பைக் வைத்திருப்பவர்கள் இனி பெட்ரோல் விலை பத்தி கவலைப்படாதீங்க இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க..!

How to Increase Bike Mileage in Tamil

பைக் மைலேஜ் அதிகரிக்க டிப்ஸ் | How to Increase Bike Mileage in Tamil

பொதுவாக பைக் அனைத்து இடங்களுக்கும் சென்று வருவதற்கு மிகவும் சுலபமாக மற்றும் வசதியாக இருக்கும். இதன் காரணமாகவே ஆண்களுக்கு பைக் மீது அதிக ஈர்ப்பு இருக்கும். நல்ல விலையில், அதிக மைலேஜ் தரக்கூடிய பைக்கை வாங்கினாலும் கூட சில வருடங்களிலேயே அந்த பைக்கின் மைலேஜ் குறைந்துவிடுகிறது. தங்கள் பைக் அதிக மைலேஜ் கொடுக்கவில்லை என்று வருத்தப்படுறீங்களா அப்படி என்றால் இன்று முதல் அந்த கவலையை விடுங்கள். உங்கள் பைக்கின் பைக்கின் மைலேஜை அதிகரிக்க எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள டிப்ஸை பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

How to Increase Bike Mileage in Tamil

டிப்ஸ்: 1

உங்கள் வண்டிக்கு அதிக மைலேஜ் வேண்டும் என்றால் பைக்கை ஓட்டுபோதோ அல்லது நிற்கும் போதோ அடிக்கடி Bike Clutch-ஐ பிடிப்பதை முற்றிலும் தவிர்க்கவும். இந்த Clutch-ஐ எப்போ பயன்படுத்த வேண்டுமோ அப்போ பயன்படுத்தினால் மட்டும் போதும். கிளட்ச் பொதுவாக கியரை போடும் போது கியரை எடுக்கும்போது மட்டும் தான் பயன்படும் அப்பொழுது மட்டும் பயன்படுத்துங்கள் இதன் மூலம் பெட்ரோலை சேமிக்க முடியும்.

டிப்ஸ்: 2

உங்கள் பைக்கில் உள்ள டயரில் காற்று சரியான அழுத்தத்தில் இருக்கிறதா என்பதை அடிக்கடி கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் பைக்கின் டயரில் காற்றழுத்தம் (ஏர் பிரஷர்) அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது உங்கள் பைக்கின் மைலேஜை நேரடியாக பாதிக்கும். ஆக முன் டயருக்கு எவ்வளவு காற்று இருக்க வேண்டும், பின் டயருக்கு எவ்வளவு காற்று இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வண்டியின் மைலேஜ் 5 முதல் 10 சதவீதம் உங்கள் வண்டியின் டயரியில் உள்ள காற்று தான் தீர்மானிக்கிறது ஆக உங்கள் வண்டி டயரை சரியான அழுத்தத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

டிப்ஸ்: 3

பைக் ஜெயின் எப்பொழுது சுத்தமாக இருக்க வேண்டும். அதாவது பைக் ஜெயினில் மண், தூசி முக்கியமாக துருப்பிடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். ஏன் சொல்றன் அப்படின்னா இந்த ஜெயின் தான் உங்கள் வண்டியின் வீலை சுற்றுவதற்கு பயன்படுகிறது, இந்த வீல் சுற்றுவதற்கான பவர் இன்ஜினில் இருந்து தான் கிடைக்கிறது ஆக பைக்கில் உள்ள ஜெயின் தூசி, மண் மற்றும் துருப்பிடித்து இருந்தால் கண்டிப்பாக உங்கள் வண்டியின் மைலேஜ் தான் அடிவாங்கும். ஆக வண்டியின் ஜெயினையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

டிப்ஸ்: 4

குறிப்பாக வண்டி ஓட்டும் போது தேவையே இல்லாமல் வண்டியின் கியரை போட்டு முருகுவதை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள். இதன் காரணமாக கூட உங்கள் வண்டியின் மைலேஜ் குறைந்துவிடும். நீங்கள் எந்த வேகத்தில் பைக்கை ஒட்டுகின்றிர்களோ அந்த அளவுக்கு மட்டும் கியரை பயன்படுத்துங்கள். 40-யில் வண்டி ஓட்டுரிங்க அப்படின்னா அந்த அளவிற்கு மட்டும் கியரை பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரிக்க முடியும்.

பைக் ஓட்டும் போது, ​​எந்த வேகத்தில், எந்த நேரத்தில் கியரை மாற்ற வேண்டும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாகவும் பைக்கின் மைலேஜ் பாதிக்கப்படுகிறது.

பைக்கை ஓட்டும் போது முதல் கியரை போட்டு குறைந்தது 100 மீட்டர் சென்ற பின்னரே கியரை மாற்ற வேண்டும். அதன் பிறகு, வேகத்திற்கு ஏற்ப கியரை மாற்றலாம். மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது முதல் கியரிலேயே இயக்குங்கள். இதனால், உங்கள் பைக்கின் மைலேஜ் அதிகரிக்கும்.

டிப்ஸ்: 5

பொதுவாக சரியான நேரத்தில் பைக்கை சர்வீஸ் செய்யவில்லை என்றால், பைக்கின் மைலேஜை அது பாதிக்கும். எனவே இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நல்ல மெக்கானிக்கைக் கொண்டு பைக்கை சர்வீஸ் செய்யுங்கள்.

டிப்ஸ்: 6

பைக் ஓட்டும் போது, சிக்னலில் ​​சிவப்பு விளக்கு எரியும் போதும், ​​சிலர் பைக்கின் இன்ஜினை off செய்ய மாட்டார்கள். இதனால் பைக்கின் இன்ஜின் வேலையின்றி நீண்ட நேரம் இயங்கும். ஆக அந்த நேரங்களில் off செய்வதன் மூலம். உங்கள் வண்டியில் உள்ள பெட்ரோலை சேமிக்க முடியும்.

டிப்ஸ்: 7

ஒரு பைக் அப்படின்னா இரண்டு பேர் மட்டுமே போகலாம். ஆனால் பலர் ஒரு பைக்கில் மூன்று அல்லது நான்கு நபர்களை அழைத்து சென்றால் கண்டிப்பாக அந்த பைக்கில் உள்ள மைலேஜ் தான் அதிக அளவு குறையும்.

டிப்ஸ்: 8

அதேபோல் ஆரம்பத்தில் இருந்து நீங்கள் எந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுறிங்களோ. அந்த பெட்ரோல் பங்கிலேயே தொடர்ந்து பெட்ரோல் போடுங்கள். அதனை விட்டுவிட்டு வெவ்வேறு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டிங்க அப்படின்னா அதுனால கூட உங்கள் வண்டியின் மைலேஜ் குறைந்துவிடும். ஒரே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டால் தான் உங்கள் வண்டிக்கு நல்லது.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil