வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி தெரியுமா..?

varisugal peyaril patta matruvathu eppadi in tamil

Varisugal Peyaril Patta Matruvathu Eppadi

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக அனைவரின் வீட்டிலும் இருக்க கூடிய பிரச்சனை என்றால் அது சொத்து பிரச்சனை தான்.

ஒரே வயிற்றில் பிறந்து, ஒன்றாக வளர்ந்து ஒற்றுமையாக இருந்தவர்கள் நாளடைவில் பிரிகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் சொத்து பிரச்சனை தான். அதுபோல தினமும் இந்த பதிவின் வாயிலாக சொத்துக்கள் மற்றும் நிலம், பட்டா போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் தெரியுமா

வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி..? 

நாம் இன்று வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றுவது அதாவது தந்தை அல்லது தாய் இறந்து விட்டால் அவர்களின் பெயரில் இருக்கும் பட்டாவை வாரிசுகளின் பெயரில் மாற்றுவது எப்படி என்பதையும் அப்படி மாற்றுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதையும் பற்றி இங்கு பார்க்கலாம்.

 தந்தை அல்லது தாய் இறந்து விட்டால் அவர்களின் பெயரில் இருக்கும் பட்டாவை வாரிசு சான்று வைத்து வாரிசுகளின் பெயரில் கூட்டு பட்டாவாக மாற்றி கொள்ளலாம். 

அதுபோல தந்தை அல்லது தாய் இறந்து விட்டால் அவர்களின் பெயரில் உள்ள பட்டாவை வைத்து பாகபிரிவினை செய்வதன் மூலம் வாரிசுகள் அவர்களின் பெயரில் தனி தனியாக பட்டா மாற்றி கொள்ளலாம். அதாவது வாரிசுகள் 2 நபர்களுக்கு மேல் இருந்தால் அவர்கள் தனி தனியாக பட்டா மாற்றி கொள்ளலாம்.

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா

தேவையான ஆவணம்:

ஒரு குடும்பத்தில் இருக்கும் தந்தை இறந்து விட்டால் அவர் பெயரில் உள்ள சொத்துகளை பட்டா மாற்றம் செய்வதற்கு, தந்தையின் பெயரில் உள்ள பட்டா,  தந்தையின் இறப்பு சான்று, வாரிசு சான்று மற்றும் தந்தையின் தாயும் இல்லையென்றால் அவரின் இறப்பு சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதுபோல வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையம் அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

பின் வாரிசு சான்றில் உள்ள நபர்களின் பெயர்களில் பட்டா வழங்கப்படும்.

தொடர்புடைய பதிவுகள் 
அப்பா சொத்து மகனுக்கா மகளுக்கா  யாருக்கு சொந்தம்
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்
பூர்வீக சொத்து என்றால் என்ன  பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil