உயிர் மெய் எழுத்துக்கள் | Uyir Mei Ezhuthukal

Uyir Mei Ezhuthukal

தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் | Tamil Uyir Mei Ezhuthukal

தமிழில் உள்ள இலக்கண நூல்களில் எழுத்து என்பது மொழியில் உள்ள ஒலிகளைக் குறிக்கவும், வரிவடிவத்தை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எழுத்துக்கள் தமிழ் நாட்டில் மட்டுமின்றி பல நாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நாம் இந்த பதிவில் உயிர் மெய் எழுத்துக்கள் என்றால் என்ன, உயிர் மெய் எழுத்துக்களின் வகைகள் யாவை? அதன் விளக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Uyir Mei Ezhuthukal

 • ஒரு மெய் எழுத்துடன் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கும் எழுத்து உயிர் மெய் எழுத்து எனப்படும். அதாவது 18 மெய் எழுத்துக்களும் 12 உயிர் எழுத்துகளும் சேர்ந்து பிறக்கும் எழுத்து உயிர் மெய் எழுத்துக்கள் ஆகும்.
 • இந்த எழுத்துக்களில் மெய் எழுத்துக்கள் முன்னும் உயிர் எழுத்துக்கள் பின்னும் வரும். மெய் எழுத்தும் உயிர் எழுத்தும் கலந்த ஒலி வடிவத்தை உயிர் மெய் எழுத்துக்கள் பெற்றுள்ளது.
 • உயிர் + மெய் = உயிர்மெய்

உயிர் மெய் எழுத்துக்கள் 216:

க்காகிகீகுகூகெகேகைகொகோகௌ
ங்ஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ச்சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ஞ்ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ட்டாடிடீடுடூடெடேடைடொடோடௌ
ண்ணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
த்தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ந்நாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ப்பாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ம்மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ய்யாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ராரிரீருரூரெரேரைரொரோரௌ
ல்லாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளாளிளீளுளூளேளொளைளொளோளௌ
ற்றாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ன்னானினீனுனூனெனேனைனொனோனௌ

உயிர் மெய் எழுத்து வகைகள்:

உயிர் மெய் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் அவை

 • உயிர்மெய்க் குறில்
 • உயிர்மெய் நெடில்

உயிர்மெய்க் குறில் – Uyir Mei Ezhuthukal:

மெய் எழுத்துக்களுடன் உயிர் குறில்கள் இணைந்து உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய்க் குறில் எழுத்து எனப்படும். இந்த எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும். இதில் மொத்தம் 18 மெய் 7 குறில் எழுத்துக்கள் உள்ளன.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

 1. க் + அ=க
 2. க் + இ=கி
 3. க் + உ=கு
 4. க் + எ=கெ
 5. க் + ஐ=கை
 6. க் +ஒ =கொ
 7. க் + ஔ=கௌ

உயிர்மெய் நெடில் – தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள்:

மெய் எழுத்துக்களுடன் உயிர் நெடில்கள் இணைந்து உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய்க் நெடில் எழுத்து எனப்படும். இந்த எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும். இதில் மொத்தம் 18 மெய் 5 நெடில் எழுத்துக்கள் உள்ளன.

 1. க் +ஆ=கா
 2. க் + ஈ = கீ
 3. க் + ஊ=கூ
 4. க் + ஏ=கே
 5. க் + ஓ=கோ

உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை? – Tamil Uyir Mei Ezhuthukal:

 • உயிர் எழுத்துக்கள் -12
 • மெய் எழுத்துக்கள் -18
 • உயிர்மெய் எழுத்துக்கள் – 12*18 = 216
தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil