தமிழ் மன்னர்களின் பெயர்கள் | Tamil Kings Names

Tamil Kings Names

மன்னர்களின் சிறப்பு பெயர்கள் – Tamil Kings Names List

Tamil Kings Names:- வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் தமிழ் நாட்டை ஆண்ட மன்னர்களின் பெயர்கள் பட்டியலை பற்றி தெரிந்து கொள்வோம். வரலாற்று ரீதியாக தமிழ் நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் ஏராளமானோர். அவ்வாறு ஆட்சி செய்த மன்னர்களுக்கு சின்னம், பட்டப்பெயர், கொடிகள் என்று தனித்தனியாக அமைத்து நாட்டை ஆண்ட வரலாற்று சான்றுகளும் இருக்கிறது. அவ்வாறு தமிழ் நாட்டை ஆண்ட மன்னர்கள் பெயர்களை பற்றி தெரிந்து கொள்ள நம்மில் பலருக்கு ஆர்வம் இருக்கும். அப்படிபட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி இங்கு தமிழ் மன்னர்கள் பெயர்கள் பட்டியலை படித்தறியலாம் வாங்க.

Tamil Kings Name List in Tamil..!

பாண்டியர்:

பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவர் பாண்டியர் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சரி இப்பொழுது தமிழ் நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்களின் பெயர் பட்டியலை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

பாண்டிய மன்னர்களின் பெயர்கள் – pandya kings names in tamil

Tamil Kings Names List

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

பழங்கதை காலப் பாண்டியர்:-

சாரங்கத்துவசன் (குருசேத்திரப் போரில் பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட்டதாகச் சொல்லப்படும் ஒரு பாண்டியன்)
மலயத்துவசன் (மீனாட்சியின் தந்தை)
சோமசுந்தர பாண்டியன் (சிவனின் அவதாரமாகச் சொல்லப்படும் ஒரு பாண்டியன்)
உக்கிர பாண்டியன் (மீனாட்சியின் மகன் எனச் சொல்லப்படுபவன்)

சங்க காலப் பாண்டியர்கள் (கி.மு 3 நூற்றாண்டு – கி.பி 3 நூற்றாண்டு):-

கூன்பாண்டியன்
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (கண்ணகியின் கதையில் இந்த பெயர் வருகிறது)
பூதப்பாண்டியன்
முதுகுடுமிப் பெருவழுதி
நெடுஞ்செழியன் II
நன்மாறன்
நெடுஞ்செழியன் III
மாறன் வழுதி
கடலன் வழுதி
முற்றிய செழியன்
உக்கிரப் பெருவழுதி

முற்காலப் பாண்டியர்கள் (கி.பி 6 – 10 நூற்றாண்டுகள்):-

கடுங்கோன் (இடைக்காலம்)
மாறவர்மன் அவனி சூளாமணி
செழியன் சேந்தன்
அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன்
ரணதீரன்
அரசகேசரி பராங்குச மாறவர்மன் இராசசிங்கன்
பராந்தக நெடுஞ்சடையன்
இராசசிம்மன் II
வரகுணன் I
சீர்மாற சீர்வல்லபன்
வரகுண வர்மன்
பராந்தக வீரநாராயணன்
மூன்றாம் இராசசிம்மன்

பிற்காலப் பாண்டியர்கள் (10– 13 நூற்றாண்டுகள்):-

சுந்தர பாண்டியன் I
வீர பாண்டியன் I
வீர பாண்டியன் II
அமரபுசங்க தீவிரகோபன்
சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்
மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்
மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன்
சடாவர்மன் சோழ பாண்டியன்
சீர்வல்லப மணகுலச்சாலன் (1101–1124)
மாறவர்மன் சீவல்லபன் (1132–1161)
பராக்கிரம பாண்டியன் I (1161–1162)
குலசேகர பாண்டியன் III
வீர பாண்டியன் III
சடாவர்மன் சிறீவல்லபன் (1175–1180)
விக்கிரம பாண்டியன் (1180-1190)
முதலாம் சடையவர்மன் குலசேகரன் (1190–1216)
பராக்கிரம பாண்டியன் II (1212–1215)
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216–1238)
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1238–1240)
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1238–1251)
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251–1268)
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268–1308)
சுந்தர பாண்டியன் IV (1309–1327)
வீர பாண்டியன் IV (1309–1345)

தென்காசிப் பாண்டியர்கள் (கி.பி 15 – 17 நூற்றாண்டுகள்):-

15 ஆம் நூற்றாண்டில், பாண்டியர்கள் தங்களின் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்தனர், இதற்கு இசுலாமியர்களும், நாயக்கர்களும் படையெடுத்ததே மிக முக்கிய காரணம் ஆகும், இதன் காரணமாக பாண்டியர்கள் தெற்கில் பின்வாங்கி தங்கள் தலைநகரை திருநெல்வேலிக்கு மாற்றிக்கொண்டனர்.

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (1422–1463)
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1429–1473)
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் (1473–1506)
தேவன் குலசேகர பாண்டியன் (1479–1499)
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் (1534–1543)
பராக்கிரம குலசேகர பாண்டியன் (1543–1552)
நெல்வேலி மாறன் (1552–1564)
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் (1564–1604)
வரதுங்க பாண்டியன் (1588–1612)
வரகுணராம பாண்டியன் (1613–1618)
கொல்லங்கொண்டான்

 

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நன்றி வணக்கம்..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com