றி விரிவாக விளக்க வேண்டும். பொருள் எழுதும் போது 1,2,3.. point போட்டு சொல்வது நல்லது.
  • மனுவின் இடது பக்கம் மூலையில் நாள், இடம் இருக்க வேண்டும். ஏதேனும் ஆவணங்கள் இணைக்கப்படுவதாக இருந்தால் அதையும் இணைக்க வேண்டும். மனுவை எப்பொழுதும் பணிவாகவே எழுத வேண்டும்.
  • இறுதியாக உங்கள் பெயர் அல்லது கையெழுத்து இருக்க வேண்டும்.
  • உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்ட மனுவை பார்க்கவும்.
முதலமைச்சர் தனிப்பிரிவு மாதிரி மனு

இலவச பட்ட வழங்க கோரி மனு (Manu Letter Format in Tamil)

அனுப்புநர்: 

தங்கள் பெயர்

தங்கள் முகவரி

பெறுநர்:

உயர்திரு, மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

முகவரி

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: இலவச பட்ட வழங்க கோரி மனு

  • வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். வறுமை கோட்டிற்கு கீழே உள்ள நானும், என் குடும்பத்தாரும் மழைக்காலத்தில் ஏற்படும் சீற்றத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து இருப்பிடத்திற்கு வாடகை செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம்.
  • ஆதலால் சர்வே எண் (குறிப்பிடவும்) இருக்கும் அரசுக்கு சொந்தமான நிலத்தை வறுமை கோட்டிற்கு கீழே உள்ள என்னை போன்ற மக்களுக்கு தனி பட்டா வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டி கேட்டுகொள்கிறேன். நீங்கள் எடுக்கும் இந்த நடவடிக்கை மூலம் பல மக்களின் துன்பத்தை நீக்கி வாழ்வை வசந்தமாக்க முடியும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி

நாள்:—–

இடம்:—–

இணைக்கப்பட்ட ஆவணங்கள்

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

(உங்களின் பெயர்)/ (கையெப்பம்)

நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil