வங்கியில் கடன் பெறுவது எப்படி?
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் உதவிடும் வகையில் தனி நபர் கடன் பெறுவது எப்படி என்பதை இந்த பதிவின் வாயிலாக பார்ப்போம். பொதுவாக நாம் கடன் வாங்கினால் எங்கு வாங்குவோம். ஒன்று குழு இன்னொன்று பைனாஸ். இது தவிர நமக்கு பண தேவை ஏற்பட்டவுடன் உடனே வீட்டில் இருக்கும் நகையை அடகு வைத்து நமக்கான தேவையை பூர்த்தி செய்துகொள்கிறோம். கடன் பெறுவதற்க்கு இன்னொரு வழி உள்ளது. அது வங்கி கடன், இதில் கடன் வாங்குவது மிகவும் கடினம் என்று நினைத்துவிட்டு கடன் வாங்குவதற்க்கு வங்கிக்கு செல்லாமல் வேறுவழியில் பணத்தை பெற்றுக்கொள்வார்கள். இனி வங்கியில் கடன் வாங்க என்ன தேவை, அதற்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதையும். இந்த பதின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
வங்கியில் கடன் பெறுவது எப்படி?
வங்கியில் வீட்டுக்கடன் சிறந்ததா, நகை கடன் சிறந்ததா என்பதை ஒப்பிட்டு பார்க்கும் போது தனி நபர் கடன் சிறந்து என்று சொல்லாம். அதற்கு காரணம் தனி நபர் கடன் வாங்குவதற்கு ஆதாரமாக நிறைய ஆவணங்கள் கேட்க மாட்டார்கள், மிகவும் எளிதாக கடன் பெறுவதற்கு தனி நபர் கடன் சிறந்தது.
தனிநபர் கடன் தகுதி:
வீட்டு கடன் வாங்குவதற்கு மனை பட்டா என நிறைய ஆவணங்கள் கேட்பார்கள் ஆனால் தனி நபர் கடனில் அந்த ஆவணங்கள் தேவைப்படாது. அதற்கு பதிலாக வங்கியில் கணக்கு வைத்திருந்தால் அதனுடைய கணக்கு அறிக்கை அதாவது Bank Statement , பணம் காட்டும் ரசீது மட்டும் போதுமானது, இதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால் சிபில் ஸ்கோர் இது மூன்றும் இருத்தாலே போதுமானது.
உடனடி கடன் வசதி:
- உங்களுடைய கணக்கு வழக்கில் சரியான சிபில் ஸ்கோர் இருக்கும் வகையில் உங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் முன் இருக்கிறது. அதிலும் வீட்டிலிருந்தபடியே
- தனி நபர் கடன் வாங்குவதற்கு நிறைய ஆப் கள் வந்துவிட்டது.
சிபில் ஸ்கோர்:
பொதுவாக வங்கியில் கடன் தேவை என்ற உடன் அவர்கள் உங்கள் கணக்கில் எவ்வளவு சிபில் ஸ்கோர் உள்ளது என்பதை தெரிந்துகொண்ட பின் தான் உங்களிடமிருந்து ஆவணங்களை வாங்குவார்கள். அப்படி என்றால் எவ்வளவு சிபில் ஸ்கோர் இருக்கவேண்டும் என்று கேட்பீர்கள் பொதுவாக தனி நபர் கடனுக்கு 750/- க்கு மேலாக இருக்கவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் உடனடியாக கடன் வழங்கப்படுகிறது. அதற்கு கீழ் சிபில் ஸ்கோர் உள்ளவர்களுக்கும் கடன் வழங்குவார்கள் ஆனால் அவர்களுக்கு வட்டி விகிதம் அதிகம்.
கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |