பெட்ரோல் பங்கில் இதெல்லாம் இலவசமா பயன்படுத்திக்கலாமா.! தெரியுமா உங்களுக்கு..

Advertisement

Petrol Bunk Free Service

இன்றைய கால கட்டத்தில் வீட்டில் 4 நபர்கள் இருக்கின்றார்கள் என்றால் நான்கு நபரிடமும் வண்டி அல்லது கார் இருக்கிறது. இதனை ஓட்டுவதற்கு முக்கியமாக தேவைப்படுவது பெட்ரோல் அல்லது டீசல். இதனை வாங்குவதற்கு பெட்ரோல் பங்கிற்கு தான் செல்லுவோம். அதில் சில விஷயங்களை நாம் இலவசமாக பெற்று கொள்ளலாம். அது என்னென்ன என்று இந்த முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

பெட்ரோல் பங்கில் என்னென்ன வசதிகளை இலவசமாக பெற்று கொள்ளலாம்:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

காற்று:

petrol pump free air in tamil

பெட்ரோல் பங்க் அனைத்திலும் உங்களின் வண்டி மற்றும் கார்களுக்கு இலவசமாக காற்றை நிரப்பி கொள்ளலாம். உங்களிடம் காற்றை நிரப்பியதற்கு கட்டணம் கேட்டல் தாராளமாக புகார் அளிக்கலாம்.

குடிக்கும் நீர்:

பெட்ரோல் பங்கில் குடிநீர் வசதி இருப்பது அவசியமானது. இதை பெட்ரோல் பங்கிற்கு வரும் அனைவரும் இலவசமாக பெற்று கொள்ளலாம்.

கழிவறை வசதி:

பெட்ரோல் பங்கில் கழிப்பறை காசத்தி இருக்க வேண்டும். இந்த கழிப்பறையை பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் போடும் போது ஏமாறாமல் இதை முதல்ல பாருங்க.!

அவசர தொலைபேசி வசதி:

உங்களுடைய போனில் ரிச்சார்ஜ் முடித்து விட்டது அனாலும் உங்களுக்கு அவசரமாக போன் பேச வேண்டும் என்றால் நீங்கள் பெட்ரோல் பங்கில் உள்ள இலவச தொலைபேசியை பயன்படுத்தி கொள்ளலாம்.

முதலுதவி பாக்ஸ்:

petrol pump first aid box in tamil

நீங்கள் வண்டியில் செல்லும் போது சிறியதாக அடிபட்டு இரத்தம் வருகிறது என்றால் மருத்துவமனைக்கு செல்ல பல கிலோ மீட்டர் செல்ல வேண்டுமென்றால் கள்வன் வேண்டாம். ஏனென்றால் பக்கத்தில் பெட்ரோல் பங்கிற்கு சென்றாலே முதலீடு பெட்டி இருக்கும் அதை பயன்படுத்தி முதலுதவிகளை செய்து கொள்ளலாம்.

பெட்ரோல் தரம்:

நீங்கள் வண்டிக்கு போடும் பெட்ரோலின் தரத்தில் சந்தேகம் உள்ளது என்றால் ஃபில்டர் பேப்பர் சோதனையை பெட்ரோல் பங்கில் கேட்டு பரிசோதனை செய்து கொள்ளலாம்.

பைக் வைத்திருப்பவர்கள் இனி பெட்ரோல் விலை பத்தி கவலைப்படாதீங்க இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement