வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? | Today History in Tamil

Updated On: July 26, 2025 9:33 AM
Follow Us:
வரலாற்றில் இன்று
---Advertisement---
Advertisement

வரலாற்றில் இன்று ஜூலை 26

Today History in Tamil:- வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர்.

சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

இந்திய வரலாற்றில் இன்று | இன்றைய நாளின் சிறப்பு என்ன | Varalatril indru today

ஜூலை 26 (July 26) கிரிகோரியன் ஆண்டின் 207 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 208 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 158 நாட்கள் உள்ளன.

  • இந்திய தேசிய வாக்காளர் தினம்
  • ரஷ்யா மாணவர் தினம்
  • நாடுகளின் அணி உருவாக்கப்பட்டது-1919
  • மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது-1755
  • இந்தியாவின் 18வது மாநிலமாக இமாச்சல பிரதேசம் ஏற்றுக் கொள்ளப்பட்டது-1971
  • அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது – 1908
  • இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பதவியேற்றார் – 2007

இன்றைய நாள் நிகழ்வுகள் ஜூலை 26- Today History in Tamil For Students:

  • 657 – அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர்.
  • 811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார்.
  • 1309 – ஏழாம் என்றி உரோமர்களின் மன்னராக ஐந்தாம் கிளெம்ண்ட் திருத்தந்தையால் ஏற்கப்பட்டார்.
  • 1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக முடிசூடினார்.
  • 1745 – ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது பெண்கள் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து, கில்ட்ஃபோர்டு நகரில் இடம்பெற்றது.
  • 1758 – புனித லாரன்சு வளைகுடாவை பிரித்தானியப் படையினர் பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.
  • 1788 – நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.
  • 1803 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
  • 1814 – சுவீடன்–நோர்வே போர் ஆரம்பமானது.
  • 1847 – லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகத்து 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
  • 1848 – கொழும்பு, பொரளையில் வரி விதிப்புக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை அடக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது.[1]
  • 1891 – தாகித்தி பிரான்சுடன் இணைந்தது.
  • 1892 – பிரித்தானியாவின் முதலாவது இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தாதாபாய் நௌரோஜி தேர்தெடுக்கப்பட்டார்.[2]
  • 1897 – பசுத்தூன் பக்கிரி சைதுல்லா தலைமையில் 10,000 வீரரகள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
  • 1899 – டொமினிக்கன் குடியரசின் 27-வது அரசுத்தலைவர் யூலிசசு இயூரோ படுகொலை செய்யப்பட்டார்.
  • 1936 – செருமனியும் இத்தாலியும் பிரான்சிஸ்கோ பிராங்கோவிற்கு ஆதரவாக எசுப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: பிரெஞ்சு இந்தோசீனாவை சப்பானியர் ஆக்கிரமித்ததை அடுத்து, அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து ஆகியன சப்பானியரின் அனைத்து சொத்துகளையும் முடக்கினர்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனைப் படைகள் மேற்கு உக்ரைனின் லிவீவ் நகரில் நுழைந்து அதனை நாட்சிகளிடம் இருந்து கைப்பற்றின. நகரின் 160.000 யூதர்களில் 300 பேர் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தனர்.
  • 1945 – ஐக்கிய இராச்சியத்தில் நடந்த பொதுத்தேர்தல்களில் தொழிற் கட்சி பெரும் வெற்றி பெற்றது. வின்ஸ்டன் சர்ச்சில் பதவி இழந்தார்.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினரைச் சரணடையக் கோரும் உடன்படிக்கையில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியன செருமனியில் பொட்சுடாம் நகரில் கையெழுத்திடப்பட்டன.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: இரோசிமாவில் போடப்படவிருந்த லிட்டில் பாய் அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிசு என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தினியான் தீவை அடைந்தது.
  • 1947 – பனிப்போர்: நடுவண் ஒற்று முகமையை அமைக்கும் சட்டமூலத்தில் அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கையெழுத்திட்டார்.
  • 1952 – எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் புவாத் மன்னன் ஆக்கப்பட்டான்.
  • 1953 – பனிப்போர்: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கியூபப் புரட்சி ஆரம்பமானது.
  • 1956 – சூயெசு நெருக்கடி: அஸ்வான் அணைக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.
  • 1957 – குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொசு அர்மாசு கொல்லப்பட்டார்.
  • 1957 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது..
  • 1963 – உலகின் முதலாவது புவி நிலைத் துணைக்கோள் சின்கோம் 2 அமெரிக்காவில் ஏவப்பட்டது.
  • 1963 – யுகோசுலாவியாவில் ஸ்கோப்ஜே நகரில் (இன்றைய மாக்கடோனியக் குடியரசு) நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
  • 1965 – மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
  • 1971 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 15 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
  • 1974 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
  • 1977 – கனடா, கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மொழி அதிகாரபூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 1993 – தென் கொரியாவில் மொக்போ வானூர்தி நிலையத்தில் தரையிறங்க முயன்ற ஏசியானா ஏர்லைன்சு விமானம் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 116 பேரில் 68 பேர் உயிரிழந்தனர்.
  • 1994 – எஸ்தோனியாவில் இருந்து உருசியப் ப் படைகளை வெளியேற்ற அரசுத்தலைவர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.
  • 1999 – கார்கில் போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
  • 2005 – டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.
  • 2005 – மும்பையில் 24 மணி நேரத்தில் பெய்த பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5,000 பேர் வரை உயிரிழந்தனர்.
  • 2008 – இந்தியாவின் அகமதாபாத் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர், 200 பேர் வரை காயமடைந்தனர்.
  • 2016 – சூரிய ஆற்றலில் இயங்கும் சோலார் இம்பல்சு-2 வானூர்தி புவியைச் சுற்றி வந்தது.

இன்றைய நாளில் பிறந்தவர்கள் ஜூலை 26:

  • 1822 – ராபர்ட் வில்லியம் தாம்சன், இசுக்கொட்லாந்துக் கண்டுபிடிப்பாளர் (இ. 1873)
  • 1842 – ஆல்பிரடு மார்ஷல், ஆங்கிலேய பொருளியலாளர் (இ. 1924)
  • 1856 – ஜார்ஜ் பெர்னாட் ஷா, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (இ. 1950)
  • 1875 – கார்ல் யுங்கு, சுவிட்சர்லாந்து உளவியலாளர், மருத்துவர் (இ. 1961)
  • 1878 – மு. இராகவையங்கார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1960)
  • 1911 – பி. ஆர். பந்துலு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1974)
  • 1919 – ஜேம்ஸ் லவ்லாக், ஆங்கிலேய உயிரியலாளர், வேதியியலாளர்
  • 1925 – சக்தி அ. பாலஐயா, இலங்கையின் மலையக எழுத்தாளர் (இ. 2013)
  • 1928 – இசுடான்லி குப்ரிக்கு, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1999)
  • 1933 – எட்மண்ட் ஃவெல்ப்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
  • 1933 – மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (இ. 2008)
  • 1939 – ஜோன் ஹவார்ட், ஆத்திரேலியாவின் 25வது பிரதமர்
  • 1941 – வாஸந்தி, தமிழக எழுத்தாளர்
  • 1955 – ஆசிஃப் அலி சர்தாரி, பாக்கித்தானின் 11வது அரசுத்தலைவர்
  • 1960 – சின்னி ஜெயந்த், தமிழ் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்
  • 1964 – சாண்ட்ரா புல்லக், அமெரிக்க நடிகை
  • 1967 – ஜேசன் ஸ்டேதம், ஆங்கிலேய நடிகர்
  • 1971 – மேரி ஆன் மோகன்ராஜ், இலங்கை-அமெரிக்க எழுத்தாளர்
  • 1973 – கேட் பெக்கின்சேல், ஆங்கிலேய நடிகை
  • 1983 – அபிராமி, இந்திய திரைப்பட நடிகை
  • 1989 – இவியான் சார்கோசு, வெனிசுவேலாவின் உலக அழகி
  • 1993 – எலிசபெத் கில்லீஸ், அமெரிக்க நடிகை

இன்றைய நாளில் இறந்தவர்கள் ஜூலை 26:

  • 432 – முதலாம் செலஸ்தீன் (திருத்தந்தை)
  • 1684 – எலினா கார்னரோ பிசுகோபியா, இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646)
  • 1934 – வின்சர் மெக்கே, அமெரிக்கத் தயாரிப்பாளர் (பி. 1871)
  • 1937 – கேர்டா டேரோ, செருமானிய புகைப்படக் கலைஞர் (பி. 1910)
  • 1952 – இவா பெரோன், அர்ச்செந்தீன நடிகை, அரசியல்வாதி (பி. 1919)
  • 1982 – க. சொர்ணலிங்கம், கலையரசு, ஈழத்தின் நாடகக் கலைஞர் (பி. 1889)
  • 2000 – யூ. ஆர். ஜீவரத்தினம், தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி (பி. 1927)
  • 2021 – ஜெயந்தி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1945)

இன்றைய நாள் சிறப்புகள்:

  • தேசிய கிளர்ச்சி நாள் (கியூபா)
  • விடுதலை நாள் (லைபீரியா, 1847)
  • விடுதலை நாள் (மாலைத்தீவுகள், 1965)
  • கார்கில் போர் வெற்றி நாள் (இந்தியா)
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now