நீங்கள் சாப்பிடும் பழங்கள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதற்கான காரணம் தெரியுமா …?

Advertisement

பழங்களின் நிறம்

பொதுவாக அனைத்து விதமான பழங்களிலும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அந்த பழங்களில் நிறைய வகைகளும் மற்றும் நிறைய வண்ணங்களும் இருக்கிறது. நம்மை பொறுத்தவரை பழங்களில் உள்ள சத்துக்கள் மட்டுமே தெரிந்து இருக்கும். ஆனால் அத்தகைய பழங்கள் வெவ்வேறு நிறங்களில் காணப்படுவதற்கான காரணமும் இருக்கிறது. பழங்களின் நிறத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள இன்றைய பதிவை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ இலைகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது காரணம் உங்களுக்கு தெரியுமா..?

பழங்களின் நிறத்திற்கான காரணங்கள்:

சிவப்பு நிற பழங்கள்:

சிவப்பு நிற பழங்கள்

தர்பூசணி, ஆப்பிள், செரிப்பழம், ஸ்டாபேரி மற்றும் மாதுளை இந்த அனைத்து பழங்களும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த பழங்கள் சிவப்பு நிறத்தில் தோற்றமளிப்பதற்கு லைகோப்பீன் அல்லது அந்தோசயனின்கள் என்ற தாவரம் காரணமாக இருக்கிறது.

சிவப்பு நிற பழங்களில் இருக்கும் லைகோப்பீன் தாவரமானது புற்றுநோயை எதிரிக்கும் தன்மை கொண்டது. அதுமட்டும் இல்லாமல் இதயம் சம்பந்தமான எந்த நோய்களையும் வராமல் தடுக்கிறது. 

இந்த பழங்களில் வைட்டமின் B3, வைட்டமின் B6, வைட்டமின் B12, பொட்டாசியம், புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து ஆகிய அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.

பச்சை நிற பழங்கள்:

பச்சை நிற பழங்கள்

பச்சை நிறத்தில் கொய்யாப்பழம், திராட்சை, பச்சை வாழைப்பழம், பேரிக்காய் மற்றும் சாத்துக்குடி போன்ற அனைத்து பழங்களும் இருக்கிறது.

இந்த பழங்கள் அனைத்தும் மேற்பகுதியில் பச்சை நிறத்தில் இருப்பதற்கு குளோரோபில் என்ற தாவரமே காரணமாகும்.

உடலின் ஆற்றலை அதிகரிக்க, கண் பார்வை சிறப்பாக இருக்க, இரத்த ஓட்டம் அதிகரிக்க மற்றும் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் செல்களை அழிக்கவும் பச்சை நிற பழங்கள் உதவுகிறது.

ஊதா நிற பழங்கள்:

ஊதா நிற பழங்கள்

நாவல் பழம், திராட்சை, புளு பெரி மற்றும் நீல நிற வாழைப்பழம் போன்ற அனைத்தும் ஊதா நிறத்தில் இருக்கின்றன. ஊதா நிறத்தில் உள்ள பழங்களில் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

இந்த பழங்கள் அனைத்தும் ஊதா நிறத்தில் இருப்பதற்கு அந்தோசயினின் என்ற தாவரமே காரணம் ஆகும்.

இந்த பழத்தை நாம் சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை, பக்கவாதம் மற்றும் இதயம் பலவீனம் போன்ற பிரச்சனைகளுக்கு பலனளிக்கிறது.

மஞ்சள் நிற பழங்கள்:

மஞ்சள் நிற பழங்கள்

வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை பழம், மாம்பழம், முந்திரி பழம், முலாம்பழம் மற்றும் பப்பாளி பழம் இந்த அனைத்தும் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. இந்த பழங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிப்பதற்கு கரோட்டினாய்டு என்ற தாவரம் காரணமாக சொல்லப்படுகிறது.

 ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் C, பொட்டாசியம், பிளவனாய்டுகள், பீட்டா கரோட்டின் போன்ற அனைத்து சத்துக்களும் மஞ்சள் நிறப்பழத்தில் நிறைந்து இருக்கிறது.  

இத்தகைய பழங்கள் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும் மற்றும் கண் பார்வை தெளிவாக தெரிவதற்கும் பயனளிக்கிறது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

 

Advertisement