ரோஸ்மேரி பற்றிய தகவல் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Rosemary in Tamil

தினமும் நமது பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவல்களை அறிந்துகொண்டு வருகின்றோம். அந்தவகையில் இன்றும் நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் பல அழகு சாதன பொருட்களில் மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் நம்மால் பயன்படுத்தப்படும் ரோஸ்மேரி தாவரம் பற்றி தான் அறிந்துகொள்ள போகின்றோம். நாம் அனைவருக்குமே இதை பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் அதன் பிறப்பிடம், அது எந்த தாவர குடும்பத்தை சேர்ந்தது போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் ரோஸ்மேரி பற்றிய தகவல்களை முழுதாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ரோஸ்மேரி எண்ணெய் பயன்கள் 

Rosemary Plant Information in Tamil:

Benefits of rosemary in tamil

ரோஸ்மேரி என்பது தடித்த வாசம்மிகு பசுமை மாறா மற்றும் ஊசி போன்ற இலைகளைக் கொண்டு பல ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இது மிகப்பெரிய புதினா குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது ஆகும்.

இந்த புதினா குடும்பத்தில் மேலும் பல மூலிகைகளும் உள்ளன. இந்த ரோஸ்மேரி தாவரமானது வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இவை தோட்டங்களில் அழகுத் தாவரமாகப் வளர்க்கப்படுகிறது.

இதனை தவிர பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த தாவரமானது தண்ணீர் தேங்கக் கூடிய இடங்களில் வளருவதில்லை. இப்பயிர் வளர நல்ல நீரோட்ட வசதி இருக்க வேண்டும்.

Rosemary Information in Tamil:

Rosemary plant information in tamil

இந்த தாவரம் வளர மண்ணின் pH மதிப்பானது 7-7.8 வரை இருக்க வேண்டும். இதன் தண்டுகள் மேல்நோக்கியோ அல்லது சாய்வாகவோ 1.5 மீ  என்ற உயரத்திற்கு வளரக்கூடியவை.

சில சமயம் அரிதாக 2 மீ என்ற அளவிலும் வளரும். இதன் இலைகள் 2 – 4 செ.மீ. நீளத்திலும் 2 – 5 மி.மீ. அகலத்திலும் வளரக்கூடியது. மேலும் இவை பசுமைமாறாத இலைகள் ஆகும்.

இந்த இலைகளின் மேற்புறம் பச்சை நிறத்திலும் கீழ்புறம் கம்பளி போன்ற முடிகள் கொண்ட அடர் வெண்ணிறத்திலும் காணப்படுகிறது. இவற்றின் பூக்கள் வெண்மை, இளஞ்சிவப்பு, ஊதா, நீலம் போன்ற பல நிறங்களை கொண்டவையாக இருக்கும். மேலும் இது

பிறப்பிடம் மற்றும் வேறுபெயர்கள்:

இந்த ரோஸ்மேரி தாவரமானது மத்தியத் தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்டவை ஆகும். இந்த ரோஸ்மேரி என்னும் பெயரானது இலத்தீன் மொழிப் பெயரான ரோஸ்மாரினஸ் என்பதிலிருந்து உருவானது.

இதனை கடல் துளி என்றும் கூறுவார்கள். இதற்கு காரணம் இத்தாவரமானது பல இடங்களில் நீரை விடுத்துக் கடல் காற்றின் ஈரப்பதத்தையே உயிர்வாழ எடுத்துக் கொள்கிறது என்பதால் தான் இதனை கடல் துளி என்றும் கூறுவார்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> சோயா பீன்ஸ் பற்றி பலரும் அறியாத தகவல்

Benefits of Rosemary in Tamil:

Benefits of Rosemary Tamil

  1. இந்த ரோஸ்மேரியில் காணப்படும் கார்னோசிக் அமிலமானது அல்கெய்மர், லு கெரிக் போன்ற மூளை சம்மந்தப்பட்ட நரம்பியல் நோய்களைத் தடுக்கக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
  2. இதன் பொடி புற்றுநோய் ஊக்கிகளுக்கு எதிராக செயல்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
  3. இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயானது நுரையீரல் பிரச்சனைகளுக்கும்,சரும பிரச்சனைகளுக்கும், தலைமுடி பிரச்சனைகளுக்கும், நினைவு திறன் அதிகரிக்க மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement