சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் | Silapathikaram Madurai Kandam in Tamil
Silapathikaram Madurai Kandam in Tamil: பழமையான நூல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நூல் சிலப்பதிகாரம். இந்நூல் இளங்கோவடிகளால் எழுதப்பட்டது. இதில் புகார் காண்டம், மதுரை காண்டம் மற்றும் வஞ்சி காண்டம் என மூன்று காண்டங்களை உடையது. மூன்று காண்டங்களில் ஒன்றான மதுரை காண்டம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சிலப்பதிகாரம் மொத்தம் 30 காதைகளை உடையது. அதில் மதுரை காண்டத்தில் பதின்மூன்று காதைகள் உள்ளன. ஒவ்வொரு காதைகளிலும் உள்ள விளக்கத்தை நாம் கீழே விரிவாக பார்க்கலாம் வாங்க.
Silapathikaram Madurai Kandam – காதைகள்:
1. காடுகாண் காதை
2. வேட்டுவ வரி
3. புறஞ்சேரியிறுத்த காதை
4. ஊர்காண் காதை
5. அடைக்கலக் காதை
6. கொலைக்களக் காதை
7.ஆய்ச்சியர் குரவை
8. துன்ப மாலை
9. ஊர்சூழ் வரி
10. வழக்குரை காதை
11. வஞ்சின மாலை
12. அழற்படு காதை
சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம்
1.காடுகாண் காதை – மதுரை காண்டம்:
- கண்ணகி, கோவலன் மற்றும் கௌந்தியடிகள் மூவரும் தென்திசை நோக்கி செல்கின்றனர். நடந்து கொண்டிருக்கும் போது மாங்காட்டு மறையோனை பார்த்து ஊரின் இயல்புகளை அவன் மூலம் கேட்டு தெரிந்துகொண்டனர். கானுறை தெய்வம் அழகு பொருந்திய வசந்த மாலையின் வடிவில் தோன்றி கோவலன் மதுரைக்கு செல்வதை தடுக்கிறது.
- மாதவியின் காதலன் கோவலன் என்பதால் வசந்த மாலையின் சொல்லிற்கு மயங்குவான் என நம்பி கோவலனிடம் அழுது மாதவி உங்களுடைய பிழையான சொற்களை கேட்டு மயங்கினாள் என்றும் அவள் துயரில் வாடினால் என்றும் அந்த வசந்த மாலை கூறியது. கானுறை தெய்வம் ஒன்று இவ்வழியில் உள்ளது என கோவலனை இடையில் சந்தித்த மறையோன் அப்போதே கூறினான்.
- கோவலன் கூறிய மந்திரத்தால் கானுறை தெய்வம் நான் ஒரு யான் வனசாரிணி என்றும் உங்களை மயங்க வைப்பதற்காக இங்கு வந்தேன் என்றும், நான் இங்கு வந்ததை கண்ணகிக்கும், கௌந்தியடிகளுக்கும் சொல்ல வேண்டாம் என கூறி அந்த தெய்வம் அவ்விடத்தில் இருந்து மறைந்தது. பின் மூவரும் ஐயை கோயிலை சென்று அடைகின்றனர்.
2. வேட்டுவ வரி – சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம்:
- அதிக வெயில் தாக்கத்தினால் ஐயை கோயிலின் ஒரு புறத்தில் மூவரும் ஓய்வு எடுக்கின்றனர். அங்கு சாலினி தெய்வ வேடமிட்டு கண்ணகியின் வாழ்க்கை முறை பற்றி கூறுகின்றனர். பின் வேட்டுவர்கள் வேட்டுவ வரி பாட்டை பாடியும், ஆடியும் மகிழ்கின்றனர்.
3. புறஞ்சேரியிறுத்த காதை – Silapathikaram Madurai Kandam in Tamil:
- காலையில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பகலில் செல்லாமல் இரவில் தென்திசை நோக்கி நடக்கின்றனர். வழியில் கௌசிகன் மாதவி கொடுத்த ஓலையுடன் வருகிறான். அந்த ஓலையில் மாதவியின் பெற்றோர்கள் அருமணி இழந்த நாகம் போலும், உயிர் இழந்த யாக்கை போலும் துயரத்தில் இருப்பதையும், மாதவியின் துன்பத்தையும் கோவலன் உணர்கிறான்.
- மாதவியின் மேல் எந்த தவறும் இல்லையென அறிந்த கோவலன் அவ்வோலையை மாதவியின் பெற்றோரிடம் திரும்ப கொடுக்குமாறு கௌசிகனிடம் கொடுத்து புகார் காண்டத்திற்கு அனுப்பி வைக்கிறார். பின் அவ்வழியில் இருந்த பாணர்களுடன் யாழிசைக்கிறார். பாணர்களிடம் மதுரையின் தூரத்தை கேட்டறிகின்றனர்.
- மதுரைக்கு சென்று கொண்டிருக்கும் போது அங்குள்ள வைகை ஆறானது கண்ணகியின் துன்பத்தை அறிந்து வருந்துகிறது. பின் வீரம் பொருந்திய கொடியானது இவ்வூருக்கு சென்றால் துன்பம் நேரும் அதனால் செல்ல வேண்டாம் என்றும் மறித்து பறக்கிறது. மூவரும் அறம் பொருந்திய புறஞ்சேரி மூதுரையை கடந்து செல்கின்றனர்.
ஊர்காண் காதை – Madurai Kandam in Tamil:
- புறஞ்சேரிமூதுரையில் கண்ணகியும், கௌந்தியடிகளையும் தங்க வைத்து விட்டு, கோவலன் மட்டும் மதுரைக்கு சென்று அங்குள்ள அரச வீதி, செல்வர்கள், என்னென் கலையால் வீதி, அங்காடி தெரு, இரத்தின கடை தெரு, அறுவை வீதி, கூல வீதி. பொன் வீதி, மறையவர் வீதி போன்றவற்றை சுற்றி பார்த்து விட்டு அதன் சிறப்புகளையும் அறிந்து விட்டு கண்ணகி, கௌந்தியடிகள் இருக்கும் இடத்திற்கு கோவலன் வருவதை கூறுவது இந்த காதை.
5. அடைக்கலக் காதை – Silapathikaram Madurai Kandam:
- புறஞ்சேரிக்கு திரும்பிய கோவலன் சுற்றி பார்த்தவைகளை பற்றி கௌந்தியடிகளிடம் கூறுகிறான். தென்னகரான மதுரையில் நடந்தவற்றை கோவலன் கௌந்தியடிகளிடம் கூறவில்லை. அதனால் கௌந்தியடிகள் வருத்தமடைந்தார். அப்பொழுது மாடன் வந்து கோவலனின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.
- இரவு வருவதற்குள் மதுரைக்கு செல்லலாம் என கௌந்தியடிகள் மற்றும் மாடளனும் கூறுகின்றனர். கோவலன் சிந்திப்பதற்குள் அங்கு வந்த மாதுரி வீட்டுக்கு கண்ணகி செல்லுமாறு கூறுகிறார். பின் மாதுரியும் கண்ணகியை வீட்டுக்கு அழைத்து செல்ல கோவலனும் அவர்கள் பின்னே செல்கின்றான்.
6. கொலைக்களக் காதை – Silapathikaram Madurai Kandam:
- கோவலன் மற்றும் கண்ணகிக்கு வீட்டில் இடம் தந்து, சமைப்பதற்கு தேவையான பொருட்களையும் கொடுக்கிறாள் மாதுரி. கண்ணகி சமைத்து கோவலனுக்கு பரிமாறுகிறாள். கோவலன் கண்ணகியை பாராட்டி மற்றும் அவளுடைய இந்த நிலைக்கு நான் தான் காரணம் என கோவலன் வருந்துகிறான்.
- பின் கண்ணகியின் கால் சிலம்பை விற்பதற்காக மதுரைக்கு செல்வதாக கோவலன் கூறுகிறான். கடை வீதிக்கு செல்லும் போது கோவலனிற்கு பின் 100 கணக்கான பொற்கொல்லர்கள் அவனை பின் தொடர்ந்தனர்.
- அதில் அரண்மனை பொற்கொல்லன் ஒருவனிடம் கண்ணகியின் கால்சிலம்பை விற்று தருமாறு வேண்டினான். அப்பொற்கொல்லன் கோவலனை வீட்டில் அமர்த்திவிட்டு அரசனிடம் இந்த கால் சிலம்பை காண்பித்து வருவதாக கூறி சென்றான். அப்பொற்கொல்லனின் தவறான செய்தியால் கோவலன் கொல்லப்படுகிறான்.
7. ஆய்ச்சியர் குரவை – Madurai Kandam in Tamil:
- ஆயர் சேரியில் தவறான பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன பால் பாத்திரத்தில் இருந்து குறையவில்லை, ஏற்றின் கண்களில் இருந்து கண்ணீர் வருகின்றன, வெண்ணை உருகாமல் போகிறது, ஆண்களின் கழுத்தில் இருந்த மாலைகள் அறுந்து விழுகின்றன, ஆட்டுக்குட்டிகள் ஒரே இடத்தில் ஓடாமல் நிற்கின்றன இப்படி நடந்தால் தீமைகள் வருமென அஞ்சிய ஆயமகள் கடவுளான கண்ணனை வேண்டி குரவையர்கள் ஆடுகின்றனர்.
8. துன்ப மாலை – Silapathikaram Madurai Kandam:
- கண்ணகிக்கு நடக்கும் துன்பத்தை கூறுவதால் இக்காதைக்கு துன்ப மாலை என்று பெயர். குரவையர் ஆட்டத்தை முடித்துவிட்டு மாதுரி நீராட செல்கிறாள். கோவலன் இறந்த செய்தியை கேட்ட கண்ணகிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் புலம்புகிறாள். கண்ணகி காய்கதிர் செல்வனை உளுத்து கேட்கிறாள் என் கணவன் கள்வனா? அல்ல என்று, இவ்வூர் ஒரு பெரும் தீ சூழப்போகிறது என்று ஓர் குரல் கேட்கிறது.
9. ஊர்சூழ் வரி – Madurai Kandam in Tamil
- அக்குரல் மிகவும் சத்தமாக ஒலிக்கிறது. பின் கண்ணகி தன்னிடமிருந்த இன்னொரு சிலம்பை எடுத்துக்கொண்டு கோவலன் உடலை காண செல்கிறாள். கோவலனின் உடலை பார்த்து கண்ணகி கண்ணீர் மல்க அழுது புலம்புகிறாள். கோவலனை தன்னிடம் பேசு என புலம்புகிறாள். பின் தனது துயரத்தை அடக்கி கொண்டு ஆவேசமாக காளி தெய்வம் போல அரசவைக்கு செல்கிறாள்.
10. வழக்குரை காதை – மதுரை காண்டம்:
- அரசவைக்கு சென்று தனது நீதியை எடுத்துரைத்து அரசனையே நிலை குலைய செய்கிறாள். தன் கணவன் கள்வன் அல்ல என்பதை ஊரில் உள்ளவர்களுக்கும் நிரூபிக்க முயற்சிக்கிறாள்.
- பின் வாயிற்காவலன் கண்ணகியை அரசனிடம் அழைத்து செல்கிறான். அரசன் கண்ணகியை பார்த்து கண்ணீருடன் இங்கு நிற்கும் பெண்ணே நீ யார்? என கேட்கிறான். கண்ணகி அரசனிடம் உண்மை எது என அறியாமல் நீதி கூறிய மன்னனே உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என ஆரம்பித்து பேச தொடங்கினாள். புறாவின் துயரத்தை நீக்கியவன் சிபி மன்னன், பசுவின் துயரத்தை நீக்கியவன் மனுநீதி சோழன் வாழ்ந்த புகார் நகரமே எனது ஊர் என்றும், மாசத்துவனின் மகனை கணவனாக கொண்டவள் பொருள் சேர்க்கைக்காக மதுரையை அடைந்து கால் சிலம்பை விற்பதற்காக வந்து உன் தவறான நீதியால் கொலை செய்யப்பட்ட கோவலனின் மணைவி கண்ணகி என் பெயர் என கூறுகிறாள்.
- கள்வனை கொள்வது தவறல்ல அரச நீதியாகும் என்கிறான் மன்னன். நீதி தவறிய மன்னனே என்னுடைய கால் சிலம்புகள் அனைத்தும் மாணிக்கப் பரல்கள் ஆகும்.
- மன்னன் அதற்கு நீ கூறியது சரிதான் என்னுடைய சிலம்பு முத்துக்களால் ஆனது என்று கூறுகிறான். பின் கோவலனிடம் இருந்து கைப்பற்றிய கால் சிலம்பை கண்ணகி முன் வைக்கின்றனர். கண்ணகி அச்சிலம்பை ஓங்கி உடைக்கிறாள். அதில் இருந்த மாணிக்க பரல்களில் ஒன்று மன்னனின் முகத்தில் தெறித்து கீழே விழுந்தது.
- இதை பார்த்த மன்னன் பொற்கொல்லனின் செய்தியை கேட்டு நீதி தவறிய நானா அரசன், அறம் தவறாத மதுரை என்னால் நீதி தவறியது என்று கூறி மயங்கி அவ்விடத்தில் மன்னனுடைய உயிர் நீங்கிவிட்டது. அரசனின் மனைவி கணவனை இழந்த உங்களுக்கு எவ்வித ஆறுதலும் கூற முடியாது என்று கூறி மன்னன் காலில் விழுந்து அவளும் உயிர் விடுகிறாள்.
11. வஞ்சின மாலை – Madurai Kandam in Tamil
- அரசவையில் உயிர் நீத்த மன்னனின் செயலை கண்டு கண்ணகி இவ்வரசவை மட்டும் இன்றி மதுரையே தீயில் எரிய வேண்டும் என்று வஞ்சகம் கொண்டு கடவுளை வேண்டுகிறாள்.
12. அழற்படு காதை – மதுரை காண்டம்:
- கண்ணகி ஏவிய தீக்கடவுளின் விளைவாக மதுரை கொழுந்து விட்டு எரிகிறது. கண்ணகியின் கோவம் ஒரு தீக்குலம்பு போல சூடாக இருந்து கொண்டு வீதியில் நடந்து கொண்டும், நின்று கொண்டும் இருக்கிறாள். கற்புக்கரசியான கண்ணகியின் துன்பத்தை கண்டு மதுராபதி தெய்வம் அவள் முன் தோன்றுகிறது.
13.கட்டுரை காதை – Madurai Kandam in Tamil:
- மதுராபதி தெய்வம் கண்ணகி முன் தோன்றி கண்ணகியின் முன்பு இருந்த வாழ்க்கை முறையையும், கோவலனின் பழியையும் எடுத்துரைக்கிறது. கண்ணகி மதுரையை விட்டு சென்று தீச்செங்குன்று ஒன்றில் சேர்ந்து கணவனை சென்றடைகிறாள்.
சிலப்பதிகாரம் சிறப்புகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |