60 வயதுக்கு பின் ஓய்வூதியம் சார்ந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

முதியோர் ஓய்வூதியம் சார்ந்த தகவல்கள்

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே. இன்று நம் பதிவில் 60 வயதுக்கு பின் வயதானவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியம் சார்ந்த தகவல்கள் பற்றி பார்க்கலாம். பிள்ளைகளால் கைவிடப்பட்டு உணவுக்கு வழியின்றி வாழும் முதியோர்களின் துயரத்தை போக்க அரசாங்கத்தால் கொண்டு வரபட்டது தான் முதியோர் ஓய்வூதியம். முதியோர் ஓய்வூதியம் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் காண்போம்.

இதையும் பாருங்கள் ⇒ விவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள்

முதியோர் ஓய்வூதியம் என்றால் என்ன:

1962 ஆம் ஆண்டு முதியோர் உதவித்தொகை திட்டம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் ஆதரவற்ற நிலையிலும் உண்ணும் உணவுக்கு வழியில்லாமலும் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு நிற்கும் முதியவர்களுக்கு உதவிடும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் தொடக்கத்தில் மாதம் 20 % முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அதுபோல இந்த பதிவில் 60 வயதுக்கு பின் முதியோர் ஓய்வூதியம் யாருக்கெல்லாம் கிடைக்கும் எப்படி பெறுவது பற்றிய தகவல்களை காண்போம்.

முதியவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசின் சார்பாக முதியோர் ஓய்வூதியம் பெறக்கூடிய திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் முதியோர் பாதுகாப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டம் எவ்வித வருமானமும் இல்லாதவர்களுக்கு பயன்பட்டு வருகிறது.

முதியோர் உதவித்தொகை பற்றிய தகவல்கள்:

  • இத்திட்டத்தின் கீழ் ஒருவர் 60 வயதை எட்டிய பின்னரே மாத ஓய்வூதியத்தை பெறுவார்.
  • முதியோர் உதவித்தொகை திட்டம் கணவன் இல்லாமல் இருக்கும் பெண்கள் மற்றும் பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்று துன்பத்தில் இருக்கும். அனைவருக்கும் பயன்படுகிறது.
  • அதுவே பயனாளர் இறந்தால் இந்த உதவித்தொகை குடும்ப ஓய்வூதியமாக மாற்றப்பட்டு பயனாளியின் துணைவருக்கு 50% ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த ஓய்வூதியம் பயனாளரின் துணைவருக்கு மட்டுமே கிடைக்கும்.
  • இத்திட்டம் முதியவர்களுக்கு மட்டுமின்றி நிலம் இருந்தும் விவசாயம் செய்யமுடியாமல் இருக்கும் விவசாயிகள் மற்றும் விதவைகள், ஊனமுற்றோர் போன்றவர்களுக்கும் இத்திட்டம் பயன்பட்டு வருகிறது.
  • இந்த உதவித்தொகை பெற 60 வயதுக்கு மேல் ஆதரவற்ற ஆண் மற்றும் பெண் இருவரும் தகுதியுடையவர் ஆவர்.
  • இந்த உதவித்தொகை பெறுபவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு இருக்கவேண்டும்.
  • முதியோர் உதவிதொகை பெறுபவர்கள் யாருடைய ஆதரவும், பாதுகாப்பும் இல்லாதவராக இருக்க வேண்டும்.
  • ஊனமுற்றோர்கள் மற்றும் கண்பார்வை இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு வயது வரம்பில்லாமல் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
  • 60 வயதிற்கு மேல் கணவன் மனைவி இருவரும் ஆதரவற்ற நிலையில் இருந்தால் அவர்கள் இருவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
  • இந்த முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் வசதியாக இருந்தால் முதியோர் உதவித்தொகை வழங்கப்படாது.
  • அதுபோல வங்கிகளில் நகைக்கடன் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் முதியோருக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்காது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement