Why We Use 108 As Emergency Number in Ambulance Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆம்புலன்ஸ் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். ஆபத்தில் இருக்கும் உயிர்களை சரியான நேரத்தில் அழைத்து சென்று உயிரை காக்கும் வாகனம் தான் ஆம்புலன்ஸ். மக்களின் பயன்பாட்டுக்காகத் தான் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதுபோல நம் நாட்டில் ஆம்புலன்ஸை ஏன் 108 என்று அழைக்கின்றோம். அதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அந்த வகையில் இது குறித்த சுவாரஸ்யமான தகவலை இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சாலைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் ஏன் உள்ளன..? காரணம் தெரியுமா..? |
ஆம்புலன்ஸிற்கு 108 என்று பெயர் வர காரணம் என்ன..?
அறிவியலின் அடிப்படையில்..,
ஆம்புலன்சிற்கு ஏன் 108 என்று பெயர் வந்தது என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். ஆனால் அதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது.
பூமத்திய ரேகையில் பூமியின் விட்டம் 7,926 மைல்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல சூரியனின் விட்டம் 108 மடங்கு அதாவது 865,000 மைல்கள் என்று சொல்லலாம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான சராசரி தூரம் 93,020,000 மைல்கள் ஆகும். இது சூரியனின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகமாக இருக்கிறது.
அதேபோல சந்திரனின் விட்டம் 2,180 மைல்கள் என்று சொல்லப்படுகிறது. பூமியிலிருந்து சந்திரனுக்கு இடையேயுள்ள சராசரி தூரம் 238,800 மைல்கள் ஆகும். மீண்டும், இது நிலாவின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகமாக இருக்கிறது.
இந்த கணக்கீட்டு முறைகளின் மூலம் 108 ஒரு சிறப்பு வாய்ந்த எண்ணாக பார்க்கப்படுகிறது. அதுபோல நமது வாழ்க்கையில் விண்மீன் மண்டலத்தில் இருக்கும் சூரியன், நிலா மற்றும் பூமி இவை அனைத்தும் உண்மையான ஆதாரமாக இருக்கிறது. இதன் காரணமாக தான் முக்கியமான நேரங்களில் உயிரை காக்கும் அவசர அழைப்பு எண்ணாக 108 தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உணர்வுகளின் அடிப்படையில்..,
மனித ஆன்மா 108 நிலைகளுக்கு உட்படுகிறது என்று நம்பப்படுகிறது. அதாவது, ஒரு மனிதனுக்கு மொத்தம் 108 உணர்வுகள் இருக்கிறது என்று சொல்லலாம்.
இதில் 36 உணர்வுகள் கடந்த காலத்துடன் தொடர்புடையதாகவும், 36 உணர்வுகள் நிகழ் காலத்துடன் தொடர்புடையதாகவும் அதேபோல 36 உணர்வுகள் எதிர் காலத்துடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது. இவை அனைத்தையும் ஓன்று சேர்த்து 108 உணர்வுகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதனையும் ஒரு காரணமாக வைத்து 108 அவசர அழைப்பு எண்ணாக பார்க்கப்படுகிறது என்றும் கூறலாம்.
ஆன்மீகத்தின் அடிப்படையில்..,
இந்து மதத்தில் 108 மாலைகளை கொண்ட மணிகளை தான் ஜெப மாலையாக பயன்படுத்துகின்றனர். இந்து மதம் மட்டுமின்றி மற்ற மதங்களிலும் ஜெப மாலையில் 108 மணிகள் தான் இருக்கின்றன. அந்த வகையில் மந்திரங்களை உச்சரிக்கும் போது 108 முறை தான் உச்சரிக்கிறார்கள். அதேபோல ஆயுர்வேதத்தில் 108 மர்ம புள்ளிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் 108 ஒரு புனிதமான எண்ணாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தான் 108 அவசர அழைப்பு எண்ணாக இருக்கிறது என்றும் சொல்லலாம்.
ஆம்புலன்ஸ் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 ஆம்புலன்ஸில் ஏன் ஆங்கில வார்த்தை தலைகீழாக எழுதிருக்கிறார்கள் அதற்கு காரணம் என்ன?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |