ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? How to Apply Patta Transfer Online..!
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். முன்பெல்லாம் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேவையான ஆவணங்களை இணைத்து அலைந்து திரிந்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்து பெறுவதற்கும் குறைந்தது ஒரு வருடம் கூட ஆகிவிடும். ஆனால் இப்பொழுது தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் அனைத்து சான்றிதல்களையும் நாம் வீட்டில் இருந்தபடியே நாமே ஆன்லைன் மூலம் அப்ளை செய்து பெற்று கொள்ளலாம். அந்த வகையில் ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி (patta name transfer online in tamil) என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன? |
பட்டா பெயர் மாற்றம் செய்ய மூன்று வகையான விண்ணப்பங்கள் உள்ளன அவை:
- Patta Transfer
- Subdivision Patta Transfer
- Joint Patta Transfer
என மூன்று வகையான பிரிவுகள் இருக்கின்றன அவற்றில் தங்களுக்கு எந்த பிரிவில் விண்ணப்ப படிவம் தேவையோ அந்த விண்ணப்பத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Patta Transfer:-
Patta Transfer என்பது ஒரே சர்வே நம்பரில் நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து முழு நிலத்தை முழுமையாக தாங்களே வாங்கி உள்ளீர்கள் என்றால் அது Patta Transfer பதிவு பிரிவில் வரும்.
Subdivision Patta Transfer:-
Subdivision Patta Transfer என்பது ஒருவர் 3 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் 1 1/2 ஏக்கர் அல்லது 2 ஏக்கர் நிலத்தை தாங்கள் வாங்கியுள்ளீர்கள் என்றால் அது Subdivision Patta Transfer பதிவு பிரிவில் வரும்.
Joint Patta Transfer:-
Joint Patta Transfer என்பது இரண்டு மூன்று சர்வே நம்பரில் நிலம் வைத்திருப்பவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வாங்கி இருந்தால் அது Joint Patta Transfer பதிவு பிரிவில் வரும்.
இந்த மூன்று வகை விண்ணப்பங்களில் தாங்கள் Subdivision Patta Transfer-யில் பட்டா பெயர் மற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தாங்கள் செல்லான் (Challan) கட்ட வேண்டியதாக இருக்கும்.
ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:-
- ஆதார் கார்டு
- பத்திர நகல்
- கம்ப்யூட்டர் சிட்டா
- வில்லங்க சான்றிதழ்
- Subdivision Patta Transfer-யில் பட்டா பெயர் மற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான Challan போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
விண்ணப்ப கட்டணம்:-
ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்ய கட்டண தொகை 60 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த கட்டண தொகையை தாங்கள் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் தாங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் https://www.tn.gov.in/ இணையதள பயன்பாட்டின் மூலம் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..? |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |