அம்மாவின் நகை மகனுக்கா.! மகளுக்கா.! யாருக்கு சொந்தம்.!

Advertisement

அம்மாவின் நகை மகனுக்கா மகளுக்கா

சொத்து என்று வரும் போது கூட பிறந்த அண்ணன் தம்பியாக இருந்தாலும் பகையாளியாக மாறிவிடுவார்கள். பொதுவாக சொத்து என்பது சிலருக்கு  பூர்வீகமாக இருக்கும். சிலருக்கு இதற்கு மாறாக சொந்தமாக சம்பாதித்து  சேர்த்து வைத்துள்ள சொத்தாகவும் இருக்கும். இத்தகைய சொத்தினை வாங்கி சேர்ப்பது ஒரு பெரிய கஷ்டம் என்றால் அதனை விட பெரிய கஷ்டம் அதை எல்லோருக்கும் பிரித்து கொடுப்பதில் தான் உள்ளது. இந்த சொத்தினை பிரிக்கும் போது வீட்டில் ஒரு பெரிய பிரச்சனை வெடிக்கும் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லமல் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி போன்றவர்களின் சொத்து யாருக்கு என்று இவர்கள் இறந்த பிறகு அந்த சொத்துக்களை எப்படி வாங்குவது என்ற பேச்சு தான் ஓடி கொண்டு இருக்கும். அதில் அம்மாவின் நகையை யார் உரிமையை கொண்டாட முடியும் என்று பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

அம்மாவின் நகை மகனுக்கா மகளுக்கா:

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே அம்மாவின் நகை மகளுக்கு என்று கருத்து உள்ளது. அப்பாவின் நகைகள் மகனுக்கு என்ற கருத்து உள்ளது. எந்த கருத்தாக  இருந்தாலும், அம்மாவின் நகைகளை யார் உரிமை கொள்ள முடியும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

 அம்மா நகை  பற்றி உயில் எழுதி வைத்திருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் உங்களுடைய தாய் யார் பேருக்கு எழுதி வைத்திருக்கிறீர்களோ அவர்களுக்கு தான் சேரும். அதுவே உயில் ஏதும் எழுதவில்லை என்றால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சமமாக கொடுக்க வேண்டும்.  
தொடர்புடைய பதிவுகள் 
அப்பா சொத்து மகனுக்கா.! மகளுக்கா.! யாருக்கு சொந்தம்
அம்மாவின் சொத்தை யார் உரிமை கொண்டாட முடியும்
பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி.?
தாத்தா சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா..! இல்லையா..!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement