தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் என்ன தெரியுமா?

Advertisement

தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் | Thamirabarani Kilai Arugal

பொருநை அல்லது தன்பொருனை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இவ்வாறு நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து, வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் என்னென்ன என்பதை பற்றியும்.. தாமிரபரணி ஆற்றை பற்றிய மேலும் சில தகவல்களை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள்:

பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி ஆகியவை தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் ஆகும்.

தாமிரபரணி ஆறு எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது?

தாமிரபரணி நதியானது பொதிகை மலையில் தோன்றுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் தென் கிழக்குப் பகுதியில் துவங்கும் நதியானது, அதன் தலைவாசல் கிளைநதிகளான பேயாறு, உல்லாறு மற்றும் பாம்பாறு ஆகியவையுடன் இணைகிறது.

பின்னர் காரையார் உடன் கலக்கிறது. காரையார் நதியில் கலந்த பின் 140 அடி உயர பான தீர்த்த அருவி மூலம் விழுந்து காரையார் அணையை எட்டுகிறது. பின்னர் காரையாரில் இருந்து பாபநாசம் நோக்கி பாய்கிறது.

நதி பாபநாசத்தை அடையும் முன்னர் அதனுடன் சேர்வலார் நதி கலக்கிறது. பொதிகை மலையினூடே பாயும் ஆறானது கல்யாண தீர்த்தம் மற்றும் அகத்தியர் அருவி வழியாக பாபநாசம் வந்தடைகிறது.

பாபநாசத்தில் இருந்து, வரும் அருவி அம்பாசமுத்திரம் வழியாக கிழக்கு நோக்கிப் பாயகிறது. ஆலடியூர் கிராமத்தில், தாமிரபரணியுடன் அதன் கீழை நதியான மணிமுத்தாறு வந்து இணைகிறது.

பின்னர் திருப்புடைமருதூரில் கடனாநதி கலக்கிறது. பின்னர் தாமிரபரணி திருநெல்வேலி வழியே கிழக்கே பாய்கிறது. பாளையம்கோட்டையை தாண்டியதும் இதனுடன் சித்தாறு கலக்கிறது. பின்னர் தாமிரபரணி திருவைகுண்டத்தை எட்டுகிறது.

அங்கு ஒரு சிறிய நீர்த்தேக்கத்தில் சேர்ந்து பாசனத்திற்காக பயன்படுகிறது. பின்னர், தூத்துக்குடி மாவட்டத்தை எட்டுகிறது. இறுதியில் ஆத்தூர் தாண்டி புன்னைக்காயல் என்ற கிராமத்தில் வங்கக்கடலில் கலக்கிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement