மழை, வெயில் இரண்டிலும் செல்கிறோம் ஆனால் வெயிலில் சென்றால் மட்டும் மயக்கம் வருவதற்கு காரணம் என்ன

Advertisement

மயக்கம் வருவதற்கான காரணங்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக அனைவரும் மழைக்காலம் வெயில் காலத்தில் இரண்டிலும் வெளியில் செல்வோம் ஆனால் வெயில் காலத்தில் வெளியில் சென்றால் மட்டுமே மயக்கம் வருகிறது ஏன் தெரியுமா? அது ஏன் என்று யோசித்தது உண்டா?

What Causes Dizziness When Exposed to The Sun in Tamil:

வெயிலில் சென்றால் சாதாரணாகவே வியர்வை வருகிறது. அது எப்படி என்று தெரியுமா? சாதாரணமாக உடலில் வெப்ப நிலை 36.5 செல்ஸியஸ் முதல் 37.5 டிகிரி செல்ஸியஸ் வரை தான் உடலில் இருக்கும். இந்த வெப்ப நிலையை அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் வைத்துக்கொள்ள மூலையில் உள்ள hypothalamus உதவி செய்யும்.

இது என்ன செய்யும் என்றால் உடல் குறைவான வெப்ப நிலையில் இருக்கும் போது நமக்கு குளிரை கொடுத்து சதையை நடுக்க வைத்து அதன் மூலம் உடலை சரியான வெப்பநிலையிலும், அதேபோல் நம்முடைய உடல் எப்போது வெப்பம் அடைகிறதோ அப்போது வியர்வை வரவைத்து உடலை அதிகம் வெப்பம் அடையாமல் வைத்துக்கொள்ளவும். இதற்கு Thermoregulation என்று பெயர்.

தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 நிலநடுக்கம், சுனாமி வருவதை சில உயிரினங்கள் மட்டும் முன்கூட்டியே அறிகிறதே அது எப்படி தெரியுமா?

அதிக வியர்வை சுரப்பதால் உடலில் இரத்தம் மற்ற உடல் உறுப்புகளுக்கு போகாமல் தோள்களுக்கு அதிகம் இரத்தம் செல்லும். தோள்களுக்கு சென்ற இரத்தில் உள்ள நீர் வியர்வையாக மாறி ஆவியாக உடலை விட்டு செல்லும்.

இப்படி மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கு இரத்தம் அதிகம் போகாமல் இருப்பதால் தான் நமக்கு மயக்கம் வரும். அது உடலில் நீர் சத்தை குறைத்து விடும். இதற்கு Dehydration என்று பெயர்.

இது மாதிரித்தான் நம்முடைய உடலுக்கு எப்போது தேவையான தண்ணீர் கிடைக்கவில்லையோ அப்போது நம்முடைய இரத்தம் கேட்டியாக மாறிவிடும். எப்போது நம்முடைய உடல் 40 டிகிரி செல்சியஸ் அடைகிறதோ அப்போது தான் நமக்கு வாந்தி தலை சுற்றல், மயக்கம் ஏற்படும், இதற்கு Sun Stroke என்று பெயர்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பசிக்கும் போது ஏன் வயிறு கத்துகிறது தெரியுமா..?

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Interesting information 
Advertisement