போஸ்ட் ஆபீஸில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம்..! Post Office RPLI Scheme in Tamil..!

Advertisement

தபால் நிலையம் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம்..! Rural Postal Life Insurance Details in Tamil..!

Rural Postal Life Insurance Details in Tamil – LIC அதாவது life insurance corporation நிறுவனங்கள் போன்று தபால் துறைகளிலும் ஆயுள் காப்பீடு திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்ற காப்பீடு திட்டங்களை எல்லாம் விட குறைந்த பிரீமியமில் அதிக  காப்பீட்டை வழங்குகிறது.

Rural Postal Life Insurance (RPLI) ரூரல் போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் மற்றும் போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் என்ற பெயர்களில் நகரம் மற்றும் கிராமப்புறங்களி 6 வகையான ஆயூள் காப்பீட்டுத் திட்டங்களைத் அஞ்சல் நிலையங்கள் அளிக்கின்றன. அவற்றில் இன்று நாம் Rural Postal Life Insurance (RPLI) ரூரல் போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அஞ்சல் துறையின் PPF Scheme..! ரூ.1000 முதலீடு செய்தால் வட்டி ரூ.1,45,455/- கிடைக்கும்

அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் – Post Office RPLI Scheme in Tamil

Rural Postal Life Insurance (RPLI) / கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம்:

இந்த கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் கிராம மக்கள், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்காக 1995-ம் ஆண்டு இந்திய தபால் துறை  செயல்படுத்தப்பட்டது. இந்த காப்பீடு திட்டம் பொறுத்தவரை சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அஞ்சல் துறைகளில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:-

 • மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் அஞ்சல் துறையால் எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லாமல் சேவை நோக்கத்தோடு இந்த காப்பீடு திட்டமானது இயங்கி வருகிறது.
 • குறைந்த பிரீமியம் மற்றும் அதிக போனஸ்.
 • வருமான வரிச்சலுகை.
 • கடன் வசதி அளிக்கப்படுகிறது.
 • நாமினி மாற்றம் செய்யும் வசதி.
 • தனிநபர் காப்பீடு தொகையாக 10 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
 • முதல் பிரீமியம் செலுத்தி, விண்ணப்பம் முறையாக தலைமை தபால் நிலையம் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்தே ஆயுள் காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது.
 • தாங்கள் எந்த ஊரில் பாலிசி எடுத்திருந்தாலும் சரி, தாங்களோ அல்லது உங்களுக்கு பின் உள்ள குடும்பத்தினரோ எந்த ஒரு தபால் அலுவலகத்திலும், கடன், முதிர்வு தொகை, இறப்புக்கான பணம் இவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

6 வகையான கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் / Post Office RPLI Scheme in Tamil:-

 1. Whole Life Assurance (Gram Suraksha)
 2. Endowment Assurance (Gram Santosh)
 3. Convertible Whole Life Assurance (Gram Suvidha)
 4. Anticipated Endowment Assurance (Gram Sumangal)
 5. 10 Year RPLI (Gram Priya)
 6. Children Policy (Bal Jeevan Bima)

அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் – கடன் வசதி:-

குறித்த கால காப்பீடு அதாவது Endowment Assurance (Gram Santosh) திட்டத்தில் 3 ஆண்டுகள் கழித்து கடன் வாங்கி கொள்ளலாம்.

முழு ஆயுள் காப்பீடு அதாவது Whole Life Assurance (Gram Suraksha) திட்டத்தில் 4 ஆண்டு கழித்து கடன் வாங்கிக்கொள்ளலாம்.

சரி இந்த 6 Rural Postal Life Insurance (RPLI) திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க:-

Rural Postal Life Insurance Details in Tamil / postal life insurance in tamil

Rural Postal Life Insurance Details in Tamil

1. முழு ஆயுள் காப்பீடு (Whole Life Assurance (Gram Suraksha)):-

இந்த காப்பீடு திட்டம் பொறுத்தவரை வாழ்நாள் முழுவதும் காப்பீடு திட்டமாகும். 80 வயதில் முதிர்ச்சி பெரும் பாலிசி ஆகும். காப்பீட்டாளர்களின் மரணத்திற்கு பின் நியமிப்பாளர்களுக்கு அல்லது நியமிக்கப்பட்டவர்களுக்கு சட்ட வாரிசுகளுக்கு போனஸ் மற்றும் அதன் தொகை வழங்கப்படும்.

இந்த காப்பீடு திட்டத்தில் சேர நினைப்பவர்களுக்கான 19 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் வயது 55 வயதாகும். எனவே தாங்கள் 55 வயது வரை பிரீமியம் கட்ட வேண்டும்.

தாங்கள் காப்பீடு தொகையாக குறைந்தபட்சம் 10,000/– முதல், அதிகபட்ச காப்பீடு தொகையாக 10 லட்சம் வரை காப்பீடு செய்யலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்த காப்பீடு திட்டத்தில் கடன் உதவியும் பெற்று கொள்ளலாம். மூன்று வருடத்திற்கு பின் சரண்டர் செய்யும் வசதி உள்ளது.

இந்த காப்பீடு திட்டத்திற்கு தற்பொழுது அறிவிக்கப்பட்ட போனஸ் காப்பீடு ரூபாய் 1000-க்கு போனஸ் ரூ.65 வழங்கபடுகிறது.

இந்திய தபால் துறையின் டைம் டெபாசிட் திட்டம்..! 1 லட்சம் டெபாசிட்டுக்கு…

2. எண்டௌமென்ட் காப்பீடு – Endowment Assurance (Gram Santosh)

இத்திட்டத்தின் கீழ், முன்னரே தீர்மானிக்கப்பட்ட வயதை முதிர்ச்சியடையச் செய்யும் வரை அதாவது 35,40,45,50,55,58 மற்றும் 60 வயதை எட்டும் வரை,  உறுதிப்படுத்திய தொகை மற்றும் போனஸ் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

காப்பீட்டாளரின் எதிர்பாராத இறப்பு ஏற்பட்டால், வேட்பாளர் அல்லது சட்ட வாரிசு முழுமையான தொகை மற்றும் போனஸுடன் சேர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 19 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 55 ஆண்டுகள்.

குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000 மற்றும் அதிகபட்ச தொகை 10 லட்சம் வரை காப்பீடு செய்யலாம்.

மேலும் மூன்று ஆண்டு முடிந்த பிறகு இந்த காப்பீடு திட்டத்தில் கடன் வசதி உள்ளது மற்றும் மூன்று ஆண்டு முடிந்த பிறகு பாலிசி சரண்டர் செய்யலாம்.

இந்த காப்பீடு திட்டத்திற்கு தற்பொழுது அறிவிக்கப்பட்ட போனஸ் காப்பீடு ரூபாய் 1000-க்கு போனஸ் ரூ.50 வழங்கபடுகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement