பவர் பத்திரம் என்றால் என்ன ? அதன் முக்கிய தேவை என்ன?

Power of Attorney Meaning in Tamil

பவர் பத்திரம் பற்றிய தகவல் | Power of Attorney Meaning in Tamil

அன்பான சகோதர சகோதரிகளே பொதுநலம்.காம் மின் அன்பான வணக்கங்கள் இன்று இந்த பதிவில் பவர் பத்திரம் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பத்திரம் தெரியும் இது என்ன பவர் பத்திரம் என்று யோசிக்கிறீர்களா..? ஒரு சொத்துக்களுக்கு உரிமையாளராக இருக்கும் போது உங்களால் அந்த சொத்தினை சரியாக பராமரிக்க முடியாத போது அல்லது நீங்கள் சொத்துக்கள் இருக்கும் இடத்தை விட்டு வேறு ஒரு இடத்தில்  இருக்கிறீர்கள் என்றால். அப்போது உங்களின் சொத்துக்களை வேறு ஒருவர் பார்த்துக்கொள்வதற்கு அதிகார பூர்வமாக பராமரிப்பு செய்வதற்கு எழுதி தரும் பத்திரத்திற்கு பவர் பத்திரம் என்பார்கள் இது போன்ற பவர் பத்திரம் பற்றிய தகவல்களை தெளிவாக தெரிந்துகொள்வோம்..!

கடன் பத்திரம் எழுதுவது எப்படி?

பவர் பத்திரம் என்றால் என்ன:

  •  பவர் பத்திரம் என்றால் ஆங்கிலத்தில் பவர் ஆஃப் அட்டர்னி (Power of Attorney) என்று சொல்வார்கள் அது நாளடைவில் பவர் பத்திரமாக மாறிவிட்டது. இதற்கு தமிழில் அதிகார பத்திரம் என்று சொல்வார்கள். 
  • அதிகார பத்திரம் என்பது  ஒருவருடைய சொத்துகளை நம்முடையது என்று சொத்தின் உரிமையாளர் சொன்னாலும் அது மிகையாகாது. சொத்துக்கள் அனைத்தும் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் தான் சொத்தின் அதிகாரபூர்வ உரிமையாளர்.
  •  ஒருவருடைய சொத்தின் உரிமையை மட்டும் நமக்கு அளிப்பார் அதனை அதிகார பத்திரம் என்பார்கள். அதாவது சொத்துக்களின் உரிமை முழுவதும் யாருடைய பெயர்களில் உள்ளதோ? அவர்கள் அந்த சொத்தை பராமரிக்க முடியாத பொழுது சொத்துக்களின்  உரிமையை மட்டும் நமக்கு அளிப்பதை பத்திரமாக மாற்றி தருவது அதிகார பாத்திரம் ஆகும். 
  • இந்த பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டால் மட்டுமே அது செல்லுபடியாகும்.
  • இந்த பத்திரத்தை உருவாக்குபவரை அதாவது சொத்தின் உரிமையாளரை முதல்வர் என்று பெயர் ஆங்கிலத்தில் (Principal) என்று பெயர்.
  • சொத்துக்கள் உரிமையை பெறுபவரை முகவர் என்று சொல்வார்கள் ஆங்கிலத்தில் (agent) என்று பெயர்.

பொது அதிகார ஆவணம்:

  • அதிகார பத்திரத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அது பொது அதிகார ஆவணம் (General Power of Attorney Meaning in Tamil), சிறப்பு அதிகார ஆவணம் (Special Power of Attorney in Tamil) என இருவகைகளாக பிரிக்கலாம்.
வீடு வாடகை ஒப்பந்த பத்திரம் மாதிரி

பொது அதிகார ஆவணம் என்றால் என்ன:

  • சொத்தின் பெயரில் நடக்கும் எந்த நடைமுறையாக இருந்தாலும் அது முகவர் பெயரில் நடந்தாலும் அது நான் செய்ததாகத்தான் பொருள் ஆகும். என எழுதி கொடுத்து பதிய வைப்பது பொது அதிகார ஆவணம் ஆகும்.

சிறப்பு அதிகார ஆவணம்:

  • சொத்தின் முழு உரிமையை பெற முடியாது சொத்தின் பெயரில் உள்ள எதாவது ஒன்றின் பெயரில் அதாவது குறிப்பிட்ட ஒன்றுக்கு மட்டும் உரிமை தர கூடிய பத்திரம்  சிறப்பு பவர் பத்திரம் ஆகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil